Thursday, 6 November 2014

யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே - கெளரவம் (1973)



யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே..
படம் : கெளரவம் (1973)
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் - பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்..விஸ்வநாதன் 
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன் 
நடிப்பு : நடிகர் திலகம் - உஷா நந்தினி  
இயக்கம் : வியட்நாம் வீடு சுந்தரம் 
தயாரிப்பு : வியட்நாம் மூவீஸ் (எஸ்.இரங்கராஜன்)

யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே..
கண்ணன் போவதெங்கே?..ஏ..ஏ...
கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே..
மன்னன் போவதெங்கே?
யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே..
கண்ணன் போவதெங்கே?..ஏ..ஏ...
கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே..
மன்னன் போவதெங்கே?

நினைக்கும் நினைப்போ புரிகின்றது..
சிரிக்கும் சிரிப்போ அழைக்கின்றது..
நினைக்கும் நினைப்போ புரிகின்றது..
சிரிக்கும் சிரிப்போ அழைக்கின்றது..
கண்ணனின் ஆசைகள் காற்றினில் போவதோ?
சொல்லடி என் பைங்கிளி..

யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே..
கண்ணன் போவதெங்கே?..ஏ..ஏ...
கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே..
மன்னன் போவதெங்கே?

ஆஹாஹா... ஆஹாஹா...  ஹாஹாஹா...   
ஆஹாஹா... ஹா... ஆஹாஹா...

ஜொலிக்கும் உடம்பு துடிக்கின்றது..
அணைக்கும் மயக்கம் பிறக்கின்றது..
ஜொலிக்கும் உடம்பு துடிக்கின்றது..
அணைக்கும் மயக்கம் பிறக்கின்றது..
ராதையின் பார்வையில் போதையும் இல்லையோ?
பாருங்கள் என் கண்களை..
யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே..
கண்ணன் போவதெங்கே?..ஏ..ஏ...
கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே..
மன்னன் போவதெங்கே?

ஆஹாஹா... ஓஹோ...  ஆஹே...   
ஆஹாஹா... ஓஹோ...  ஹா..

பயத்தில் மனது தவிக்கின்றது..
இருந்தும் விருந்தை நினைக்கின்றது..

கொடுத்தால் பயமும் குறைகின்றது..
எடுத்தால் சுகமும் வருகின்றது..

மாலைகள் ஆனதும் நீ சொல்லும் நாடகம்..

காத்திருப்பேன் மன்னவா..

யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே..
கண்ணன் போவதெங்கே?..ஏ..ஏ...

கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே..
மன்னன் போவதெங்கே?

ஆ...  னான னானன னா

ஓ... டாட டாடட டா...

No comments:

Post a Comment