Wednesday, 29 October 2014

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்.. - தெய்வத்தாய் (18.07.1964)



மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..
படம் : தெய்வத்தாய் (18.07.1964)
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் - இராமமூர்த்தி 
இயற்றியவர் : வாலிபக் கவிஞர் வாலி
நடிப்பு : மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்.
இயக்கம் : பி.மாதவன் 
தயாரிப்பு : சத்யா மூவீஸ் 

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்..
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்..
அந்த ஊருக்குள் எனக்கோரு பேர் இருக்கும்..
கடமை அது கடமை..
கடமை அது கடமை..
அந்த மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்..
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்..
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்..

பதவி வரும்போது பணிவு வர வேண்டும்..
துணிவும் வரவேண்டும் தோழா..
பாதை தவறாமல் பண்பு குறையாமல்..
பழகி வரவேண்டும் தோழா..
பதவி வரும்போது பணிவு வர வேண்டும்..
துணிவும் வரவேண்டும் தோழா..
பாதை தவறாமல் பண்பு குறையாமல்.
பழகி வரவேண்டும் தோழா..
அன்பே உன் அன்னை..
அறிவே உன் தந்தை..
உலகே உன் கோவில்..
ஒன்றே உன் தேவன்..

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்..
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்..
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்..
கடமை அது கடமை..
கடமை அது கடமை..

வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்..
கோழை குணம் மாற்றுத் தோழா..
நாளை உயிர் போகும் இன்றுப் போனாலும்..
கொள்கை நிறைவேற்றுத் தோழா..
வாழை மலர் போல பூமி முகம் பார்க்கும்..
கோழை குணம் மாற்றுத் தோழா..
நாளை உயிர் போகும் இன்றுப் போனாலும்..
கொள்கை நிறைவேற்றுத் தோழா..
அன்பே உன் அன்னை..
அறிவே உன் தந்தை..
உலகே உன் கோவில்..
ஒன்றே உன் வேதம்..

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்..
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்..
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்..
கடமை அது கடமை..
கடமை அது கடமை..

Friday, 24 October 2014

வாழ்க்கை என்னும் ஓடம்.. - பூம்புகார் (1964)



வாழ்க்கை என்னும் ஓடம்.. 
படம் : பூம்புகார் (1964)
பாடியவர் : கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் 
இசை : ஆர்.சுதர்சனம் 
இயற்றியவர் : தலைவர் கலைஞர் அவர்கள்
நடிப்பு :  கே.பி.சுந்தராம்பாள்  - எஸ்.எஸ்.ஆர். - விஜயகுமாரி 
இயக்கம் : ப.நீலகண்டன் 
தயாரிப்பு : மேகலா பிக்சர்ஸ்

ஒருவனுக்கு ஒருத்தியென்ற 
உயிர்மூச்சை உள்ளடக்கி..
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பதில்லாயின் நன்று எனும்
திருக்குறளை மறவாதே.. 
திருக்குறளை மறவாதே..
திசை தவறிப் போகாதே.. 
ஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏஏ

வாழ்க்கை என்னும் ஓடம்.. 
வழங்குகின்ற பாடம்..
மானிடரின் மனதினிலே.. 
மறக்கவொண்ணா வேதம்..
வாழ்க்கை என்னும் ஓடம்.. 
வழங்குகின்ற பாடம்..
மானிடரின் மனதினிலே.. 
மறக்கவொண்ணா வேதம்..
வாழ்க்கை என்னும் ஓடம்..

வாலிபம் என்பது களைகின்ற வேடம்..
அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்..
வாலிபம் என்பது களைகின்ற வேடம்..
அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்..
வருமுன் காப்பவன்தான் அறிவாளி-துயர் 
வருமுன் காப்பவன்தான் அறிவாளி..
அது வந்தபின்னே தவிப்பவன்தான் ஏமாளி..

துடுப்புகள் இல்லா படகு
அலைகள் அழைக்கின்ற திசையெலாம் போகும்..
தீமையைத் தடுப்பவர் இல்லா வாழ்வும்..
அந்த படகின் நிலை போலே ஆகும்..
அந்த படகின் நிலை போலே ஆகும்..
வாழ்க்கை என்னும் ஓடம்.. 
வழங்குகின்ற பாடம்..
மானிடரின் மனதினிலே.. 
மறக்கவொண்ணா வேதம்..
வாழ்க்கை என்னும் ஓடம்.. 

