Sunday, 16 November 2014

நான் யார் யார் என்று சொல்லவில்லை.. - பட்டணத்தில் பூதம் (14.04.1967)



நான் யார் யார் என்று சொல்லவில்லை..
படம் : பட்டணத்தில் பூதம் (14.04.1967)
பாடியவர் : பி.சுசீலா 
இசை : ஆர்.கோவர்த்தனம் 
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
நடிப்பு : கே.ஆர்.விஜயா - ஜெய்சங்கர் - ஜாவர் சீத்தாராமன் 
இயக்கம் : எம்.வி.இராமன் 
தயாரிப்பு : சாரதா பிக்சர்ஸ் (டி.கோவிந்தராஜன்)
வெளியீடு : வீனஸ் பிக்சர்ஸ் மூலமாக 

நான் யார் யார் என்று சொல்லவில்லை.. 

நீ யார் யார் என்று கேட்கவில்லை.. 

நான் யார் யார் என்று சொல்லவில்லை.. 
நீ யார் யார் என்று கேட்கவில்லை.. 
நான் யார் யார் என்று சொல்லவில்லை.. 
நீ யார் யார் என்று கேட்கவில்லை.. 
ஒரு பாட்டிலும் இல்லை இந்நாட்டிலும் இல்லை.. 
பார் பார் கண்கள் இல்லையோ? ஓ. ஓ.. ஓ.. 

நான் யார் யார் என்று சொல்லவில்லை.. 
நீ யார் யார் என்று கேட்கவில்லை.. 

காவிரி சொல்லும் மாதவி பெண்ணும்.. 
காணாத அழகல்லவா? 

காவிரி சொல்லும் மாதவி பெண்ணும்.. 
காணாத அழகல்லவா? 
பாவலர் பாடும் ஜானகி பெண்ணும்.. 
பாராத முகமல்லவா? 

காவிரி சொல்லும் மாதவி பெண்ணும்.. 
காணாத அழகல்லவா? 
பாவலர் பாடும் ஜானகி பெண்ணும்.. 
பாராத முகமல்லவா? 

நேராக பார்த்தாலே மயக்கம் வரும். 
தீராத பேராசை தீர்ந்து விடும்.. 
நேராக பார்த்தாலே மயக்கம் வரும்.. 
தீராத பேராசை தீர்ந்து விடும்.. 
ஒரு பாட்டிலும் இல்லை இந்நாட்டிலும் இல்லை.. 
பார் பார் கண்கள் இல்லையோ? ஓ.. ஓ.. ஓ..

நான் யார் யார் என்று சொல்லவில்லை.. 
நீ யார் யார் என்று கேட்கவில்லை.. 

அழகிய கன்னி ஹெலன் முகம் எண்ணி.. 
ஆயிரம் போர்களிலே.. 
மறைந்தவர் மன்னர் அவர்களின் பின்னர்.. 
பிறந்தவன் நீயல்லவோ?

அழகிய கன்னி ஹெலன் முகம் எண்ணி.. 
ஆயிரம் போர்களிலே.. 
மறைந்தவர் மன்னர் அவர்களின் பின்னர்.. 
பிறந்தவன் நீயல்லவோ? 
போராடிப் பாராமல் கிடைக்காது.. 
தானாக வந்தாலும் சுவைக்காது.. 
போராடிப் பாராமல் கிடைக்காது.. 
தானாக வந்தாலும் சுவைக்காது.. 
ஒரு பாட்டிலும் இல்லை இந்நாட்டிலும் இல்லை.. 
பார் பார் கண்கள் இல்லையோ? ஓ.. ஓ.. ஓ.. 

நான் யார் யார் என்று சொல்லவில்லை.. 
நீ யார் யார் என்று கேட்கவில்லை.. 
நான் யார் யார் என்று சொல்லவில்லை.. 
நீ யார் யார் என்று கேட்கவில்லை.. 
ஒரு பாட்டிலும் இல்லை இந்நாட்டிலும் இல்லை.. 
பார் பார் கண்கள் இல்லையோ? 

