இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது?
படம் : வல்லவன் ஒருவன் (11.11.1966)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா
இசை : வேதா
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
நடிப்பு : ஜெய்சங்கர் - எல்.விஜயலக்ஷ்மி
இயக்கம் : ஆர்.சுந்தரம் பி.ஈ.,
தயாரிப்பு : மாடர்ன் தியேட்டர்ஸ்
இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது?
இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது?
நான் கேட்டதை தருவாய் இன்றாவது..
இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால் என்னாவது?
இந்த கேள்விக்குத் தானா பெண்ணானது?
நெஞ்சக் கோட்டையை திறப்பாய் இன்றாவது..
இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது?
மாலைக்கு மாலை காதலர் பேசும்
வார்த்தைகள் பேசிட வேண்டும்..
பேசிடும் போதே.. கைகளினாலே..
வேடிக்கை செய்யவும் வேண்டும்..
அதில் ஆடி வரும்.. இன்பம் ஓடி வரும்..
இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது?
இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது?
நான் கேட்டதை தருவாய் இன்றாவது..
இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது?
காட்டுப் புறாக்கள் கூட்டுக்குள் பாடும்
பாட்டுக்கு யார் துணை வேண்டும்..
தோட்டத்துப் பூவை மார்புக்கு மேலே
சூடிட யார் சொல்ல வேண்டும்..
இங்கு யாருமில்லை.. இனி நேரமில்லை..
இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால் என்னாவது?
இந்த கேள்விக்குத் தானா பெண்ணானது?
நெஞ்சக் கோட்டையை திறப்பாய் இன்றாவது..
இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால் என்னாவது?
செண்பகப் பூவில் வண்டு விழுந்து
தேன் குடித்தாடுதல் போலே..
கேட்பதை கேட்டு.. பார்ப்பதை பார்த்து..
வாழ்ந்திட துடிப்பதனாலே
இனி பிரிவதில்லை.. உன்னை விடுவதில்லை..
இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது?
இன்னும் கேட்டுக் கொண்டிருந்தால் என்னாவது?