ஏரிக் கரையின் மேலே - முதலாளி (22.10.1957)



ஏரிக் கரையின் மேலே 
படம் : முதலாளி (22.10.1957)
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்
இசை : கே.வி.மகாதேவன்
இயற்றியவர் : கவிஞர் கா.மு.ஷெரிஃப் (எங்கள் மாயூரம் ஊர்க்காரர்)
நடிப்பு : இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். - தேவிகா
இயக்கம் : முக்தா வி.ஸ்ரீநிவாசன்
தயாரிப்பு : எம்.ஏ.வி.பிக்சர்ஸ் (எம்.ஏ.வேணு)
(இப்பாடல் படம் பிடிக்கப் பட்ட கொடைக்கானல் பேரிஜம் 
ஏரியிலிருந்து வரும் நீரைத்தான், இலட்சியநடிகர் வளர்ந்த  பெரியகுளம் நகரில் குடிநீராகப் பருகியவர்) 
இப்படத்துக்கு பின்னர்தான் இலட்சிய நடிகர் சேடபட்டி சூரியனாரயணத் தேவர் மகன் இராஜேந்திரன் கதாநாயகனாக் வளம் வர ஆரம்பித்தார்.
அவரின் மறைந்த இன்று அவரின் நினைவாக இப்பதிவு

ஏரிக் கரையின் மேலே.. 
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ.. 
ஏரிக் கரையின் மேலே.. 
போறவளே பெண்மயிலே.. 
ஏரிக் கரையின் மேலே.. 
போறவளே பெண்மயிலே.
என்னருமைக் காதலியே.. 
என்னைக் கொஞ்சம் பாரு நீயே.. 
என்னருமைக் காதலியே.. 
என்னைக் கொஞ்சம் பாரு நீயே.. 
அன்னம் போல நடை நடந்து 
சென்றிடும் மயிலே.. 
அன்னம் போல நடை நடந்து 
சென்றிடும் மயிலே.. 
ஆசை தீர நில்லு கொஞ்சம் 
பேசுவோம் குயிலே.. 
ஆசை தீர நில்லு கொஞ்சம் 
பேசுவோம் குயிலே.. 

தென்னை மரச் சோலையிலே.. 
சிட்டுப் போல போற பெண்ணே.. 
ஏஏஏ..ஏ.ஏஏஏ..ஏஏஏஏ..ஏ..ஏஏஏ..ஏ 
தென்னை மரச் சோலையிலே.. 
சிட்டுப் போல போற பெண்ணே..
சிட்டுப் போல போற பெண்ணே.. 
நில்லு கொஞ்சம் நானும் வாரேன்.. 
சேர்ந்து பேசிப் போவோம் கண்ணே.. 
நில்லு கொஞ்சம் நானும் வாரேன்.. 
சேர்ந்து பேசிப் போவோம் கண்ணே.. 
அன்னம் போல நடை நடந்து 
சென்றிடும் மயிலே.. 
ஆசை தீர நில்லு கொஞ்சம் 
பேசுவோம் குயிலே.. 
ஆசை தீர நில்லு கொஞ்சம் 
பேசுவோம் குயிலே..

மாமரத் தோப்பினிலே.. 
மச்சான் வரும் வேளையிலே.. 
மச்சான் வரும் வேளையிலே.. 
மாமரத் தோப்பினிலே 
மச்சான் வரும் வேளையிலே 
கோவம் கொண்ட மானைப் போலே 
ஓடலாமோ பெண்மயிலே 
கோவம் கொண்ட மானைப் போலே 
ஓடலாமோ பெண்மயிலே 
அன்னம் போல நடை நடந்து 
சென்றிடும் மயிலே 
அன்னம் போல நடை நடந்து 
சென்றிடும் மயிலே.. 
ஆசை தீர நில்லு கொஞ்சம் 
பேசுவோம் குயிலே..
ஆசை தீர நில்லு கொஞ்சம் 
பேசுவோம் குயிலே..

