Wednesday, 5 November 2014

தூங்காத கண்ணென்று ஒன்று.. - குங்குமம் (12.08.1963)



தூங்காத கண்ணென்று ஒன்று..
படம் : குங்குமம் (12.08.1963)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா
இசை : கே.வி.மகாதேவன் 
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்  
நடிப்பு : நடிகர் திலகம் - சாரதா 
இயக்கம் : கிருஷ்ணன் - பஞ்சு 
தயாரிப்பு : ராஜாமணி பிக்சர்ஸ் (கே.மோகன்)

தூங்காத கண்ணென்று ஒன்று.. 
துடிக்கின்ற சுகமென்று ஒன்று.. 
தாங்காத மனமென்று ஒன்று.. 
தந்தாயே நீ என்னைக் கண்டு.. 

தூங்காத கண்ணென்று ஒன்று.. 
துடிக்கின்ற சுகமென்று ஒன்று.. 
தாங்காத மனமென்று ஒன்று.. 
தந்தாயே நீ என்னைக் கண்டு.. 

தூங்காத கண்ணென்று ஒன்று.. 

முற்றாத இரவொன்றில் நான் வாட.. 
முடியாத கதை ஒன்று நீ பேச..
முற்றாத இரவொன்றில் நான் வாட.. 
முடியாத கதை ஒன்று நீ பேச..

உற்றாரும் காணாமல் உயிரொன்று சேர்ந்தாட.. 
உண்டாகும் சுவையென்று ஒன்று.. 
உற்றாரும் காணாமல் உயிரொன்று சேர்ந்தாட.. 
உண்டாகும் சுவையென்று ஒன்று.

தூங்காத கண்ணென்று ஒன்று..

யார் என்ன சொன்னாலும் செல்லாது ..
அணை போட்டுத் தடுத்தாலும் நில்லாது..
யார் என்ன சொன்னாலும் செல்லாது ..
அணை போட்டுத் தடுத்தாலும் நில்லாது..

தீராத விளையாட்டுத் திரை போட்டு விளையாடி.. 
நம் காணும் உலகென்று ஒன்று.. 
தீராத விளையாட்டுத் திரை போட்டு விளையாடி.. 
நம் காணும் உலகென்று ஒன்று.. 

தூங்காத கண்ணென்று ஒன்று.. 

வெகுதூரம் நீ சென்று நின்றாலும் - உன் 
விழி மட்டும் தனியாக வந்தாலும்..
வெகுதூரம் நீ சென்று நின்றாலும் - உன் 
விழி மட்டும் தனியாக வந்தாலும்..

வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று.. 
பெறுகின்ற சுகமென்று ஒன்று.. 
வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று.. 
பெறுகின்ற சுகமென்று ஒன்று..

தூங்காத கண்ணென்று ஒன்று.. 

ஆ.ஆ..ஆ..

துடிக்கின்ற சுகமென்று ஒன்று.. 

ஆஹா...ஆஹா..ஹ..

தாங்காத மனமென்று ஒன்று.. 

ஆஹா...ஆஹா..ஹ..ஹா..

தந்தாயே நீ என்னைக் கண்டு..

ஆஹா...ஆஹா..ஹ..ஹா..

தூங்காத கண்ணென்று ஒன்று.. 

ஆ.ஆ..ஆ..ஆ.ஆ..ஆ..

No comments:

Post a Comment