Monday, 15 September 2014

நினைக்கத் தெரிந்த மனமே.. - ஆனந்தஜோதி (1963)



நினைக்கத் தெரிந்த மனமே..
படம் : ஆனந்தஜோதி (1963)
பாடியவர் : பி.சுசீலா 
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன்
நடிப்பு : தேவிகா - மக்கள் திலகம் 

நினைக்கத் தெரிந்த மனமே..
உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே..
உனக்கு விலகத் தெரியாதா?
உயிரே.. விலகத் தெரியாதா?

நினைக்கத் தெரிந்த மனமே..
உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே..
உனக்கு விலகத் தெரியாதா?
உயிரே.. விலகத் தெரியாதா?

மயங்கத் தெரிந்த கண்ணே..
உனக்கு உறங்கத் தெரியாதா?
மலரத் தெரிந்த அன்பே..
உனக்கு மறையத் தெரியாதா?
அன்பே மறையத் தெரியாதா?
நினைக்கத் தெரிந்த மனமே..
உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே..
உனக்கு விலகத் தெரியாதா?
உயிரே.. விலகத் தெரியாதா?

எடுக்கத் தெரிந்த கரமே..
உனக்கு கொடுக்கத் தெரியாதா?
இனிக்கத் தெரிந்த கனியே..
உனக்கு கசக்கத் தெரியாதா?
படிக்கத் தெரிந்த இதழே..
உனக்கு முடிக்கத் தெரியாதா?
படரத் தெரிந்த பனியே..
உனக்கு மறையத் தெரியாதா
பனியே மறையத் தெரியாதா?
நினைக்கத் தெரிந்த மனமே..
உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே..
உனக்கு விலகத் தெரியாதா?
உயிரே.. விலகத் தெரியாதா?

கொதிக்கத் தெரிந்த நிலவே..
உனக்கு குளிரத் தெரியாதா?
குளிரும் தென்றல் காற்றே..
உனக்கு பிரிக்கத் தெரியாதா?
பிரிக்கத் தெரிந்த இறைவா..
உனக்கு இணைக்கத் தெரியாதா?
இணையத் தெரிந்த தலைவா..
உனக்கு என்னைப் புரியாதா?
தலைவா.. என்னைப் புரியாதா?
நினைக்கத் தெரிந்த மனமே..
உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே..
உனக்கு விலகத் தெரியாதா?
உயிரே.. விலகத் தெரியாதா?

Saturday, 13 September 2014

மாலைப் பொழுதின் மயக்கத்திலே - பாக்யலக்ஷ்மி (1961)



மாலைப் பொழுதின் மயக்கத்திலே
படம் : பாக்யலக்ஷ்மி (1961)
பாடியவர் : பி.சுசீலா 
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன்
நடிப்பு : ஜெமினி கணேசன் - ஈ.வி.சரோஜா - சௌகார்ஜானகி 

மாலைப் பொழுதின் மயக்கத்திலே 
நான் கனவு கண்டேன் தோழி 
மாலைப் பொழுதின் மயக்கத்திலே 
நான் கனவு கண்டேன் தோழி 
மனதில் இருந்தும் 
வார்த்தைகள் இல்லை 
காரணம் ஏன் தோழி? 
காரணம் ஏன் தோழி? 
ஆ..ஆ..ஆ..ஆஆ..
மாலைப் பொழுதின் மயக்கத்திலே 
நான் கனவு கண்டேன் தோழி

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் 
என்றவர் யார் தோழி? 
இன்பம் கனவில் துன்பம் எதிரில் 
காண்பது ஏன் தோழி? 
காண்பது ஏன் தோழி?
ஆ..ஆ..ஆ..ஆஆ..
மாலைப் பொழுதின் மயக்கத்திலே 
நான் கனவு கண்டேன் தோழி 

மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் 
வடிவு கண்டேன் தோழி 
மங்கை என் கையில் குங்குமம் தந்தார் 
மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ? வந்தவர் நெஞ்சில் 
சாய்ந்து விட்டேன் தோழி 
அவர் மறவேன் மறவேன் என்றார் 
உடனே மறந்து விட்டார் தோழி 
மறந்து விட்டார் தோழி 
பறந்து விட்டார் தோழி 
ஆ..ஆ..ஆ..ஆஆ..
மாலைப் பொழுதின் மயக்கத்திலே 
நான் கனவு கண்டேன் தோழி 

கனவில் வந்தவர் யாரென? கேட்டேன் 
கணவர் என்றார் தோழி 
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் 
பிரிந்தது ஏன் தோழி? 
இளமை எல்லாம் வெறும் கனவு மயம் 
இதில் மறைந்தது சில காலம் 
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது 
மயங்குது எதிர் காலம் 
மயங்குது எதிர் காலம் 
மாலைப் பொழுதின் மயக்கத்திலே 
நான் கனவு கண்டேன் தோழி 
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை 
காரணம் ஏன் தோழி? 
காரணம் ஏன் தோழி? 
ஆ..ஆ..ஆ..ஆஆ..
மாலைப் பொழுதின் மயக்கத்திலே 
நான் கனவு கண்டேன் தோழி