அமுதைப் பொழியும் நிலவே (சோகம்) - தங்கமலை இரகசியம் (29.06.1957)



அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில்...(சோகம்)
படம் : தங்கமலை இரகசியம் (29.06.1957)
பாடியவர் : இசைக்குயில் பி.சுசீலா
இசை : டி.ஜி.லிங்கப்பா
இயற்றியவர் : கழகக் கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்
நடிப்பு : ஜமுனா
இயக்கம் : பி.ஆர்.பந்தலு 
தயாரிப்பு : பத்மினி பிக்சர்ஸ் - பி.ஆர்.பந்தலு

அமுதைப் பொழியும் நிலவே....
நீ.. அருகில் வராததேனோ?.னோ...
ஓ..ஓஓஓ...
அருகில் வராததேனோ?... ஓ...

அமுதைப் பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

அமுதைப் பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

இதயம் மேவியக் காதலினாலே
ஏங்கிடும் அல்லியைப் பாராய்..
ஆ... ஆ... ஆ... ஆ...ஆ... ஆ..ஆ...
இதயம் மேவியக் காதலினாலே
ஏங்கிடும் அல்லியைப் பாராய்..
புது மலர் வீணே வாடிவிடாமல்..
புது மலர் வீணே வாடிவிடாமல்..
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

அமுதைப் பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

Thursday, 23 October 2014

அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில்... - தங்கமலை இரகசியம் (29.06.1957)



அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில்...
படம் : தங்கமலை இரகசியம் (29.06.1957)
பாடியவர் : இசைக்குயில் பி.சுசீலா
இசை : டி.ஜி.லிங்கப்பா
இயற்றியவர் : யதார்த்தக் கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்
நடிப்பு : நடிகர் திலகம் - ஜமுனா - டி.ஆர்.இராஜகுமாரி 
இயக்கம் : பி.ஆர்.பந்தலு 
தயாரிப்பு : பத்மினி பிக்சர்ஸ் - பி.ஆர்.பந்தலு

ஓ... ஓ...  ஓ... ஓ...ஓ....  ஓ... ஓ...  ஓ... ஓ...

அமுதைப் பொழியும் நிலவே....
நீ... அருகில் வராததேனோ?... ஓ... 
அருகில் வராததேனோ?... ஓ...

அமுதைப் பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

அமுதைப் பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

இதயம் மேவியக் காதலினாலே
ஏங்கிடும் அல்லியைப் பாராய்..
ஆ... ஆ... ஆ... ஆ...ஆ... ஆ..ஆ...
இதயம் மேவியக் காதலினாலே
ஏங்கிடும் அல்லியைப் பாராய்..

புது மலர் வீணே வாடிவிடாமல்..
புது மலர் வீணே வாடிவிடாமல்..
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

அமுதைப் பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

மனதில் ஆசையை மூட்டிய பின்னே
மறந்தே ஓடிடலாமா?.
ஆ... ஆ... ஆ... ஆ...ஆ... ஆ..ஆ... 
மனதில் ஆசையை மூட்டிய பின்னே
மறந்தே ஓடிடலாமா? 
இனிமை நினைவும் இளமை வளமும்..
இனிமை நினைவும் இளமை வளமும்..
கனவாய் கதையாய் முடியும் முன்னே..
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ

அமுதைப் பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ?
அருகில் வராதாதேனோ?

Saturday, 18 October 2014

ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே.. - காக்க காக்க (01.08.2003)



ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே
படம் : காக்க காக்க (01.08.2003)
பாடியவர் : கார்த்திக் 
இசை : ஹாரிஸ் ஜெயராஜ் 
இயற்றியவர் : தாமரை 
நடிப்பு : ஜோதிகா - சூர்யா 
இயக்கம் : கெளதம் மேனன் 
தயாரிப்பு : கலைப்புலி தாணு 
( இன்று பிறந்தநாள் காணும் ஜோதிகாவுக்காக இப்பாடல்)

She is a fantasy shanana nana oh oh
Sweet as a harmony shanana nana oh oh
No no no she is a mystery shanana nana oh oh
Fills your heart with ecstasy oh oh yeah yeah hey..


