Sunday, 12 October 2014

கண்ணே வண்ணப் பசுங்கிளியே - யானை வளர்த்த வானம்பாடி (27.11.1959)

KANNE VANNA PASUNKILIYE - YAANAI VALARTHA VAANAMPAADI - RARE - TAMIL REMIX

கண்ணே வண்ணப் பசுங்கிளியே
படம்: யானை வளர்த்த வானம்பாடி (27.11.1959)
பாடியவர் : சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்
பாடல் : கவிஞர்.கு.மா.பாலசுப்பிரமணியம்
இசையமைப்பாளர் : பிரதர் சுப்ரமணியன்
நடிப்பு : ஸ்ரீராம்
இயக்கம்: பி. சுப்பிரமணியம்
தயாரிப்பு : நீலா புரொக்சன்ஸ்
 "யானை வளர்த்த வானம்பாடி" திரைப்படத்தில் கவிஞர்.கு.மா.பா. எழுதிய அருமையான தமிழ் சொற்களில் அமைந்த தேனினும் இனிய தாலாட்டைக் கேளுங்கள்.


கண்ணே வண்ணப் பசுங்கிளியே - என்
கண்ணின் பாவையே கண்ணுறங்காயே
கண்ணே வண்ணப் பசுங்கிளியே - என்
கண்ணின் பாவையே கண்ணுறங்காயே
பொன்னே உன்னெழில் புன்னகை போதும்
பூவே தாமரை கண்ணுறங்காயே...

தேடாத செல்வத்தைப் போலே நீ வந்தாய்
சிந்தையில் இன்பமாய் என்றும் நிறைந்தாய்
தேடாத செல்வத்தைப் போலே நீ வந்தாய்
சிந்தையில் இன்பமாய் என்றும் நிறைந்தாய்
ஓடையின் நீரில் ஆடிடும் மீன் போல் - என்
உள்ளத்திலே துள்ளி ஆடுகின்றாய்

வாடாதப் பூவாக சூடாத முத்தாக
மாயம் காட்டிடும் கண்மணியே
காடும் கமழ்ந்திடும் மல்லிகை நீயே
கண்ணின் பாவையே கண்ணுறங்காயே
கண்ணே வண்ணப் பசுங்கிளியே - என்
கண்ணின் பாவையே கண்ணுறங்காயே

நாட்டின் மனிதர்கள் மூட்டிடும் தொல்லை
நம்பிக்கை மோசங்கள் இங்கேதும் இல்லை
காட்டு விலங்கும் வேடிக்கைக் காட்டும்
களங்கமில்லா அன்புக்கு ஈடுமில்லை
நாட்டிய மாடிடும் மாமயிலைக் கண்டு
கானம் பாடும் குயிலும் உண்டு
காராம் பசு தந்த பாலமுதுண்டு
கண்ணின் பாவையே கண்ணுறங்காயே
கண்ணே வண்ணப் பசுங்கிளியே - என்
கண்ணின் பாவையே கண்ணுறங்காயே

No comments:

Post a Comment