Thursday, 23 October 2014

அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில்... - தங்கமலை இரகசியம் (29.06.1957)



அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில்...
படம் : தங்கமலை இரகசியம் (29.06.1957)
பாடியவர் : இசைக்குயில் பி.சுசீலா
இசை : டி.ஜி.லிங்கப்பா
இயற்றியவர் : யதார்த்தக் கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம்
நடிப்பு : நடிகர் திலகம் - ஜமுனா - டி.ஆர்.இராஜகுமாரி 
இயக்கம் : பி.ஆர்.பந்தலு 
தயாரிப்பு : பத்மினி பிக்சர்ஸ் - பி.ஆர்.பந்தலு

ஓ... ஓ...  ஓ... ஓ...ஓ....  ஓ... ஓ...  ஓ... ஓ...

அமுதைப் பொழியும் நிலவே....
நீ... அருகில் வராததேனோ?... ஓ... 
அருகில் வராததேனோ?... ஓ...

அமுதைப் பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

அமுதைப் பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

இதயம் மேவியக் காதலினாலே
ஏங்கிடும் அல்லியைப் பாராய்..
ஆ... ஆ... ஆ... ஆ...ஆ... ஆ..ஆ...
இதயம் மேவியக் காதலினாலே
ஏங்கிடும் அல்லியைப் பாராய்..

புது மலர் வீணே வாடிவிடாமல்..
புது மலர் வீணே வாடிவிடாமல்..
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

அமுதைப் பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

மனதில் ஆசையை மூட்டிய பின்னே
மறந்தே ஓடிடலாமா?.
ஆ... ஆ... ஆ... ஆ...ஆ... ஆ..ஆ... 
மனதில் ஆசையை மூட்டிய பின்னே
மறந்தே ஓடிடலாமா? 
இனிமை நினைவும் இளமை வளமும்..
இனிமை நினைவும் இளமை வளமும்..
கனவாய் கதையாய் முடியும் முன்னே..
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ

அமுதைப் பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ?
அருகில் வராதாதேனோ?

No comments:

Post a Comment