லால்லலா.. லலலா...லால்லலா...லலலா..
ஒரு ஊரில் அழகே உருவாய் 
ஒருத்தி இருந்தாளே..
அழகுக்கே இலக்கணம் எழுத 
அவளும் பிறந்தாளே..
அவள் பழகும் விதங்களைப் பார்க்கையிலே..
பல வருட பரிச்சயம் போலிருக்கும்..
எதிலும் வாஞ்சைகள்தான் இருக்கும்..
முதலாம் பார்வையிலே..
 மனதை ஈர்ப்பாளே..
ஒரு ஊரில் அழகே உருவாய் 
ஒருத்தி இருந்தாளே..
அழகுக்கே இலக்கணம் எழுத 
அவளும் பிறந்தாளே..

மரகத சோம்பல் முறிப்பாளே..
புல்வெளி போலே சிலிர்ப்பாளே..
விரல்களை ஆட்டி ஆட்டிப் பேசும்போதிலே..
காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே..
அவள் கன்னத்தின் குழியில்
சிறு செடிகளும் நடலாம்..
அவள் கன்னத்தின் குழியில் 
அழகழகாய்..
சிறு செடிகளும் நடலாம் 
விதவிதமாய்..
ஏதோ ஏதோ தனித்துவம் அவளிடம் ததும்பிடும் 
ததும்பிடுமே..
ஒரு ஊரில் அழகே உருவாய் 
ஒருத்தி இருந்தாளே..
அழகுக்கே இலக்கணம் எழுத 
அவளும் பிறந்தாளே..

மகரந்தம் தாங்கும் மலர்போலே..
தனி ஒரு வாசம் அவள்மேலே..
புடவையின் தேர்ந்தமடிப்பில் 
விசிறிவாழைகள்..
தோள்களில் ஆடும் கூந்தல் 
கரிசல்காடுகள்..
அவள் கடந்திடும்போது..
தலை அணிச்சையாய் திரும்பும்..
அவள் கடந்திடும்போது.. 
நிச்சயமாய்..
தலை அணிச்சையாய் திரும்பும்.. 
அவள்புறமாய்..
என்ன சொல்ல என்ன சொல்ல
இன்னும் சொல்ல மொழியினில் வழி இல்லையே

அவள் பழகும் விதங்களைப் பார்க்கையிலே..

பார்க்கையிலே..

பல வருட பரிச்சயம் போலிருக்கும்..

போலிருக்கும்..

எதிலும் வாஞ்சைகள்தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே 
மனதை ஈர்ப்பாளே
முதல்முதல் பார்வையிலே 
மனதை ஈர்ப்பாளே..

Sunday, 12 October 2014

மன்னிப்பாயா? மன்னிப்பாயா? - விண்ணைத்தாண்டி வருவாயா (26.02.2010)



மன்னிப்பாயா? மன்னிப்பாயா?
படம் : விண்ணைத்தாண்டி வருவாயா (26.02.2010) 
பாடியவர்கள் : இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் - ஸ்ரேயா கோஷல் 
இயற்றியவர் : தாமரை - திருவள்ளுவர் குறளுடன் 
இசை : இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்
நடிப்பு : சிலம்பரசன் - த்ரிஷா 
இயக்கம் : கெளதம் மேனன் 
தயாரிப்பு : மதன் - கணேஷ் ஜனார்தனன் - எல்ரெட் குமார் -
ஜெயராமன்

கடலினில் மீனாக இருந்தவள் நான்..
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்..
துடித்திருந்தேன் தரையினிலே..
திரும்பிவிட்டேன் கடலிடமே..

ஒரு நாள் சிரித்தேன்..
மறு நாள் வெறுத்தேன்..
உனை நான் கொல்லாமல்..
கொன்று புதைத்தேனே..
மன்னிப்பாயா? மன்னிப்பாயா?
மன்னிப்பாயா?

ஒரு நாள் சிரித்தேன்..
மறு நாள் வெறுத்தேன்..
உனை நான் கொல்லாமல்..
கொன்று புதைத்தேனே..
மன்னிப்பாயா? மன்னிப்பாயா?
மன்னிப்பாயா? மன்னிப்பாயா?
மன்னிப்பாயா?

