மகாமகம் அறிவோம்..
அதென்ன? "மகாமகம்"..
முதலில் பனிரெண்டின் மகிமை அறிவோம்...
பகல் பொழுது - இரவு பொழுது பனிரெண்டு மணி நேரம்..
மாதங்கள் - இராசிகள் பனிரெண்டு..
1. சித்திரை (மேஷம்)
2. வைகாசி (ரிஷபம்)
3. ஆனி (மிதுனம்)
4. ஆடி (கடகம்)
5. ஆவணி (சிம்மம்)
6. புரட்டாசி (கன்னி)
7. துலாம் (ஐப்பசி)
8. விருச்சிகம் (கார்த்திகை)
9. தனுசு (மார்கழி)
10. மகரம் (தை)
11. கும்பம் (மாசி)
12. மீனம் (பங்குனி)
நவகிரகங்களில் சூரியன் (சிம்மம்) மற்றும் சந்திரன் (கடகம்) இரண்டுக்கு மட்டும் ஒரே வீடு..
மற்ற கிரகங்களான செவ்வாய் (மேஷம், விருச்சிகம்), புதன் (மிதுனம், கன்னி), குரு (தனுசு,மீனம்), சுக்கிரன் (ரிஷபம், துலாம்) ஆகியவற்றுக்கு தலா இரண்டு வீடுகள்.
இராகு - கேதுக்கு தனி வீடுகள் அல்ல..
சூரியனை, ஒவ்வொரு கிரகமும் சுற்றி வருவதை இராசியில் சஞ்சரிக்கும் காலமாக கணக்கிடப்படுகிறது.
அதென்ன? சந்திரன் இரண்டே கால் நாள் என்கிறீர்களா? நட்சத்திரங்கள் 27. அவையாவன "
1. அசுபதி,
2.பரணி,
3.கார்த்திகை,
4. ரோஹினி ,
5.மிதுனம்,
6.திருவாதிரை,
7.புனர்பூசம்,
8.பூசம்,
9.ஆயில்யம்,
10.மகம்,
11. பூரம்,
12. உத்திரம்,
13. ஹஸ்தம்,
14.சித்திரை,
15. சுவாதி,
16.விசாகம்,
17.அனுஷம்,
18. கேட்டை,
19.மூலம்,
20. பூராடம்,
21.உத்திராடம்,
22. திருவோணம்,
23. அவிட்டம்,
24.சதயம்,
25.பூரட்டாதி,
26.உத்திரட்டாதி,
27.ரேவதி ஆகியனவாகும்.
ஓவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களாக பிரிக்கப்படுகிறது.
அதாவது 27 நட்சத்திரங்களும் 108 பாதங்களாக பகுக்கப்படுகிறது.
இதனடிப்படையில்தான் ஓவ்வொரு கடவுளுக்கும் நாமவாளி அர்ச்சனை செய்யும் போது 108 பதங்களாக துதித்து அர்ச்சிக்கப்படுகிறது போலும்...
ஒவ்வொருவரும் தங்களை காத்திட 108 துதிகள் வேண்டுவது போன்று, அவசர சிகிச்சைக்கு வரும் ஆம்புலன்ஸ் வண்டியின் எண் அழைப்பும் 108 என்பதும் ஆச்சரியமன்றோ?..
சூரியன் ஒவ்வொருமாதமும் ஒரு வீட்டில் சஞ்சரிக்கிறார்...
சந்திரன் இரண்டே கால் நாட்களுக்கு ஒரு வீட்டில் சஞ்சரிக்கிறது.
வியாழன் (குரு) ஒவ்வொரு ஆண்டும் ஒரு வீட்டில் சஞ்சரிக்கிறார்..
சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு வீட்டில் வசிக்கிறார்..
இராகு - கேது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு வீட்டில் சஞ்சரிக்கிறார்.
மற்ற கிரகங்களுக்கு வேறுபட்ட கால அளவில் (ஒரு மாதத்துக்குள்) சஞ்சரிக்கிறது.
சூரியனும் - சந்திரனும் ஒரே வீட்டில் இருக்கும் காலம் அமாவாசை எனவும், சூரியனுக்கு நேரெதிரே ஏழாவது வீட்டில் சந்திரன் இருக்கும் காலம் பௌர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் மாசி மாதம் சூரியன் இருக்கும் கும்ப இராசியிலிருந்து ஏழாவது வீடான, சிம்ம இராசியில் மக நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளன்று "மாசி மகம்" என்று சிவலாயங்களில் வழிபாடுகளும், தீர்த்தவாரியும் நடைபெறும்.
வியாழனாகிய குருவோ, சிம்ம இராசிக்கு வாசம் செய்வது பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது. இப்படி குருவும், சந்திரனும் இணைந்து சிம்ம இராசியில் இருக்கும் காலத்தில், சூரியன் வாசம் செய்யும் மாசி (கும்பத்தில்) மாதத்தில் வரும் மக நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளை "மகாமகம்" என்றழைக்கப்படுகிறது.
