Sunday, 12 October 2014

உனக்கென நான் எனக்கென நீ.. - காதலில் விழுந்தேன் (26.09.2008)



உனக்கென நான் எனக்கென நீ..
படம் : காதலில் விழுந்தேன் (26.09.2008)
பாடியவர்கள் : சக்தி ஸ்ரீ கோபாலன்  -  விஜய் ஆண்டனி 
இசை : விஜய் ஆண்டனி 
இயற்றியவர் : தாமரை 
நடிப்பு : நகுல் - சுனைனா
இயக்கம் : பி.வி.பிரசாத் 
தயாரிப்பு : எஸ்.உமாபதி 
(கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் வெளியீடு)

உனக்கென நான் எனக்கென நீ..
நினைக்கையில் இனிக்குதே..
உடலேன நான் உயிரென நீ.. 
இருப்பது பிடிக்குதே..

உனதுயிராய் எனதுயிரும் 
உலவிடத் துடிக்குதே..
தனியொரு நான் தனியொரு நீ 
நினைக்கவும் வலிக்குதே..

இதயத்தை எதற்காக? எதற்காக?  
இடம் மாற்றினாய்
இனிக்கும் ஒரு துன்பத்தை 
குடியேற்றினாய்..
புதுமைகள் தந்து 
மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்த..
பரிசுகள் தேடி தேடிப்பார்..  
கசந்திடும் சேதி வந்தால்..
பகிர்ந்திட பக்கம் நீ இருப்பாய்.. 
நோய் எனக் கொஞ்சம் படுத்தால்
தாயென  மாறி அணைப்பாய்.. 
உனது காதலில் விழுந்தேன்..
அருகினில் வா.. 
அருகினில் வா.. 
இடைவெளி வலிக்குதே..
உனதுயிரில் எனதுயிரை 
ஊற்றிட துடிக்குதே..
நானென நீ..  
நீ என நான் நினைந்திட பிடிக்கும்..
புது உலகம் புது சரகம் 
படைத்திட தவிக்குதே..
மழை வெயில் காற்றோடு.. 
பூகம்பம் வந்தாலுமே..
உனது மடியில் நான் தூங்கும் வீடாகுமே..
அருகினில் வந்து.. 
மடியினில் சாய்ந்து படுத்தால்..
மெல்லிய குரலில் இசைப்பாய்.. 
மார்பினில் முகத்தை புதைத்தால்
கூந்தலை கோதிக் கொடுப்பாய்.. 
அணைப்பிணில் மயங்கிக் கிடந்தால்..
அசைந்திடக் கூட மறுப்பாய்.. 
உனது காதலில்.. விழுந்தேன்..
மரணமே பயந்திடும் தூரத்தில் 
நாமும் வாழ்கின்றோம்..
மனித நிலை தாண்டிப் போகிறோம்..
இனி நமக்கென்றும்.. 
பிரிவில்லையே.. 
ஓ..ஓ..ஓ.. பிரிவில்லையே..

எனக்கென எதுவும் செய்தாய். 
உனக்கென என்ன நான் செய்வேன்..
பொங்கிடும் நெஞ்சின் உணர்வை.. 
சொல்லவும் வார்த்தை போதாதே..
விழிகளின் ஓரம் துளிர்க்கும்.. 
ஒரு துளி நீரே சொல்லட்டும்..
உனது காதலில் விழுந்தேன்..

உனக்கென நான் எனக்கென நீ..
நினைக்கையில் இனிக்குதே..
உடலேன நான் உயிரென நீ.. 
இருப்பது பிடிக்குதே..

கண்ணே வண்ணப் பசுங்கிளியே - யானை வளர்த்த வானம்பாடி (27.11.1959)

KANNE VANNA PASUNKILIYE - YAANAI VALARTHA VAANAMPAADI - RARE - TAMIL REMIX

கண்ணே வண்ணப் பசுங்கிளியே
படம்: யானை வளர்த்த வானம்பாடி (27.11.1959)
பாடியவர் : சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்
பாடல் : கவிஞர்.கு.மா.பாலசுப்பிரமணியம்
இசையமைப்பாளர் : பிரதர் சுப்ரமணியன்
நடிப்பு : ஸ்ரீராம்
இயக்கம்: பி. சுப்பிரமணியம்
தயாரிப்பு : நீலா புரொக்சன்ஸ்
 "யானை வளர்த்த வானம்பாடி" திரைப்படத்தில் கவிஞர்.கு.மா.பா. எழுதிய அருமையான தமிழ் சொற்களில் அமைந்த தேனினும் இனிய தாலாட்டைக் கேளுங்கள்.