கண்ணேத் தடுமாறி நடந்தேன்..
நூலில் ஆடும் மழையாகிப் போனேன்.
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே..
தொலை தூரத்தில்.. வெளிச்சம் நீ..
உனை நோக்கியே.. எனை ஈர்க்கிறாயே..
மேலும், மேலும், உருகி. உருகி
உனை எண்ணி ஏங்கும்..
இதயத்தை என்ன செய்வேன்..
ஓ... ஓ உனை எண்ணி ஏங்கும்..
இதயத்தை என்ன செய்வேன்..

ம்ம்ம்ம். ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்..
உள்ளே.. உள்ள ஈரம் நீ தான்..
வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன்..
மன்னிப்பாயா? அன்பே..

காற்றிலே ஆடும் காகிதம் நான்..
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்..
அன்பில் தொடங்கி.. 
அன்பில் முடிக்கிறேன்..
என் கலங்கரை விளக்கமே..

ஒரு நாள் சிரித்தேன்..
மறு நாள் வெறுத்தேன்..
உனை நான் கொல்லாமல்..
கொன்று புதைத்தேனே..
மன்னிப்பாயா? மன்னிப்பாயா?
மன்னிப்பாயா? மன்னிப்பாயா?

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?  ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்..
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்:  அன்புடையார்
என்றும் உரியர் பிறர்க்கு..
புலம்பல் எனச் சென்றேன் கூவினேன் - நெஞ்சம் 
கலத்தல் உருவது கண்டேன்

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ..
போவாயோ காணல் நீர் போலே தோன்றி..
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்..
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்..

ஒரு நாள் சிரித்தேன்..
மறு நாள் வெறுத்தேன்..
உனை நான் கொல்லாமல்..
கொன்று புதைத்தேனே..
மன்னிப்பாயா? மன்னிப்பாயா?
மன்னிப்பாயா? மன்னிப்பாயா?

கண்ணேத் தடுமாறி நடந்தேன்..
நூலில் ஆடும் மழையாகிப் போனேன்..
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே..
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ...
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே..
மேலும், மேலும், உருகி, உருகி,
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

மேலும், மேலும், உருகி, உருகி
உனை எண்ணி ஏங்கும்..
இதயத்தை என்ன செய்வேன்..
ஓ... ஓ.. உனை எண்ணி ஏங்கும்..
இதயத்தை என்ன செய்வேன்..

உனக்கென நான் எனக்கென நீ.. - காதலில் விழுந்தேன் (26.09.2008)



உனக்கென நான் எனக்கென நீ..
படம் : காதலில் விழுந்தேன் (26.09.2008)
பாடியவர்கள் : சக்தி ஸ்ரீ கோபாலன்  -  விஜய் ஆண்டனி 
இசை : விஜய் ஆண்டனி 
இயற்றியவர் : தாமரை 
நடிப்பு : நகுல் - சுனைனா
இயக்கம் : பி.வி.பிரசாத் 
தயாரிப்பு : எஸ்.உமாபதி 
(கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் வெளியீடு)

உனக்கென நான் எனக்கென நீ..
நினைக்கையில் இனிக்குதே..
உடலேன நான் உயிரென நீ.. 
இருப்பது பிடிக்குதே..

உனதுயிராய் எனதுயிரும் 
உலவிடத் துடிக்குதே..
தனியொரு நான் தனியொரு நீ 
நினைக்கவும் வலிக்குதே..

