Friday, 4 July 2014

கூடை மேலே கூடை வச்சு.. ரம்மி (2013)



கூடை மேலே கூடை வச்சு
படம் : ரம்மி (2013)
பாடியவர்கள் : வி.வி.. பிரசன்னா - வந்தனா ஸ்ரீனிவாசன் 
இசையமைப்பாளர் : டி.இமான் 
இயற்றியவர் : யுகபாரதி 

ஆ......ஆ.....
கூடை மேலே கூடை வச்சு கூடலூருப் போறவளே
உன் கூட கொஞ்சம் நானு வரேன் கூட்டிக்கிட்டுப் போனா என்ன
ஒத்தையிலே நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா
நீ  வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு  சொன்னாலேப் போவேன்டி சேதாரமா

கூடை மேலே கூடை வச்சு கூடலூருப் போறவள
நீ  கூட்டிக்கிட்டுப் போகச் சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
தூவத்தலைத் தேச்சு வச்சா துரு ஏறுமா?
நான் போறேனே சொல்லாம வாரேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா

சாதத்துள்ள கல்லுப் போல நெஞ்சுக்குள்ள நீ இருந்து
சரிக்காம சதி பண்ணுற

சீயக்காயை போல கண்ணில் சிக்கிக்கிட்ட போதும் கூட
உறுத்தாம உயிர் கொல்லுற

அதிகம் பேசாம அளந்து தான் பேசி
எதுக்கு சடைப் பின்னுற?

சல்லி வேர ஆணி வேரா ஆக்குற
சட்டைப் பூவ வாசமா மாத்துற

நீ போகாத ஊருக்கு பொய்யாக வழி சொல்லுரே       

கூடை மேலே கூடை வச்சு கூடலூரு போறவளே 

நீ  கூட்டிக்கிட்டுப் போகச் சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை

எங்க வேணா போயிக்க நீ என்னை விட்டுப் போயிடாம
இருந்தாலே அது போதுமே

தண்ணியதான் விட்டுப்புட்டு தாமரையும் போனதினா
தரை மேலே தலை சாயுமே

மறைஞ்சுப் போனாலும் மறந்துப்  போகாத
நெனைப்பு தான் சொந்தமே

பட்டை தீட்ட தீட்டத்  தான் தங்கமே
உன்னை பார்க்க பார்க்கத் தான் இன்பமே

நீ பார்க்காது போனாலே கிடையாது மறு ஜென்மமே

ஆ......ஆ.....

கூடை மேலே கூடை வச்சு கூடலூரு ஹ...கூடலூருப் போறவளே 

நீ  கூட்டிக்கிட்டுப் போகச் சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை

ஒத்தையிலே நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா

நான் போறேனே சொல்லாம வாரேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காமத் தாரேனே தாராளமா

ராரார......ராரார......ராரார......ராரார......ராரார......

Thursday, 3 July 2014

அன்பே அன்பே எல்லாம் அன்பே.. - இது கதிர்வேலன் காதல் (2014)



அன்பே அன்பே எல்லாம் அன்பே
படம் : இது கதிர்வேலன் காதல் (2014)
பாடியவர்கள் : ஹாரிஸ் ராகவேந்திரா - ஹரிணி
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
இயற்றியவர்  : தாமரை 

அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்பேன்
மழைக் காலம் கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்காலப் போர்வை கொண்டு வந்தேன்

ஓ…அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்பேன்
மழைக் காலம் கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்காலப் போர்வை கொண்டு வந்தேன்

என் மேஜை மீதுப் பூங்கொத்தை
என் மேஜை மீதுப் பூங்கொத்தை
வைத்தது நீ தானே..
நான் வானம் பார்க்க வழி செய்த
சாரலும் நீ தானே..
என் இதயம் மெல்ல சிதையில் தள்ள
நீ தான் நிலாவைக் காட்டித் தேற்றினாய்

அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்பேன்
மழைக் காலம் கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்காலப் போர்வை கொண்டு வந்தேன்

தூக்கம் கண்ணில் வரவில்லை
சொப்பனம் காண வழி இல்லை
எங்கோ பாடல் கேட்டாலும்
நெஞ்சில் உன் போல் தீ இல்லை

தூக்கம் கண்ணில் வரவில்லை
சொப்பனம் காண வழி இல்லை
எங்கோ பாடல் கேட்டாலும்
நெஞ்சில் உன் போல் தீ இல்லை

வழி தரும் கார்முகிலே..
நீ மிதந்திடும் மயில் இறகே..
இதம் தரும் இன்னிசையே..
நீ ஒலி தரும் இன்னிசையே..
இருப்பது ஓர் உயிரே..
அது உருகியே கரைகிறதே..
நினைவுகள் கொல்வதனால்
மனம் மறுபடி சருகிறதே..