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்.. (சோகம்) - கைதி கண்ணாயிரம் (01.12.1960)



கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்.. (சோகம்)
படம் : கைதி கண்ணாயிரம் (01.12.1960)
பாடியவர் : பி.சுசீலா
இசை : கே.வி.மகாதேவன் (உதவி புகழேந்தி)
இயற்றியவர் : அ.மருதகாசி 
நடிப்பு : இராஜசுலோச்சனா - மாஸ்டர் ஸ்ரீதர் - கே.ஏ.தங்கவேலு ஆர்.எஸ்.மனோகர்  மற்றும் பி.எஸ்.வீரப்பா
இயக்கம் : ஏ.எஸ்.ஏ.சாமி 
தயாரிப்பு : மாடர்ன் தியேட்டர்ஸ் (டி.ஆர்.சுந்தரம்)
(இப்படம் ஹிந்தியில் புகழ் பெற்ற "கைதி எண் 911" என்ற படத்தின் தழுவல்)

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி..

அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது..

அக்கம் பக்கமே பாராது.. 
ஆட்டம் போடவும் கூடாது.. 
அழுவதும் தவறும்..அஞ்சுவதும் தவறு..

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி..

தன்னந்தனிமையில் நீயிருந்தால்..
துன்பப் புயலுமே உனை சூழ்ந்தால்..

தன்னந்தனிமையில் நீயிருந்தால்..
துன்பப் புயலுமே உனை சூழ்ந்தால்..

கண் கலங்குவாயா..

துணிந்து நிற்பாயா?

கண்மணி எனக்கதை சொல்லிவிடு

வேளைக் கண்டு நடுங்க மாட்டேன்..
முயன்று நானே வெற்றி கொள்வேன்..

சபாஷ்..

Saturday, 15 November 2014

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்.. - கைதி கண்ணாயிரம் (01.12.1960)



கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
படம் : கைதி கண்ணாயிரம் (01.12.1960)
பாடியவர் : பி.சுசீலா - மாஸ்டர் ஸ்ரீதர்
இசை : கே.வி.மகாதேவன் (உதவி புகழேந்தி)
இயற்றியவர் : அ.மருதகாசி 
நடிப்பு : இராஜசுலோச்சனா - மாஸ்டர் ஸ்ரீதர் - ஆர்.எஸ்.மனோகர் ஈ.வி.சரோஜா மற்றும் பி.எஸ்.வீரப்பா
இயக்கம் : ஏ.எஸ்.ஏ.சாமி 
தயாரிப்பு : மாடர்ன் தியேட்டர்ஸ் (டி.ஆர்.சுந்தரம்)
(இப்படம் ஹிந்தியில் புகழ் பெற்ற "கைதி எண் 911" என்ற படத்தின் தழுவல்)

ஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆ ஆஆஆஆஆ.. 
ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்..

ஆஆஆ..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
கொஞ்சிக் கொஞ்சி
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி கொஞ்சிக் கொஞ்சி

ஆஆஆஆஆ ஆஆ ஓஓஓஓஓ ஓஓ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ

நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்..
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்..
நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்..
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்..

உண்மை இதை உணர்ந்து..
நன்மை பெறப் படித்து..
உலகினில் பெரும்புகழ் சேர்த்திடடா..

பள்ளி சென்று கல்வி பயின்று..
பலரும் போற்றப் புகழ் பெறுவேன்..

சபாஷ்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்..

ஆஆஆஆஆ ஆஆ ஓஓஓஓஓ ஓஓ..
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ..

அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது..

அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது..
அழுவதும் தவறு அஞ்சுவதும் தவறு..
எது வந்த போதிலும் எதிர்த்து நில்லு..

அஞ்சா நெஞ்சம் கொண்டு வாழ்வேன்
இந்த நாட்டின் வீரனாவேன்..

சபாஷ்..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி கொஞ்சிக் கொஞ்சி..

ஆஆஆஆஆ ஆஆ ஓஓஓஓஓ ஓஓ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ

தன்னந்தனிமையில் நீயிருந்தால்..
துன்பப் புயலுமே உனை சூழ்ந்தால்..
தன்னந்தனிமையில் நீயிருந்தால்..
துன்பப் புயலுமே உனை சூழ்ந்தால்..