அதாவது, சூரியன் தனது மகனான சனியின் வீட்டிலிருந்து, தனது சொந்த வீட்டுக்கு வரும் குரு - சந்திரனை ஏழாவது பார்வையாக பரிவர்த்தனையாக பார்த்துக்கொள்ளும் நிகழ்வே "மகாமகம்" என்று அழைக்கப்படுகிறது..
'மகாமகம்" கும்பகோணத்தில் சிறப்பாக கொண்டாடுவது ஏன்?..
காஞ்சி மாநகருக்கு அடுத்து அதிகமாக கோவில்கள் நிறைந்த ஊர் கும்பகோணம். இவ்வூரின் மத்தியிலிருந்து எந்த கோணத்தில் நோக்கினாலும், ஒரு சிவாலய கோபுர கலச கும்பம், கண்களில் தென்படும். எனவே, இந்நகருக்கு "குமபகோணம்" என்று பெயர் வந்ததாகவும் ஒரு வரலாறு உண்டு.
மூன்று நதிகள் சங்கமிக்கும் அலகாபாத் நகரில் கொண்டாடப்படுவது "கும்பமேளா" என்றழைக்கப்படுகிறது..
கும்பகோணத்தில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மாசிமகத்தை "மகாமகம்" என்றழைக்கப்படுகிறது.
இந்நாளில், நாட்டில் உள்ள அனைத்து புனித நதிகளும் "மகாமக'" குளத்தில் சங்கமிப்பதாக கருதப்படுகிறது. மேலும், இங்குள்ள பனிரெண்டு சிவாலயங்களில் இருந்து வரும் பனிரெண்டு உற்சவமூர்த்திகளும், சாரங்கபாணி கோவிலிலிருந்து வரும் பெருமாளும் எழுந்தருளி, காட்சி தந்து சமய - வைஷ்ணவ ஒற்றுமையை உணர்த்துவதுதான் தனிச் சிறப்பு. காவிரி பாயும் கும்பகோணத்தில், நீராடி, பொற்றாமரை மற்றும் மகாமக குளத்தில் குளித்தால், தங்களின் முன்வினைகள் களையப்படுவதாக ஐதீகம்.
காவிரியில், ஆண்டு முழுதும் ஆற்றுப்படுகையில் கரைபுரண்டு ஓடும் நீரினால், இங்குள்ள பொற்றாமரைக் குளமும், மகாமக குளமும் இயற்கையாக ஊற்று நீரால் நிரம்பி அழகுறுத் தோற்றத்துடன் காணப்படும். .
ஆனால். கர்நாடக அரசின் வஞ்சனையால், காவிரி நீர் வரத்து நின்றதால், ஊற்றெடுக்க வேண்டிய குளங்களில், காவிரி நீரை செயற்கையாக ஊற்றி நிரப்பிட வேண்டிய அவலம். (இங்கும் செயகைதானோ?)
சென்னையில், செயற்கைப் பேரிடர் என்று கூறியபோது "இல்லை..'இல்லை.... இயற்கைப் பேரிடர் என்று"..மறுத்த தமிழகஅரசு இப்போது கூற முடியுமா? இந்த ஆண்டு இயற்கையான ஊற்றால் நிரம்பிய மகாமக குளமென்று. நிச்சயம் கூற முடியாது என்பதே யதார்த்தம்....
உடன்பிறவா சகோதரியுடன் கடந்த மகாமகத்துக்கு நீராடல் சென்று .அரங்கேறிய சோக நிகழ்வின்றி, ஒரு வழியாக இந்த ஆண்டு மகாமகம் நிம்மதியாக முடிந்துள்ளது. இந்த வருட மகாமகத்தை அமைதியாக நடத்திட முழு முதற் காரணம், மாவட்ட ஆட்சியர் திரு.சுப்பையன் அவர்களும், டி.ஐ.ஜி திரு. செந்தாமரைக்கண்ணன் அவர்களுமே என்றால் அது மிகையல்ல. அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். அசம்பாவிதங்களை தவிர்த்திடும் வண்ணம் முதலவர் வரமால் இருந்ததுக்கு அவருக்கும் நன்றி பாராட்டுவோம்.
நான் பிறந்ததே மகாமக ஆண்டில்தான் (1956). மகாமகம் வரும் ஆண்டுகளுக்கு தனிச்சிறப்பெனில், 366 நாட்கள் கொண்ட லீப் வருடம் என்பதும் ஆகும்.
மகாமகம் காண செல்லவில்லையே என்று நினைப்போர், வீட்டில் குளிக்கும் போது நீரை மகாமக தீர்த்தமாக நினைத்து குளித்து, சூரியனை வழிபடுங்கள். முடிந்தால் தினமும் காக்கைக்கு உணவு வையுங்கள். முன்வினை தீரும்..