ஓ அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்பேன்
மழைக் காலம் கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
பனிக்காலப் போர்வை கொண்டு வந்தேன்

ஒஹோ…ஹோ….

உன்னைப் பார்க்க கூடாது எனக் 
கண்ணை மூடிக் கொண்டாலும்,
கண்ணைப் பிரித்து நீ வந்தாய்..
இமைகளின் இடையில் நீ நின்றாய்
உன்னிடம் சொல்வதற்கு
என் கதை பல காத்திருக்கு..
இரு கண்களின் தந்திகளால்
அதைக் கடத்திட சொல் எதற்கு?
உடைகளின் நீதியினால்
இந்த உலகினை வென்றவள் நீ!
சிறு உதட்டினில் புன்னகையால்
என் இதயத்தில் நின்றவள் நீ!

ஓ..அன்பே அன்பே எல்லாம் அன்பே..

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே - பூவெல்லாம் கேட்டுப் பார் (1999)



சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே
படம்: பூவெல்லாம் கேட்டுப் பார் (1999)
பாடகர்கள் : ஹரிஹரன் -, சாதனா சர்கம் 
இசை : யுவன் ஷங்கர் ராஜா
இயற்றியவர் : பழனி பாரதி

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே
என்மீது காதல் வந்தது
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா?
நீ சொல்வாயா? நீ சொல்வாயா?

விழிகள் பார்த்துக் கொஞ்சம் வந்தது
விரல் சேர்த்துக் கொஞ்சம் வந்தது
முழுக் காதல் என்று வந்தது தெரியாதே!
அது தெரியாதே! அது தெரியாதே!

உன்மேல் நான் கொண்ட காதல்
என்மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாகச் சொல்வாயோ?

போடா பொல்லாதப் பையா 
நம்மேல் நாம் கொண்ட காதல்
அதை நீ இரண்டாகப் பார்ப்பாயா? 

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே
என்மீது காதல் வந்தது
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா?

உன் பேரைச் சொன்னாலே நான் திரும்பிப் பார்கிறேன்

உன் பேரை மட்டும் தான் நான் விரும்பிக் கேட்கிறேன்

இருவர் ஒருவராய்  இணைந்து விட்டோம் இரண்டு பெயர் ஏனடி

உனக்குள் நான் என்னைக் கழித்துவிட்டேன் உன்னையேக் கேளு நீ

அடி உன்னை நான் மறந்த வேளையில் உன் காதல் மாறுமா

விடி காலைத்  தாமரைப் பூவிது விண்மீனை பார்க்குமா

உன்மேல் நான் கொண்ட காதல்
என்மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ?

போடா பொல்லாதப் பையா 
நம்மேல் நாம் கொண்ட காதல்
அதை நீ இரண்டாக பார்ப்பாயா? 

பலகோடிப் பெண்களிலே எதற்கென்னைத் தேடினாய்

நான் தேடும் பெண்ணாக நீ தானேத் தோன்றினாய்

நரைக்  கூடும் நாட்களிலே என்னைக் கொஞ்சத் தோன்றுமா

அடி போடிக்  காதலிலே நரைக்  கூடத்  தோன்றுமா

உன் கண்ணில் உண்டான காதலிது மூடிவிடும் என்னமோ

என் நெஞ்சில் உண்டான காதல் இது நெஞ்சை விட்டு போகுமோ

உன்மேல் நான் கொண்ட காதல்
என்மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாகச் சொல்வாயோ?

போடா பொல்லாதப்  பையா 
நம்மேல் நாம் கொண்ட காதல்
அதை நீ இரண்டாக பார்ப்பாயா? 

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே
என்மீது காதல் வந்தது
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா?
நீ சொல்வாயா? நீ சொல்வாயா?

விழிகள் பார்த்துக் கொஞ்சம் வந்தது
விரல் சேர்த்துக் கொஞ்சம் வந்தது
முழுக்  காதல் என்று வந்தது தெரியாதே!
அது தெரியாதே! அது தெரியாதே!