இதயத்தை எதற்காக? எதற்காக?  
இடம் மாற்றினாய்
இனிக்கும் ஒரு துன்பத்தை 
குடியேற்றினாய்..
புதுமைகள் தந்து 
மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்த..
பரிசுகள் தேடி தேடிப்பார்..  
கசந்திடும் சேதி வந்தால்..
பகிர்ந்திட பக்கம் நீ இருப்பாய்.. 
நோய் எனக் கொஞ்சம் படுத்தால்
தாயென  மாறி அணைப்பாய்.. 
உனது காதலில் விழுந்தேன்..
அருகினில் வா.. 
அருகினில் வா.. 
இடைவெளி வலிக்குதே..
உனதுயிரில் எனதுயிரை 
ஊற்றிட துடிக்குதே..
நானென நீ..  
நீ என நான் நினைந்திட பிடிக்கும்..
புது உலகம் புது சரகம் 
படைத்திட தவிக்குதே..
மழை வெயில் காற்றோடு.. 
பூகம்பம் வந்தாலுமே..
உனது மடியில் நான் தூங்கும் வீடாகுமே..
அருகினில் வந்து.. 
மடியினில் சாய்ந்து படுத்தால்..
மெல்லிய குரலில் இசைப்பாய்.. 
மார்பினில் முகத்தை புதைத்தால்
கூந்தலை கோதிக் கொடுப்பாய்.. 
அணைப்பிணில் மயங்கிக் கிடந்தால்..
அசைந்திடக் கூட மறுப்பாய்.. 
உனது காதலில்.. விழுந்தேன்..
மரணமே பயந்திடும் தூரத்தில் 
நாமும் வாழ்கின்றோம்..
மனித நிலை தாண்டிப் போகிறோம்..
இனி நமக்கென்றும்.. 
பிரிவில்லையே.. 
ஓ..ஓ..ஓ.. பிரிவில்லையே..

எனக்கென எதுவும் செய்தாய். 
உனக்கென என்ன நான் செய்வேன்..
பொங்கிடும் நெஞ்சின் உணர்வை.. 
சொல்லவும் வார்த்தை போதாதே..
விழிகளின் ஓரம் துளிர்க்கும்.. 
ஒரு துளி நீரே சொல்லட்டும்..
உனது காதலில் விழுந்தேன்..

உனக்கென நான் எனக்கென நீ..
நினைக்கையில் இனிக்குதே..
உடலேன நான் உயிரென நீ.. 
இருப்பது பிடிக்குதே..

கண்ணே வண்ணப் பசுங்கிளியே - யானை வளர்த்த வானம்பாடி (27.11.1959)

KANNE VANNA PASUNKILIYE - YAANAI VALARTHA VAANAMPAADI - RARE - TAMIL REMIX

கண்ணே வண்ணப் பசுங்கிளியே
படம்: யானை வளர்த்த வானம்பாடி (27.11.1959)
பாடியவர் : சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்
பாடல் : கவிஞர்.கு.மா.பாலசுப்பிரமணியம்
இசையமைப்பாளர் : பிரதர் சுப்ரமணியன்
நடிப்பு : ஸ்ரீராம்
இயக்கம்: பி. சுப்பிரமணியம்
தயாரிப்பு : நீலா புரொக்சன்ஸ்
 "யானை வளர்த்த வானம்பாடி" திரைப்படத்தில் கவிஞர்.கு.மா.பா. எழுதிய அருமையான தமிழ் சொற்களில் அமைந்த தேனினும் இனிய தாலாட்டைக் கேளுங்கள்.


கண்ணே வண்ணப் பசுங்கிளியே - என்
கண்ணின் பாவையே கண்ணுறங்காயே
கண்ணே வண்ணப் பசுங்கிளியே - என்
கண்ணின் பாவையே கண்ணுறங்காயே
பொன்னே உன்னெழில் புன்னகை போதும்
பூவே தாமரை கண்ணுறங்காயே...

தேடாத செல்வத்தைப் போலே நீ வந்தாய்
சிந்தையில் இன்பமாய் என்றும் நிறைந்தாய்
தேடாத செல்வத்தைப் போலே நீ வந்தாய்
சிந்தையில் இன்பமாய் என்றும் நிறைந்தாய்
ஓடையின் நீரில் ஆடிடும் மீன் போல் - என்
உள்ளத்திலே துள்ளி ஆடுகின்றாய்

வாடாதப் பூவாக சூடாத முத்தாக
மாயம் காட்டிடும் கண்மணியே
காடும் கமழ்ந்திடும் மல்லிகை நீயே
கண்ணின் பாவையே கண்ணுறங்காயே
கண்ணே வண்ணப் பசுங்கிளியே - என்
கண்ணின் பாவையே கண்ணுறங்காயே