கண் கலங்குவாயா துணிந்து நிற்பாயா?
கண்மணி எனக்கதை சொல்லிவிடு..

வேளைக் கண்டு நடுங்க மாட்டேன்..
முயன்று நானே வெற்றி கொள்வேன்..

சபாஷ்..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி கொஞ்சிக் கொஞ்சி..

Friday, 14 November 2014

வான் எங்கும் நீ மின்ன.. - என்றென்றும் புன்னகை (20.12.2013)



வான் எங்கும் நீ மின்ன..
படம் : என்றென்றும் புன்னகை (20.12.2013)
பாடியவர்கள் : ஆலப் இராஜு - தேவன் - ஹரிணி 
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்: மதன் கார்கி
நடிப்பு : ஜீவா - த்ரிஷா
இயக்கம் : ஐ.அஹமது 
தயாரிப்பு : டாக்டர் வி.இராமதாஸ் - ஜி.கே.எம்.தமிழ்குமரன்

வான் எங்கும் நீ மின்ன.. மின்ன..
நானென்ன நானென்ன பண்ண.. பண்ண..
என் எண்ணக் கிண்ணத்தில் நீ உன்னை ஊற்றினாய்.. 
கை அள்ளியே வெண் விண்ணிலே.. 
ஏன் வண்ணம் மாற்றினாய்? 
வான் எங்கும் நீ மின்ன.. மின்ன..
நானென்ன நானென்ன பண்ண.. பண்ண..

என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய் 
அந்நூலிலே உன் நெஞ்சினை ஏன் கோர்க்க பார்க்கிறாய்? 

ஓ..ஓஹோ… பிரியாபிரியா..
இதயத்தின் அதிர்வு நீயா?
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே..
தரை வந்த வரம் நீயா?
ஓ..ஓஹோ பிரியாபிரியா..
இதயத்தின் அதிர்வு நீயா?
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே
தரை வந்த வரம் நீயா?

பூக்கள் இல்லா உலகினிலே.. ஹே…
பூக்கள் இல்லா உலகினிலே..
வாழ்ந்தேனே உன்னை காணும் வரை…
நான் இன்றோ பூவுக்குள்ளே சிறை..
பெண் வாசம் என் வாழ்வில்..
இல்லை என்றேனே..
உன் வாசம் நுரையீரல்..
நான் தீண்ட கண்டேனே..
மூச்சும் முத்ததால்
உன் மேல் கதல் கொண்டேனே..

வான் எங்கும் நீ மின்ன.. மின்ன
நானென்ன நானென்ன பண்ண.. பண்ண

என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய் 
அந்நூலிலே உன் நெஞ்சினை ஏன் கோர்க்க பார்க்கிறாய்? 

சே ஹே…ஹே…யோ…த்ரு…ரோ…ரோ
சே ஹே…ஹே…யோ…த்ரு…ரோ…ரோ

பாலை ஒன்றாய் வரைந்திருந்தேன்..
நீ காதல் நதியென வந்தாய்..
என் வாழ்வில் பசுமைகள் தந்தாய்..
ஓய்.. என் நெஞ்சம் நீரேன்றால்..
நீந்தும் மீனா நீ?
என் காதல் காடேன்றால்..
மேயும் மானா நீ?
எந்தன் வெட்கத்தீயில்
குளிர் காயும் ஆணா நீ?

வான் எங்கும் நீ மின்ன.. மின்ன..
நானென்ன நானென்ன பண்ண.. பண்ண..

என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய்.. 
அந்நூலிலே உன் நெஞ்சினை ஏன் கோர்க்க பார்க்கிறாய்?

ஓ..ஓஹோ… பிரியாபிரியா..
இதயத்தின் அதிர்வு நீயா?
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே..
தரை வந்த வரம் நீயா?
ஓ..ஓஹோ பிரியாபிரியா..
இதயத்தின் அதிர்வு நீயா?
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே
தரை வந்த வரம் நீயா?