Wednesday, 2 July 2014

திருமண மலர்கள் தருவாயா - பூவெல்லாம் உன் வாசம் (2001)



திருமண மலர்கள் தருவாயா
படம் : பூவெல்லாம் உன் வாசம் (2001)
பாடியவர் : சுவர்ணலதா
இசை : வித்யாஷாகர் 
பாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து 

திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்தப் பூச்செடியே
தினம் ஒரு கனியைத் தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே
பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை
திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்தப் பூச்செடியே
தினம் ஒரு கனியைத் தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

தாலி கொள்ளும் பெண்கள் தாயை நீங்கும் போது
கண்ணோடு குற்றாலம் காண்பதுண்டு
மாடி கொண்ட ஊஞ்சல் மடி மேல் கொஞ்சும் பூனை
சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு
அந்த நிலை இங்கே இல்லை அனுப்பி வைக்க வழியே இல்லை
அழுவதற்கு வாய்ப்பே இல்லை அது தான் தொல்லை
போனவுடன் கடிதம் போடு புதினாவும் கீரையும் சேரு
புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை
ஏன் என்றால் சுவர் தான் உண்டு தூரம் இல்லை
இப்படி ஓர் நல்லுறவு வாய்த்திடுமா
வீட்டுக்குள்ளே விண்மீன்கள் காய்த்திடுமா
திருமண மலர்கள் தருவாயா
தினம் ஒரு கனியைத் தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

கன்னம் கிள்ளும் மாமி காதைத் திருகும் மாமா
என் போல சொந்தங்கள் யார்க்கு உண்டு
மாதம் பத்து செல்ல மழலை பெற்றுக் கொள்ள
அம்மம்மா தாய் வீடு இரண்டு உண்டு
பாவாடை அவிழும் வயதில் கயிறு கட்டி விட்டவன் எவனோ
தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்
கொலுசுயிடும் ஓசை கேட்டே
மனசில் உள்ள பாஷை சொல்வாய்
மழை நின்ற மலரைப்  போலப் பதமானவன்
உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்
தெய்வங்களும் எங்களைத் தான் நேசிக்குமே
தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே
திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்தப் பூச்செடியே
தினம் ஒரு கனியைத் தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே
பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை

என்ன என்ன வார்த்தைகளோ - வெண்ணிற ஆடை (1965)



என்ன என்ன வார்த்தைகளோ
படம் : வெண்ணிற ஆடை (1965)
பாடியவர் : பி.சுசீலா
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல் : கவியரசு கண்ணதாசன்

என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
ஆஹா.ஹா.ஆஹா..ஹா.
ஆஹா.ஹா.ஆஹா..ஹா.
ஓஹோ..ஹோ..ஓஹோ..ஹோ..

உன்னைத்தான் கண்டு சிரித்தேன்
நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன்
உன்னைத்தான் கண்டு சிரித்தேன்
நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன்
என்னைத்தான் எண்ணி துடித்தேன்
எண்ணம் ஏனோ ஏனோ வளர்த்தேன்
பெண்மைப் பூவாகுமா இல்லை நாளாகுமா
இது தேனோடு பாலாகுமா
என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
ஆஹா.ஹா.ஆஹா..ஹா.
ஆஹா.ஹா.ஆஹா..ஹா.
ஓஹோ..ஹோ..ஓஹோ..ஹோ..

நிலவே உன்னை அறிவேன்
அங்கே நேரே ஓர் நாள் வருவேன்
நிலவே உன்னை அறிவேன்
அங்கே நேரே ஓர் நாள் வருவேன்
மலர்ந்தால் அங்கு மலர்வேன்
இல்லைப் பனி போல் நானும் மறைவேன்
இன்னும் நான் என்பதா
உன்னை நீ என்பதா
இல்லை நாம் என்று பேர் சொல்வதா
என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்
சொன்ன கதை புரியவில்லை


Tuesday, 1 July 2014

தீம்தனக்க தில்லானா - வில்லு (2010)



தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா
படம் : வில்லு (2010)
பாடியவர்கள் : தேவி ஸ்ரீ பிரசாத் - திவ்யா 
இயற்றியவர் : சிநேகன் 
இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்


தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா
தீத் தெறிக்கும் வில்லு நான் தானே

தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா
தீப்புடுச்ச நிலா நான் தானே

நான் ஒத்த கிஸ்சு தாரேன்
உன் ரத்த டெஸ்டப் பாரேன்
நூறு குதிர வேகத்தோட போட்டிப் போடுமே

நான் ஒத்த ஹார்ட்டு தாரேன் 
கிக்கு ஏறும் பாரேன்
மதம் பிடிச்ச யானை போல மாறுவே

ஏ கண்ணே நான் கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளின் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான் தானே

அத்தை நான் மேனகைக்கு அத்தை
வா கத்துத் தாரேன் வித்தை 
அந்த வித்தைக்கெல்லாம் பாஸ் நான்தானே
தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா
தீத் தெறிக்கும் வில்லு நான் தானே