நாட்டின் மனிதர்கள் மூட்டிடும் தொல்லை
நம்பிக்கை மோசங்கள் இங்கேதும் இல்லை
காட்டு விலங்கும் வேடிக்கைக் காட்டும்
களங்கமில்லா அன்புக்கு ஈடுமில்லை
நாட்டிய மாடிடும் மாமயிலைக் கண்டு
கானம் பாடும் குயிலும் உண்டு
காராம் பசு தந்த பாலமுதுண்டு
கண்ணின் பாவையே கண்ணுறங்காயே
கண்ணே வண்ணப் பசுங்கிளியே - என்
கண்ணின் பாவையே கண்ணுறங்காயே

Saturday, 11 October 2014

பூங்காற்றே.. பூங்காற்றே.. பூப்போல வந்தாள் இவள் - பையா (02.04.2010)



பூங்காற்றே.. பூங்காற்றே.. பூப்போல வந்தாள் இவள்
படம்: பையா (02.04.2010)
பாடியவர்: பென்னி தயால்
இயற்றியவர் : கவிஞர் நா.முத்துக்குமார்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
நடிப்பு : கார்த்திக் - தமன்னா 
இயக்குனர் : என்.லிங்குசாமி 
தயாரிப்பு : என்.சுபாஷ் சந்திரபோஸ் - என்.லிங்குசாமி 

பூங்காற்றே.. பூங்காற்றே.. 
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழியெல்லாம் 
சந்தோஷம் தந்தாள் இவள்
என் நெஞ்சோடு பேசும் 
இந்தப் பெண்ணோடப் பாசம்
இவள் கண்ணோடுப் பூக்கும் 
பல விண்மீன்கள் பேசும்
என் காதல் சொல்ல 
ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே 
இனி கனவே இல்லை
பூங்காற்றே.. பூங்காற்றே.. 
பூப்போல வந்தாள் இவள்..
போகின்ற வழியெல்லாம் 
சந்தோஷம் தந்தாள் இவள்..

மஞ்சள் வானம்.. 
கொஞ்சம் மேகம்..
கொஞ்சிப் பேசும்.. 
காற்று தொட்டுச் செல்லுதே..
நிறுத்தாமல் சிரிக்கின்றேன்
இந்த நிமிடங்கள் புன்னகையைப்  
பூட்டிக்கொண்டதே
கண்ணாடி சரி செய்து பின்னாடி
உன் கண்ணைப் பார்க்கின்றேன்.. 
பார்க்கின்றேன்..
பெண்ணே நான் உன் முன்னே 
ஒரு வார்த்தைப் பேசாமல்
தோற்கின்றேன்.. 
தோற்கின்றேன்..
வழிப்போக்கன் போனாலும் 
வழியில் காலடித்தடயம் இருக்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி 
வாசனையோடு நினைவிருக்கும்
பூங்காற்றே.. பூங்காற்றே.. 
பூப்போல வந்தாள் இவள்..
போகின்ற வழியெல்லாம் 
சந்தோஷம் தந்தாள் இவள்..

அழகான நதிப்பார்த்தால்.. 
அதன் பெயரினைக் கேட்க மனம் துடிக்கும்..
இவள் யாரோ என்னப் பேரோ..
 நானே அறிந்திடும் வரையில் ஒரு மயக்கம்..
ஏதேதோ ஊர்த் தாண்டி ஏராளம் பேர்த்தாண்டி
போகின்றேன்.. 
போகின்றேன்..
நில்லென்று சொல்கின்ற 
நெடுஞ்சாலை விளக்காக..
அணைகின்றேன் எரிகின்றேன்..
மொழித்தெரியாப்  பாடலிலும் 
அர்த்தங்கள் இன்று புரிகிறதே..
வழித்துணையாய் நீ வந்தாய்
போகும் தூரம் குறைகிறதே..

என் நெஞ்சோடு வீசும் 
இந்தப் பெண்ணோடப் பாசம்..
இவள் கண்ணோடுப் பூக்கும்.. 
பல விண்மீன்கள் பேசும்..
என் காதல் சொல்ல ஒரு வார்த்தை இல்லை..
என் கண்ணுக்குள்ளே இனி கனவே இல்லை..
பூங்காற்றே.. பூங்காற்றே.. 
பூப்போல வந்தாள் இவள்..
போகின்ற வழியெல்லாம் 
சந்தோஷம் தந்தாள் இவள்..