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.. - குழந்தையும் தெய்வமும் (19.11.1965)



குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று..
படம் : குழந்தையும் தெய்வமும் (19.11.1965)
பாடியவர் : பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
நடிப்பு : ஜெய்சங்கர் - ஜமுனா - குட்டி பத்மினி 
இயக்கம் : கிருஷ்ணன் - பஞ்சு 
தயாரிப்பு : ஏ.வி.எம்.புரடொக்சன்ஸ் (ஏ.வி.மெய்யப்பன்)

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று..
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று.
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று..
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று..
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று..
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று..
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று..
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று..
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று..
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று..

பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது.. 
பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது - அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது - அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது..
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது..
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது - அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது - அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது..

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று..
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று..

உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது.. 
உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது - நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது - நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது..
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது.. 
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது - பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது - பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது..

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று..
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று..

பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார்.. 
பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார் - அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவரானார் - அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவரானார்..
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம்.. 
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம் - என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார் - என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று..
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று,,
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று..
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று..
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று..
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று..

தங்கங்களே நாளை தலைவர்களே.. - என்னை போல் ஒருவன் (18.03.1978)



தங்கங்களே நாளை தலைவர்களே..
படம் : என்னை போல் ஒருவன் (18.03.1978)
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
நடிப்பு : நடிகர் திலகம் - உஷாநந்தினி 
இயக்கம் : டி.ஆர்.ராமண்ணா - ஏ.சி.திருலோகசந்தர்
தயாரிப்பு : ஸ்ரீவிநாயகா பிக்சர்ஸ்

தங்கங்களே நாளை தலைவர்களே..
நம் தாயும் மொழியும் கண்கள்..
சிங்கங்களே வாழும் தெய்வங்களே..
நம் தேசம் காப்பவர் நீங்கள்..
தங்கங்களே நாளை தலைவர்களே..
நம் தாயும் மொழியும் கண்கள்..
சிங்கங்களே வாழும் தெய்வங்களே..
நம் தேசம் காப்பவர் நீங்கள்..

நம் தத்தா காந்தியும்
மாமா நேருவும்
தேடியச் செல்வங்கள்..
பள்ளிச் சாலை தந்தவன்
ஏழைத் தலைவனை
தினமும் எண்ணுங்கள்..

நம் தத்தா காந்தியும்
மாமா நேருவும்
தேடியச் செல்வங்கள்..
பள்ளிச் சாலை தந்தவன்
ஏழைத் தலைவனை
தினமும் எண்ணுங்கள்..

ஹே ஹே ஹே ஹே
யா யா யா யா
லாலாலலாலா தரரம்பம்
லாலாலலாலா தரரம்பம
லாலாலலாலா தரரம்பம்

அறம் செய்ய விரும்பு
என்றாள் ஔவை
தர்மம் செய்யுங்கள்..
அன்பே தெய்வம்
என்றார் பெரியோர்
அன்புடன் வாழுங்கள்..
அறம் செய்ய விரும்பு
என்றாள் ஔவை
தர்மம் செய்யுங்கள்..
அன்பே தெய்வம்
என்றார் பெரியோர்
அன்புடன் வாழுங்கள்..

யாரும் தீமை செய்தாலும்
நீங்கள் நன்மை செய்யுங்கள்..
யாரும் பொய்யைச் சொன்னாலும்
நீங்கள் மெய்யைச் சொல்லுங்கள்..
நேர்மையாய் வாழ்வதில்
தோல்வியே இல்லையே..

தங்கங்களே நாளை தலைவர்களே..
நம் தாயும் மொழியும் கண்கள்..
சிங்கங்களே வாழும் தெய்வங்களே..
நம் தேசம் காப்பவர் நீங்கள்..

நம் தத்தா காந்தியும்
மாமா நேருவும்
தேடியச் செல்வங்கள்..
பள்ளிச் சாலை தந்தவன்
ஏழைத் தலைவனை
தினமும் எண்ணுங்கள்..

