Friday, 24 October 2014

வாழ்க்கை என்னும் ஓடம்.. - பூம்புகார் (1964)



வாழ்க்கை என்னும் ஓடம்.. 
படம் : பூம்புகார் (1964)
பாடியவர் : கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் 
இசை : ஆர்.சுதர்சனம் 
இயற்றியவர் : தலைவர் கலைஞர் அவர்கள்
நடிப்பு :  கே.பி.சுந்தராம்பாள்  - எஸ்.எஸ்.ஆர். - விஜயகுமாரி 
இயக்கம் : ப.நீலகண்டன் 
தயாரிப்பு : மேகலா பிக்சர்ஸ்

ஒருவனுக்கு ஒருத்தியென்ற 
உயிர்மூச்சை உள்ளடக்கி..
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பதில்லாயின் நன்று எனும்
திருக்குறளை மறவாதே.. 
திருக்குறளை மறவாதே..
திசை தவறிப் போகாதே.. 
ஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏஏ

வாழ்க்கை என்னும் ஓடம்.. 
வழங்குகின்ற பாடம்..
மானிடரின் மனதினிலே.. 
மறக்கவொண்ணா வேதம்..
வாழ்க்கை என்னும் ஓடம்.. 
வழங்குகின்ற பாடம்..
மானிடரின் மனதினிலே.. 
மறக்கவொண்ணா வேதம்..
வாழ்க்கை என்னும் ஓடம்..

வாலிபம் என்பது களைகின்ற வேடம்..
அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்..
வாலிபம் என்பது களைகின்ற வேடம்..
அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்..
வருமுன் காப்பவன்தான் அறிவாளி-துயர் 
வருமுன் காப்பவன்தான் அறிவாளி..
அது வந்தபின்னே தவிப்பவன்தான் ஏமாளி..

துடுப்புகள் இல்லா படகு
அலைகள் அழைக்கின்ற திசையெலாம் போகும்..
தீமையைத் தடுப்பவர் இல்லா வாழ்வும்..
அந்த படகின் நிலை போலே ஆகும்..
அந்த படகின் நிலை போலே ஆகும்..
வாழ்க்கை என்னும் ஓடம்.. 
வழங்குகின்ற பாடம்..
மானிடரின் மனதினிலே.. 
மறக்கவொண்ணா வேதம்..
வாழ்க்கை என்னும் ஓடம்.. 

3 comments:

  1. களைகின்ற என்பது தப்பு.
    கலைகின்ற என்பதே சரி.
    திருத்தவும்.

    ReplyDelete
    Replies
    1. "கலைகின்ற என்பதே சரி" என்று சொல்வதுதான் சரியானது.

      Delete
  2. திருவிளையாடல் படத்தில் ஒரு வசனம்
    பேசுபவர் நாகேஷ்
    பேசும்போது இலக்கணமாபேசு
    எழுதும்போது எண்ணையும் கவனிக்காதே
    கோட்டிற்கு.
    இந்த பாடலை இயற்றியவர்
    எழுதும்போது எழுதவதற்கே இலக்கணமாக திகழ்வார் இலக்கணமாஎழுதுவார்
    வாழும்போது அதற்கு நேர்மாறாக இறுதி மூச்சுவரை வாழ்ந்தார்
    எனக்கொரு சந்தேகம் இவர் வேறு ஒரு ஆள் வைத்து எழுதி அதை தன் பாட்டு தன் வசனம்
    என்றுகூறி

    அந்த இரகசியத்தை வெளிவராமல் காப்பாற்றியிருப்பாரோ


    ReplyDelete