வெட்டி வச்ச ஆப்பிள் போல உன் கன்னம் இருப்பதாலே
பாத்தாலே நாக்கெல்லாம் எச்சில் ஊறிப் போகுதே
பூட்டி வெச்ச புதையல் போல உன் ஒடம்பு இருப்பதாலே
திருடத்தான் என் நெஞ்சு திட்டம் தீட்டிப் பார்க்குதே

ஏ கத்தி கத்தி கத்தி உன் கண்ணு ரெண்டும் கத்தி
நேரம் காலம் பாக்காம வருதே என்னை சுத்தி
வெட்டி வெட்டி வெட்டி என் வெட்கத்த நீ வெட்டி
வேக வைக்க கேக்குறியே தீப்பெட்டி

ஏ கண்ணே நான் கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளின் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான் தானே

அத்தை நான் மேனகைக்கு அத்தை
வா கத்துத் தாரேன் வித்தை 
அந்த வித்தைக்கெல்லாம் பாஸ் நான்தானே 

தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா
தீத் தெறிக்கும் வில்லு நான் தானே

தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா
தீப்புடுச்ச நிலா நான் தானே

சஹாராவில் இளநீர்  போல 
சிரபுஞ்சி டீயைப் போல
எங்கேயும் எப்போதும் உன் தாகம் தீர்ப்பேனே

ப்ளூட்டோவில் வாட்டர் போல
என்னோட நெஞ்சுக்குள்ள
யாருக்கும் தெரியாமல் ஒளிஞ்சிருக்க நீ தானே

ராரா ராரா ராரா நீ அங்கம் நோக்கி ராரா
இன்பமான இம்சை பண்ணு ராத்திரி வீரா

ஏ வாடி வாடி வாடி நீ மீசை இல்லாக் கேடி
ஒக்கை சாரி சொர்க்கத்தை நீ பாரடி

ஏ கண்ணே நான் கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளின் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான் தானே

அத்தை நான் மேனகைக்கு அத்தை
வா கத்துத் தாரேன் வித்தை 
அந்த வித்தைக்கெல்லாம் பாஸ் நான்தானே

தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா
தீத் தெறிக்கும் வில்லு நான் தானே

தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா
தீப்புடுச்ச நிலா நான் தானே

மனசெல்லாம் மழையே.. - சகுனி (2012)



மனசெல்லாம் மழையே..
படம் : சகுனி (2013)
பாடியவர்கள் : சோனு நிகாம் - சைந்தவி 
இயற்றியவர் :  நா.முத்துகுமார்
இசையமைப்பாளர் : ஜி.வி.பிரகாஷ்குமார் 

மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....
என் கண்ணில் வந்து நின்று என்னைப் பறித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....!

இரவில் வந்தது சந்திரனா
என் அழகே வந்தது உன் முகம்தான்
வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே
உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா

பகலில் இருப்பது சூரியனா
என் அழகே உன் இரு பார்வைகள்தான்
உன் இமைகள் போரிடும் ஆயுதம் தான்
என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

வானில் போகும் பறவைகளாய் நீயும் நானும் திரிந்திடலாம்
உலகையே மறக்கலாம்

வேறு வேறு விண்வெளியில் மாறி மாறி திரிந்திடலாம்
பறக்கலாம் மிதக்கலாம்
காற்றாகி கைக் கோர்த்து போவோமே
முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

கனவில் வருவது சாத்தியமா
என் எதிரே நடப்பது மந்திரமா
நான் பார்க்கும் காட்சிகள் தந்திரமா
என் தேகம் எங்கும் நீந்தி போகுதோ

கனவில் வாழ்வது சாத்தியமே
என் கனவும் பலிப்பது நிச்சயமே
உன் விரலை பிடிப்பேன் இக்கணமே
உன் உருவம் எங்கும் இன்றும் வாழுமே

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே

காதலாகி கரைந்துவிட்டால் காலம் நேரம் மறந்திடுமே
வானிலை மாறுமே..
ஏழு வண்ண வானவில்லில் நூறு வண்ணம் தோன்றிடுமே
யாவுமே மாயமே..
வெயிலோடு மழை வந்து தூறுமே
முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்

தரையில் விண்மீன் வருவதில்லை
வந்தாலும் கண் அதை பார்ப்பதில்லை
பார்த்தாலும் கை அதை தொடுவதில்லை
தொட்டாலோ என்ன ஆகும் என் மனம்

தரையில் விண்மீன் வருவதுண்டு
வந்தாலும் கண் அதை பார்ப்பதுண்டு
பார்த்தாலும் கை அதை தொடுவதுண்டு
தொட்டாலோ காதல் ஆகும் உன் மனம்

மழையே மனம் உன்னாலே பூப் பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே