வான் எங்கும் நீ மின்ன..
படம் : என்றென்றும் புன்னகை (20.12.2013)
பாடியவர்கள் : ஆலப் இராஜு - தேவன் - ஹரிணி
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்: மதன் கார்கி
நடிப்பு : ஜீவா - த்ரிஷா
இயக்கம் : ஐ.அஹமது
தயாரிப்பு : டாக்டர் வி.இராமதாஸ் - ஜி.கே.எம்.தமிழ்குமரன்
வான் எங்கும் நீ மின்ன.. மின்ன..
நானென்ன நானென்ன பண்ண.. பண்ண..
என் எண்ணக் கிண்ணத்தில் நீ உன்னை ஊற்றினாய்..
கை அள்ளியே வெண் விண்ணிலே..
ஏன் வண்ணம் மாற்றினாய்?
வான் எங்கும் நீ மின்ன.. மின்ன..
நானென்ன நானென்ன பண்ண.. பண்ண..
என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய்
அந்நூலிலே உன் நெஞ்சினை ஏன் கோர்க்க பார்க்கிறாய்?
ஓ..ஓஹோ… பிரியாபிரியா..
இதயத்தின் அதிர்வு நீயா?
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே..
தரை வந்த வரம் நீயா?
ஓ..ஓஹோ பிரியாபிரியா..
இதயத்தின் அதிர்வு நீயா?
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே
தரை வந்த வரம் நீயா?
பூக்கள் இல்லா உலகினிலே.. ஹே…
பூக்கள் இல்லா உலகினிலே..
வாழ்ந்தேனே உன்னை காணும் வரை…
நான் இன்றோ பூவுக்குள்ளே சிறை..
பெண் வாசம் என் வாழ்வில்..
இல்லை என்றேனே..
உன் வாசம் நுரையீரல்..
நான் தீண்ட கண்டேனே..
மூச்சும் முத்ததால்
உன் மேல் கதல் கொண்டேனே..
வான் எங்கும் நீ மின்ன.. மின்ன
நானென்ன நானென்ன பண்ண.. பண்ண
என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய்
அந்நூலிலே உன் நெஞ்சினை ஏன் கோர்க்க பார்க்கிறாய்?
சே ஹே…ஹே…யோ…த்ரு…ரோ…ரோ
சே ஹே…ஹே…யோ…த்ரு…ரோ…ரோ
பாலை ஒன்றாய் வரைந்திருந்தேன்..
நீ காதல் நதியென வந்தாய்..
என் வாழ்வில் பசுமைகள் தந்தாய்..
ஓய்.. என் நெஞ்சம் நீரேன்றால்..
நீந்தும் மீனா நீ?
என் காதல் காடேன்றால்..
மேயும் மானா நீ?
எந்தன் வெட்கத்தீயில்
குளிர் காயும் ஆணா நீ?
வான் எங்கும் நீ மின்ன.. மின்ன..
நானென்ன நானென்ன பண்ண.. பண்ண..
என் வானவில்லிலே நீ நூல் பறிக்கிறாய்..
அந்நூலிலே உன் நெஞ்சினை ஏன் கோர்க்க பார்க்கிறாய்?
ஓ..ஓஹோ… பிரியாபிரியா..
இதயத்தின் அதிர்வு நீயா?
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே..
தரை வந்த வரம் நீயா?
ஓ..ஓஹோ பிரியாபிரியா..
இதயத்தின் அதிர்வு நீயா?
எனது உணர்வுகள் தவம் கிடந்ததே
தரை வந்த வரம் நீயா?
No comments:
Post a Comment