ஹே ஹே ஹே ஹே
யா யா யா யா

கூடும் உறவு
கூட்டுறவென்று
ஒன்றாய் வாழுங்கள்..
கூடிய பிறகு
குற்றம் காணும்
கொள்கையைத் தள்ளுங்கள்..
கூடும் உறவு
கூட்டுறவென்று
ஒன்றாய் வாழுங்கள்..
கூடிய பிறகு
குற்றம் காணும்
கொள்கையைத் தள்ளுங்கள்..
என்றும் ஒன்றே செய்யுங்கள்..
ஒன்றை நன்றே செய்யுங்கள்..
நன்றும் இன்றே செய்யுங்கள்..
நீங்கள் எதிலும் வெல்லுங்கள்..
வீரனின் வாழ்விலே
வெற்றி மேல வெற்றியே..

தங்கங்களே நாளை தலைவர்களே..
நம் தாயும் மொழியும் கண்கள்..
சிங்கங்களே வாழும் தெய்வங்களே..
நம் தேசம் காப்பவர் நீங்கள்..

நம் தத்தா காந்தியும்
மாமா நேருவும்
தேடியச் செல்வங்கள்..
பள்ளிச் சாலை தந்தவன்
ஏழைத் தலைவனை
தினமும் எண்ணுங்கள்..

Thursday, 6 November 2014

துள்ளாத மனமும் துள்ளும்.. - கல்யாணப் பரிசு (09.04.1959)



துள்ளாத மனமும் துள்ளும்
படம் : கல்யாணப் பரிசு (09.04.1959)
பாடியவர் : ஜிக்கி
இசை : ஏ.எம்.இராஜா
இயற்றியவர்  : ப(பா)ட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
நடிப்பு : ஜெமினிகணேசன் - விஜயகுமாரி 
இயக்கம் : சி.வி.ஸ்ரீதர் 
தயாரிப்பு : வீனஸ் பிக்சரஸ் 
(எஸ்.கிருஷ்ணமூர்த்தி - டி.கோவிந்தராஜன் - சி.வி.ஸ்ரீதர்) 

துள்ளாத மனமும் துள்ளும்..
சொல்லாத கதைகள் சொல்லும்..
இல்லாத ஆசையைக் கிள்ளும்..
இன்பத் தேனையும் வெல்லும் - இசை
இன்பத் தேனையும் வெல்லும்..
துள்ளாத மனமும் துள்ளும்..
சொல்லாத கதைகள் சொல்லும்..
இல்லாத ஆசையைக் கிள்ளும்..
இன்பத் தேனையும் வெல்லும் - இசை
இன்பத் தேனையும் வெல்லும்..

துன்பக் கடலைத் தாண்டும்போது..
தோணியாவது கீதம்..
துன்பக் கடலைத் தாண்டும்போது..
தோணியாவது கீதம்..
அன்புக் குரலில் அமுதம் கலந்தே..
அருந்தத் தருவதும் கீதம்..
எங்கும் சிதறும் எண்ணங்களையும்
இழுத்து வருவதும் கீதம்
இணைத்து மகிழ்வதும் கீதம் - துயர்
இருளை மறைப்பதும் கீதம்
துள்ளாத மனமும் துள்ளும்..
சொல்லாத கதைகள் சொல்லும்..
இல்லாத ஆசையைக் கிள்ளும்..
இன்பத் தேனையும் வெல்லும் - இசை
இன்பத் தேனையும் வெல்லும்..

சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால்..
தோகை விரித்தே வளர்ந்திடும்..
சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால்..
தோகை விரித்தே வளர்ந்திடும்..
சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால்
தாவியணைத்தே படர்ந்திடும்..
மங்கை இதயம் நல்ல துணைவன்
வரவு கண்டே மகிழ்ந்திடும்,
உறவு கொண்டால் இணைந்திடும் - அதில்
உண்மை இன்பம் விளைந்திடும்
துள்ளாத மனமும் துள்ளும்..
சொல்லாத கதைகள் சொல்லும்..
இல்லாத ஆசையைக் கிள்ளும்..