புத்தம் புது காலை பொன்னிற வேளை - மேகா (2014)



புத்தம் புது காலை பொன்னிற வேளை
படம் : மேகா (2014)
பாடியவர் : எஸ்.ஜானகி 
இசை : இசைஞானி இளையராஜா 
வரிகள் : கங்கை அமரன் 
நடிப்பு : அஸ்வின் - சிருஷ்டி
(டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளிவந்தது)

புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
என் வாழ்விலே..
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்..
எந்நாளும் ஆனந்தம்..
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..

பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ?
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ?
மனதின் ஆசைகள்..
மலரின் கோலங்கள்..
குயிலோசையின் பரிபாஷைகள்..
அதிகாலையின் வரவேற்புகள்..
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..

வானில் தோன்றும் கோலம்
அதை யார் போட்டதோ?
பனி வாடை வீசும் காற்றில்
சுகம் யார் சேர்த்ததோ?
வயதில் தோன்றிடும்..
நினைவில் ஆனந்தம்..
வளர்ந்தோடுது இசைபாடுது..
வலி கூடிடும் சுவைகூடுது...
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
என் வாழ்விலே..
தினந்தோறும் தோன்றும்..
சுகராகம் கேட்கும்..
எந்நாளும் ஆனந்தம்..
லல்லலாலா..லா..லாலா..ஆ..

புத்தம் புது காலை பொன்னிற வேளை - அலைகள் ஒய்வதில்லை (1981)



புத்தம் புது காலை பொன்னிற வேளை
படம் : அலைகள் ஒய்வதில்லை (1981)
பாடியவர் : எஸ்.ஜானகி 
இசை : இசைஞானி இளையராஜா 
வரிகள் : கங்கை அமரன்  
(இப்பாடல் படத்தில் இடம்பெற வில்லை) 

புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
என் வாழ்விலே..
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்..
எந்நாளும் ஆனந்தம்..
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..

பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ?
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ?
மனதின் ஆசைகள்..
மலரின் கோலங்கள்..
குயிலோசையின் பரிபாஷைகள்..
அதிகாலையின் வரவேற்புகள்..
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..

வானில் தோன்றும் கோலம்
அதை யார் போட்டதோ?
பனி வாடை வீசும் காற்றில்
சுகம் யார் சேர்த்ததோ?
வயதில் தோன்றிடும்..
நினைவில் ஆனந்தம்..
வளர்ந்தோடுது இசைபாடுது..
வலி கூடிடும் சுவைகூடுது...
புத்தம் புது காலை..
பொன்னிற வேளை..
என் வாழ்விலே..
தினந்தோறும் தோன்றும்..
சுகராகம் கேட்கும்..
எந்நாளும் ஆனந்தம்..
லல்லலாலா..லா..லாலா..ஆ..

Thursday, 11 September 2014

தேசம், ஞானம், கல்வி, ஈசன் பூசையெல்லாம் - பராசக்தி (1952)



தேசம், ஞானம், கல்வி,  ஈசன் பூசையெல்லாம்
படம் : பராசக்தி (1952)
பாடியவர் : சிதம்பரம் சி.எஸ். ஜெயராமன்
இயற்றியவர் : உடுமலை நாராயணக்கவி 
இசை : ஆர்.சுதர்சனம்

தேசம், ஞானம், கல்வி, ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி
தேசம், ஞானம், கல்வி, ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி குதம்பாய் 
காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே குதம்பாய் 
காசுக்குப் பின்னாலே

காட்சியான பணம் கைவிட்டுப் போன பின்
சாட்சிக் கோர்ட் ஏறாதடி
காட்சியான பணம் கைவிட்டுப் போன பின்
சாட்சிக் கோர்ட் ஏறாதடி குதம்பாய் 
சாட்சிக் கோர்ட் ஏறாதடி
பை பையாய்ப் பொன் கொண்டோர் 
பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய்ப் போகுமடி குதம்பாய் 
மெய் மெய்யாய்ப் போகுமடி

நல்லவரானாலும் ம்.. ம்..ம்.. ம்.. ம்..ம்.. ம்.. ம்..ம்..
நல்லவரானாலும் இல்லாதவரை 
நாடு மதிக்காது
நல்லவரானாலும் இல்லாதவரை 
நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது - கல்வி
இல்லாத மூடரைக் கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே குதம்பாய் 
வெள்ளிப் பணமடியே