கண்ணே வண்ணப் பசுங்கிளியே - என்
கண்ணின் பாவையே கண்ணுறங்காயே
கண்ணே வண்ணப் பசுங்கிளியே - என்
கண்ணின் பாவையே கண்ணுறங்காயே
பொன்னே உன்னெழில் புன்னகை போதும்
பூவே தாமரை கண்ணுறங்காயே...

தேடாத செல்வத்தைப் போலே நீ வந்தாய்
சிந்தையில் இன்பமாய் என்றும் நிறைந்தாய்
தேடாத செல்வத்தைப் போலே நீ வந்தாய்
சிந்தையில் இன்பமாய் என்றும் நிறைந்தாய்
ஓடையின் நீரில் ஆடிடும் மீன் போல் - என்
உள்ளத்திலே துள்ளி ஆடுகின்றாய்

வாடாதப் பூவாக சூடாத முத்தாக
மாயம் காட்டிடும் கண்மணியே
காடும் கமழ்ந்திடும் மல்லிகை நீயே
கண்ணின் பாவையே கண்ணுறங்காயே
கண்ணே வண்ணப் பசுங்கிளியே - என்
கண்ணின் பாவையே கண்ணுறங்காயே

நாட்டின் மனிதர்கள் மூட்டிடும் தொல்லை
நம்பிக்கை மோசங்கள் இங்கேதும் இல்லை
காட்டு விலங்கும் வேடிக்கைக் காட்டும்
களங்கமில்லா அன்புக்கு ஈடுமில்லை
நாட்டிய மாடிடும் மாமயிலைக் கண்டு
கானம் பாடும் குயிலும் உண்டு
காராம் பசு தந்த பாலமுதுண்டு
கண்ணின் பாவையே கண்ணுறங்காயே
கண்ணே வண்ணப் பசுங்கிளியே - என்
கண்ணின் பாவையே கண்ணுறங்காயே

Saturday, 11 October 2014

பூங்காற்றே.. பூங்காற்றே.. பூப்போல வந்தாள் இவள் - பையா (02.04.2010)



பூங்காற்றே.. பூங்காற்றே.. பூப்போல வந்தாள் இவள்
படம்: பையா (02.04.2010)
பாடியவர்: பென்னி தயால்
இயற்றியவர் : கவிஞர் நா.முத்துக்குமார்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
நடிப்பு : கார்த்திக் - தமன்னா 
இயக்குனர் : என்.லிங்குசாமி 
தயாரிப்பு : என்.சுபாஷ் சந்திரபோஸ் - என்.லிங்குசாமி 

பூங்காற்றே.. பூங்காற்றே.. 
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் 
சந்தோஷம் தந்தாள் இவள்
என் நெஞ்சோடு பேசும் 
இந்தப் பெண்ணோடப் பாசம்
இவள் கண்ணோடுப் பூக்கும் 
பல விண்மீன்கள் பேசும்
என் காதல் சொல்ல 
ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே 
இனி கனவே இல்லை
பூங்காற்றே.. பூங்காற்றே.. 
பூப்போல வந்தாள் இவள்..
போகின்ற வழியெல்லாம் 
சந்தோஷம் தந்தாள் இவள்..

மஞ்சள் வானம்.. 
கொஞ்சம் மேகம்..
கொஞ்சிப் பேசும்.. 
காற்று தொட்டுச் செல்லுதே..
நிறுத்தாமல் சிரிக்கின்றேன்
இந்த நிமிடங்கள் புன்னகையைப்  
பூட்டிக்கொண்டதே
கண்ணாடி சரி செய்து பின்னாடி
உன் கண்ணைப் பார்க்கின்றேன்.. 
பார்க்கின்றேன்..
பெண்ணே நான் உன் முன்னே 
ஒரு வார்த்தைப் பேசாமல்
தோற்கின்றேன்.. 
தோற்கின்றேன்..
வழிப்போக்கன் போனாலும் 
வழியில் காலடித்தடயம் இருக்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி 
வாசனையோடு நினைவிருக்கும்
பூங்காற்றே.. பூங்காற்றே.. 
பூப்போல வந்தாள் இவள்..
போகின்ற வழியெல்லாம் 
சந்தோஷம் தந்தாள் இவள்..

அழகான நதிப்பார்த்தால்.. 
அதன் பெயரினைக் கேட்க மனம் துடிக்கும்..
இவள் யாரோ என்னப் பேரோ..
 நானே அறிந்திடும் வரையில் ஒரு மயக்கம்..
ஏதேதோ ஊர்த் தாண்டி ஏராளம் பேர்த்தாண்டி
போகின்றேன்.. 
போகின்றேன்..
நில்லென்று சொல்கின்ற 
நெடுஞ்சாலை விளக்காக..
அணைகின்றேன் எரிகின்றேன்..
மொழித்தெரியாப்  பாடலிலும் 
அர்த்தங்கள் இன்று புரிகிறதே..
வழித்துணையாய் நீ வந்தாய்
போகும் தூரம் குறைகிறதே..

என் நெஞ்சோடு வீசும் 
இந்தப் பெண்ணோடப் பாசம்..
இவள் கண்ணோடுப் பூக்கும்.. 
பல விண்மீன்கள் பேசும்..
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை..
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை..
பூங்காற்றே.. பூங்காற்றே.. 
பூப்போல வந்தாள் இவள்..
போகின்ற வழியெல்லாம் 
சந்தோஷம் தந்தாள் இவள்..

Tuesday, 30 September 2014

உன்னை கண்ட நாள் முதல் என் தூக்கம் போனது.. - சலீம் (29.08.2014)



உன்னை கண்ட நாள் முதல் என் தூக்கம் போனது 
படம் : சலீம் (29.08.2014)
பாடியவர்கள்:  சுப்ரியா ஜோஷி - ஹேமச்சந்திரா - ஸ்ரீனிவாசன்
இசை: விஜய் ஆண்டனி 
வரிகள்:  அண்ணாமலை
நடிப்பு : விஜய் ஆண்டனி - ஆஷா பர்தாசனி 
இயக்கம் : என்.வி.நிர்மல்குமார் 
தயாரிப்பு : ஆர்.கே.சுரேஷ் - எம்.எஸ்.சரவணன் 
 பாத்திமா விஜய் ஆண்டனி

உன்னை கண்ட நாள் முதல் 
என் தூக்கம் போனது.. 
தூங்கினாலும் உன் முகம் 
என்னென்று சொல்வது.. 
விழுந்தாய் என் விழியில்.. 
கலந்தாய் என் உயிரில்.. 
நொடியில்.. 

உன்னை கண்ட நாள் முதல் 
என் தூக்கம் போனது.. 

தூங்கினாலும் உன் முகம் 

என்னென்று சொல்வது..

எனது தோளில் தலையைச் சாய்த்து 
நெருங்கி நீ வாழ வேண்டும்.. 
பிரிந்து நீயும் நடக்கும் போது
என் இதயம் காயம் படும்.. 

விழிகள் பார்த்து விரல்கள் கோர்த்து 
மடியில் நான் தூங்க வேண்டும்.. 
உனது அன்பில் கரையும்போது 
உதட்டில் பூப் பூத்திடும்..

உலகமே..மறக்கிறேன்.. 
சிறகில்லை..பறக்கிறேன்.. 
மழை இல்லை ..நனைகிறேன்.. 
உன்னில் கரைகிறேன்.. 

உன்னை கண்ட நாள் முதல் 
என் தூக்கம் போனது..

தூங்கினாலும் உன் முகம் 
என்னென்று சொல்வது.. 

சிரித்து பேசும் உனது வார்த்தை 
தினமும் நான் கேட்கவேண்டும்.. 
உறவு என்று எவருமில்லை 
என் உலகம் நீ ஆகிடும்.. 

இதயம் தன்னில் அறைகள் நான்கில் 
எனக்கு நீ மட்டும் வேண்டும்.. 
தரையின் மேலே நிழலைப் போலே 
இணைந்து நாம் வாழனும்.. 

உதடுகள் சிரிக்கிறேன்.. 
உலகினை ரசிக்கிறேன்.. 
உனக்கென்ன இருக்கிறேன்.. 
நெஞ்சில் சுமக்கிறேன்.. 

உன்னை கண்ட நாள் முதல் 
என் தூக்கம் போனது.. 

தூங்கினாலும் உன் முகம் 
என்னென்று சொல்வது.. 

Saturday, 27 September 2014

ஏமாற்றாதே ஏமாற்றாதே.. ஏமாறாதே ஏமாறாதே... - அடிமைப்பெண் (01.05.1969)



ஏமாற்றாதே ஏமாற்றாதே.. ஏமாறாதே ஏமாறாதே...
படம் : அடிமைப்பெண் (01.05.1969)
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்  
இசை : கே.வி.மகாதேவன் 
இயற்றியவர் : உவமைக்கவிஞர் வாலி 
நடிப்பு : மக்கள்திலகம் - ஜெ.ஜெயலலிதா - சோ - மனோகர்
இயக்கம் : கே.சங்கர் 
தயாரிப்பு : மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்..

ஏமாற்றாதே ஏமாற்றாதே.. 
ஏமாறாதே ஏமாறாதே.. 
ஏமாற்றாதே ஏமாற்றாதே.. 
ஏமாறாதே ஏமாறாதே.. 

அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்.. 
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்.. 
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்.. 
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்.. 
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்.. 
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்.. 
தக்க சமயத்தில் நடந்தது எடுத்துரைக்கும்.. 

ஏமாற்றாதே ஏமாற்றாதே.. 
ஏமாறாதே ஏமாறாதே.. 

ஒரு நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு.. 
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு.. 
பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு.. 
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு.. 
இன்றோடு போகட்டும் திருந்தி விடு.. 
இன்றோடு போகட்டும் திருந்தி விடு.. 
உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பிவிடு.. 

ஏமாற்றாதே ஏமாற்றாதே.. 
ஏமாறாதே ஏமாறாதே.. 

நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு.. 
அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு.. 
நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு.. 
அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு.. 
நீ நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்.. 
நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்.. 
இங்கு நடப்பது நலமாய் நடந்து விடும்.. 

ஏமாற்றாதே ஏமாற்றாதே.. 
ஏமாறாதே ஏமாறாதே.. 
ஏமாற்றாதே ஏமாற்றாதே.. 
ஏமாறாதே ஏமாறாதே.

Friday, 26 September 2014

இராஜ இராஜஸ்ரீ இராணி வந்தாள்.. - ஊட்டி வரை உறவு (01.11.1967)



இராஜ இராஜஸ்ரீ இராணி வந்தாள் 
படம் : ஊட்டி வரை உறவு (01.11.1967)
பாடியவர்கள் : பி.பி.ஸ்ரீநிவாஸ் - எல்.ஆர்.ஈஸ்வரி  
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் 
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன் 
நடிப்பு : ஆர்.முத்துராமன் - எல்.விஜயலட்சுமி 
இயக்கம் : ஸ்ரீதர் 
தயாரிப்பு : கே சி பிலிம்ஸ் 

இராஜ இராஜஸ்ரீ இராணி வந்தாள்
இராஜபோகம் தர வந்தாள் 
இராஜ இராஜஸ்ரீ இராணி வந்தாள் 
இராஜபோகம் தர வந்தாள் 

கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த 
கன்னமிரண்டில் இன்னொரு இரகசியம் சொல்ல 
கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த 
கன்னமிரண்டில் இன்னொரு இரகசியம் சொல்ல 
இராஜ இராஜஸ்ரீ இராஜன் வந்தான் 
இராஜபோகம் தர வந்தான்  
இராஜ இராஜஸ்ரீ இராஜன் வந்தான் 
இராஜபோகம் தர வந்தான்  

தேடிச்  சென்ற பூங்கொடி காலில் பட்டது 
சிந்தும் முத்தத்தால் என்னை பின்னிக் கொண்டது 

பின்னிக் கொண்ட பூங்கொடித்  தேனை தந்தது
தேனை தந்ததால் இன்ப ஞானம் வந்தது 

ஞானம் ஒன்றல்ல..பிறந்த கானம் ஒன்றல்ல.. 

எழுந்த இராகம் ஒன்றல்ல..விழுந்த தாளம் ஒன்றல்ல..

ஊடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல.. 

கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த 
கன்னமிரண்டில் இன்னொரு இரகசியம் சொல்ல 

இராஜ இராஜஸ்ரீ இராணி வந்தாள் 
இராஜபோகம் தர வந்தாள் 

மேகம் வந்த வேகத்தில் மோகம் வந்தது 
மெல்ல மெல்ல நாணத்தில் தேரும் வந்தது 

கன்னிப் பெண்ணின் மேனியில் மின்னல் வந்தது
காதல் என்பதோர் மழை வெள்ளம் வந்தது 

பெண்ணும் பெண்ணல்ல இணைந்த கண்ணும் கண்ணல்ல
மலர்ந்த பூவும் பூவல்ல..அமர்ந்த வண்டும் வண்டல்ல  

ஊடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல.

இடையொரு வேதனை நடயொரு வேதனை கொள்ள 
இதழொரு பாவமும்..முகமொரு பாவமும் சொல்ல.. 

இராஜ இராஜஸ்ரீ இராஜன் வந்தான் 
இராஜபோகம் தர வந்தான்
இராஜ இராஜஸ்ரீ 
ஊகும் இராஜன் ஊகும் இராணி 
இராஜபோகம் தர வந்தார்
ஊகுகும்.. ஒஓ.ஓ..ஊகுகும்.. ஒஓ.ஓ.
ஊகுகும்.. ஒஓ.ஓ. 

Thursday, 25 September 2014

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது.. - பாணா காத்தாடி (06.08.2010)



என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது அதன்
படம் : பாணா காத்தாடி (06.08.2010)
பாடியவர் : சாதனா சரகம் 
இசை : யுவன் சங்கர் இராஜா 
இயற்றியவர் : கவிஞர் நா.முத்துகுமார் 
நடிப்பு : அதர்வா - சமந்தா ருத் பிரபு 
இயக்கம் : பத்ரி வெங்கடேஷ் 
தயாரிப்பு : சத்யஜோதி பிலிம்ஸ் 

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது 
அதன் பேர் என்னவென கேட்டேன்..
என் கண்ணில் ஒரு தீ வந்தது  
அதன் பேர் என்னவென கேட்டேன்..
என்ன? அது இமைகள் கேட்டது..
என்ன? அது இதயம் கேட்டது..
காதலென உயிரும் சொன்னதன்பே..

காதலென உயிரும் சொன்னதன்பே..

என் பேரில் ஒரு பேர் சேர்ந்தது அந்த
பேர் என்னவெனக் கேட்டேன்..
என் தீவில் ஒரு கால் வந்தது அந்த
ஆள் எங்கு எனக் கேட்டேன்..
கண்டுபிடி உள்ளம் சொன்னது..
உன்னிடத்தில் உருகி நின்றது..
காதலென உயிரும் சொன்னதன்பே..
காதலென உயிரும் சொன்னதன்பே..

சில நேரத்தில் நம் பார்வைகள்
தவறாகவே எடை போடுமே
மழை நேரத்தில் விழி ஓரத்தில்
இருளாகவே ஒளி தோன்றுமே
எதையும் எடை போடவே
இதயம் தடையாய் இல்லை
புரிந்ததும் மறந்ததேன் உன்னிடம்
என்னை நீயும் மாற்றினாய்
எங்கும் நிறம் கூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம்
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது 
அதன் பேர் என்னவெனக் கேட்டேன்..
என் கண்ணில் ஒரு தீ வந்தது  
அதன் பேர் என்னவெனக் கேட்டேன்..

உனை பார்த்ததும் அந்நாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை..
எதிர்க்காற்றிலேக் குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை..
இரவில் உறக்கம் இல்லை..
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்..
எதற்கு பார்த்தேன் என்று
இன்று புரிந்ததேனடா..
என்னை ஏற்றுக்கொள் முழுவதும்..

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது 
அதன் பேர் என்னவெனக் கேட்டேன்..
என் கண்ணில் ஒரு தீ வந்தது  
அதன் பேர் என்னவெனக் கேட்டேன்..
என்ன? அது இமைகள் கேட்டது..
என்ன? அது இதயம் கேட்டது..
என்ன? அது இமைகள் கேட்டது..
என்ன? அது இதயம் கேட்டது..
காதலென உயிரும் சொன்னதன்பே..

காதலென உயிரும் சொன்னதன்பே..

என் பேரில் ஒரு பேர் சேர்ந்தது அந்த
பேர் என்னவெனக் கேட்டேன்
என் தீவில் ஒரு கால் வந்தது அந்த
ஆள் எங்கு எனக் கேட்டேன்
கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன்னிடத்தில் உருகி நின்றது
காதலென உயிரும் சொன்னதன்பே..

காதலென உயிரும் சொன்னதன்பே..