இதயவானின் உதய நிலவே எங்கே போகிறாய்?..
படம் : பார்த்திபன் கனவு (03.06.1960)
பாடியவர்கள் : ஏ.எம்.இராஜா - பி.சுசீலா
இசை : வேதா
இயற்றியவர் : விந்தன்
நடிப்பு : ஜெமினி கணேசன் - வைஜயந்தி மாலா
இயக்குனர் : டி.யோகானந்த்
தயாரிப்பு : ஜூப்லி பிலிம்ஸ் (வி.கோவிந்தராஜன்)
(கல்யாணி இராகத்தில் அமைந்த இனிய இசை)
இதயவானின் உதய நிலவே..
எங்கே போகிறாய்? நீ எங்கே போகிறாய்?..
ஒளியில்லாத உலகம்போல..
உள்ளம் இருளுதே..
என் உள்ளம் இருளுதே..
கண்கள் செய்த பாபம் உன்னைக்
கண்டும் காணாதேங்குதே..
கண்டும் காணாதேங்குதே..
பாய்விரித்து கப்பல் செல்ல..
பாவி நெஞ்சம் துடிக்குதே..
பாவி நெஞ்சம் துடிக்குதே..
இதயவானின் உதய நிலவே..
எங்கே போகிறாய்? நீ எங்கே போகிறாய்?..
இருளகற்றும் ஒளியென்று..
என்னை என்னும் நீ யாரோ?
என்னை என்னும் நீ யாரோ?
இருளகற்றும் ஒளியென்று..
என்னை என்னும் நீ யாரோ?
என்னை என்னும் நீ யாரோ?
கண்டு காணாதேங்கும் கண்கள்
காதல் கண்களோ?
காதல் கண்களோ?
இதயவானின் உதய நிலவே..
எங்கே போகிறேன்? நான் எங்கே போகிறேன்?
ஆசை நெஞ்சின் நேசக்கரங்கள்..
அணைக்க உன்னைத் தேடுதே..
அணைக்க உன்னைத் தேடுதே..
பறந்து வந்து உன்னைத் தழுவ..
பறந்து வந்து உன்னைத் தழுவ..
பாழும் சிறகு இல்லையே?
பாழும் சிறகு இல்லையே?
இதயவானின் உதய நிலவே..
எங்கே போகிறாய்? நீ எங்கே போகிறாய்?
No comments:
Post a Comment