ஆரியக் கூத்தாடினாலும் 
தாண்டவக்கோனே 
காசு காரியத்தில் கண் வையடா 
தாண்டவக்கோனே
ஆரியக் கூத்தாடினாலும் 
தாண்டவக்கோனே 
காசு காரியத்தில் கண் வையடா 
தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா 
தாண்டவக்கோனே..
ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..
உள்ளே பகை வையடா 
தாண்டவக்கோனே  
காசுக்கு உதட்டில் உறவாடடா 
தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா 
தாண்டவக்கோனே 
காசுக்கு உதட்டில் உறவாடடா 
தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாந் 
தாண்டவக்கோனே - சில
முட்டாப் பயலையெல்லாந் 
தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா 
தாண்டவக்கோனே
முட்டாப் பயலையெல்லாந்
தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா 
தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் 
தாண்டவக்கோனே - 
பிணத்தைக் கட்டி அழும் போதும் 
தாண்டவக்கோனே..
ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..ஏ..
கட்டி அழும் போதும் 
தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே க்ண் வையடா 
தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் 
தாண்டவக்கோனே
பணப் பெட்டி மேலே கண் வையடா 
தாண்டவக்கோனே

ஆரியக் கூத்தாடினாலும் 
தாண்டவக்கோனே 
காசு காரியத்தில் கண் வையடா 
தாண்டவக்கோனே

Friday, 5 September 2014



இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்..
கேரளா மாநிலத்தை மிகச் சிறப்பாக ஆண்டு 
வந்த "மகாபலி" மன்னனின் நினைவுப் போற்றும்
திருநாள்.. ஒவ்வொரு கொல்லம் வருடம் சிங்க 
மாதத்தில் (நம்மூர் ஆவணி மாதத்தில்) அத்த (அஸ்தம்)
நட்சத்திரத்திலிருந்து, திருவோணம் நட்சத்திரம்
வரையிலான பத்து நாட்களை மிகச் சிறப்பாக "வசந்த
விழாவாக" கொண்டாடப் பட்டு வருகிறது..
இவ்விழா தமிழகத்தில் பாண்டிய மன்னர் காலத்தில்
மாமதுரையில் மிகச் சிறப்பாக கொண்டாடிய வரலாற்று
செய்திகள் உண்டு..

“மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்”
- திருஞானசம்பந்தர், தேவாரம் 503, திருமறை 2
என சம்பந்தரின் பாடல் பெற்ற திருநாள்..

இந்நாளில் வீடுகளில் பூக்களால் "அத்தப் பூக் கோலம்"
போட்டு மகாபலி மன்னன் தங்கள் இல்லங்களுக்கு வருவதாக
எண்ணி, அன்புடன் அழைத்து மகிழும் மலையாளப் பெண்கள்..

புத்தாடை உடுத்தி, பூக் கோலமிட்டு, சுவைமிகு உணவு
வகைகள் படைத்து அவர்தம் ஆடல் பாடல்கள் நிகழ்ச்சியாக புலிக்களி, கை கொட்டுக்களி மற்றும் யானைத் திருவிழா என
வீர விளையாட்டுகள்நடத்தி மகிழும் ஓணம் திருநாள்
கொண்டாடும் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்..

இவ்விழா கொண்டாடிட வசதியாக, கேரளா மாநிலத்தை
ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் ஊள்ளூர் விடுமுறை
அறிவித்து மகிழ்ந்தது தலைவர் கலைஞர் அவர்கள்..

Thursday, 4 September 2014

அச்சம் என்பது மடமையடா - மன்னாதி மன்னன் (1960)



அச்சம் என்பது மடமையடா 
படம் : மன்னாதி மன்னன் (1960)
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன்
நடிப்பு : மக்கள் திலகம் - பத்மினி - அஞ்சலிதேவி 

அச்சம் என்பது மடமையடா.. 
அஞ்சாமை திராவிடர் உடமையடா..
அஞ்சாமை திராவிடர் உடமையடா.. 
அச்சம் என்பது மடமையடா..
அஞ்சாமை திராவிடர் உடமையடா..
அச்சம் என்பது மடமையடா..
அஞ்சாமை திராவிடர் உடமையடா..
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா..
தாயகம் காப்பது கடமையடா..
அச்சம் என்பது மடமையடா..
அஞ்சாமை திராவிடர் உடமையடா..

கனக விஜயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மகன்
ஆ..ஆ.ஆ.ஆ..ஆஆஆஆஆஆ 
கனக விஜயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏந்தி
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே..

அச்சம் என்பது மடமையடா..
அஞ்சாமை திராவிடர் உடமையடா..

கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
ஆ..ஆ.ஆ.ஆ..ஆஆஆஆஆஆ
கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை

அச்சம் என்பது மடமையடா..
அஞ்சாமை திராவிடர் உடமையடா..

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
ஆ..ஆ.ஆ.ஆ..ஆஆஆஆஆஆ
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்

அச்சம் என்பது மடமையடா..
அஞ்சாமை திராவிடர் உடமையடா..
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா..
தாயகம் காப்பது கடமையடா..
அச்சம் என்பது மடமையடா..
அஞ்சாமை திராவிடர் உடமையடா...