Wednesday, 10 December 2014

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு.. - இரத்தத்திலகம் (1963)



ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு..
படம் : இரத்தத்திலகம் (1963)
பாடியவர் :  டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர் : கவியரசர் கண்ணதாசன்
இசை : கே.வி. மஹாதேவன்
நடிப்பு : கவியரசர் 
இயக்கம் : தாதாமிராசி 
தயாரிப்பு : நேஷனல் மூவீஸ் ( பஞ்சு அருணாச்சலம்) 

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு.. 
ஒரு கோலமயில் என் துணையிருப்பு..
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு.. 
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு..
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு..

காவியத் தாயின் இளைய மகன்.. 
காதல் பெண்களின் பெருந்தலைவன் - நான்
காவியத் தாயின் இளைய மகன்.. 
காதல் பெண்களின் பெருந்தலைவன்..
பாமர ஜாதியில் தனி மனிதன் - நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்..
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு.. 
ஒரு கோலமயில் என் துணையிருப்பு..
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு.. 
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு..
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு..

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர் 
மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர் 
மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த 
நிலையிலும் எனக்கு மரணமில்லை..
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு.. 
ஒரு கோலமயில் என் துணையிருப்பு.. 
இசைப் பாடலிலே என் உயிர் துடிப்பு.. 
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு..
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு.. 

Tuesday, 9 December 2014

மயக்கமா கலக்கமா? மனதிலே குழப்பமா? - சுமைதாங்கி (1962)



மயக்கமா கலக்கமா? மனதிலே குழப்பமா? 
படம் : சுமைதாங்கி (1962)
பாடியவர் : பி.பி.ஸ்ரீனிவாஸ்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
இயற்றியவர் : கவியரசர் கண்ணதாசன்
நடிப்பு : ஜெமினிகணேசன் - தேவிகா 
இயக்கம் : சி.வி.ஸ்ரீதர் 
தயாரிப்பு : விசாலாட்சி பிலிம்ஸ் (கோவை செழியன்)

மயக்கமா கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
மயக்கமா கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்..
வாசல் தோறும் வேதனை இருக்கும்..
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்..
வாசல் தோறும் வேதனை இருக்கும்..
வந்த துன்பம் எது வந்தாலும்..
வாடி நின்றால் ஓடுவதில்லை..
வாடி நின்றால் ஓடுவதில்லை..
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்..
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்..
மயக்கமா கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?

மயக்கமா கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?

ஏழை மனதை மாளிகையாக்கி..
இரவும் பகலும் காவியம் பாடி..
ஏழை மனதை மாளிகையாக்கி..
இரவும் பகலும் காவியம் பாடி..
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து..
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு..
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு..
உனக்கும் கீழே உள்ளவர் கோடி..
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு..

மயக்கமா கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?
மயக்கமா கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - இரு வல்லவர்கள் (25.02.1966)



நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்?
படம் : இரு வல்லவர்கள் (25.02.1966)
பாடியவர்கள் : டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
இசை : வேதா
நடிப்பு : ஜெய்சங்கர் - எல்.விஜயலக்ஷ்மி 
இயக்கம் : கே.வி.ஸ்ரீநிவாஸ் 
தயாரிப்பு : மாடர்ன் தியேட்டர்ஸ் (ராம சுந்தரம்)

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? 
என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்..
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்?
என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்..

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்..

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்?
என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைப்பாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைப்பாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்?
என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்..

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத..
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட..
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத..
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட..
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக..
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற..
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக..
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற..

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்..

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்?  
என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்..