Sunday, 16 November 2014

நான் யார் யார் என்று சொல்லவில்லை.. - பட்டணத்தில் பூதம் (14.04.1967)



நான் யார் யார் என்று சொல்லவில்லை..
படம் : பட்டணத்தில் பூதம் (14.04.1967)
பாடியவர் : பி.சுசீலா 
இசை : ஆர்.கோவர்த்தனம் 
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
நடிப்பு : கே.ஆர்.விஜயா - ஜெய்சங்கர் - ஜாவர் சீத்தாராமன் 
இயக்கம் : எம்.வி.இராமன் 
தயாரிப்பு : சாரதா பிக்சர்ஸ் (டி.கோவிந்தராஜன்)
வெளியீடு : வீனஸ் பிக்சர்ஸ் மூலமாக 

நான் யார் யார் என்று சொல்லவில்லை.. 

நீ யார் யார் என்று கேட்கவில்லை.. 

நான் யார் யார் என்று சொல்லவில்லை.. 
நீ யார் யார் என்று கேட்கவில்லை.. 
நான் யார் யார் என்று சொல்லவில்லை.. 
நீ யார் யார் என்று கேட்கவில்லை.. 
ஒரு பாட்டிலும் இல்லை இந்நாட்டிலும் இல்லை.. 
பார் பார் கண்கள் இல்லையோ? ஓ. ஓ.. ஓ.. 

நான் யார் யார் என்று சொல்லவில்லை.. 
நீ யார் யார் என்று கேட்கவில்லை.. 

காவிரி சொல்லும் மாதவி பெண்ணும்.. 
காணாத அழகல்லவா? 

காவிரி சொல்லும் மாதவி பெண்ணும்.. 
காணாத அழகல்லவா? 
பாவலர் பாடும் ஜானகி பெண்ணும்.. 
பாராத முகமல்லவா? 

காவிரி சொல்லும் மாதவி பெண்ணும்.. 
காணாத அழகல்லவா? 
பாவலர் பாடும் ஜானகி பெண்ணும்.. 
பாராத முகமல்லவா? 

நேராக பார்த்தாலே மயக்கம் வரும். 
தீராத பேராசை தீர்ந்து விடும்.. 
நேராக பார்த்தாலே மயக்கம் வரும்.. 
தீராத பேராசை தீர்ந்து விடும்.. 
ஒரு பாட்டிலும் இல்லை இந்நாட்டிலும் இல்லை.. 
பார் பார் கண்கள் இல்லையோ? ஓ.. ஓ.. ஓ..

நான் யார் யார் என்று சொல்லவில்லை.. 
நீ யார் யார் என்று கேட்கவில்லை.. 

அழகிய கன்னி ஹெலன் முகம் எண்ணி.. 
ஆயிரம் போர்களிலே.. 
மறைந்தவர் மன்னர் அவர்களின் பின்னர்.. 
பிறந்தவன் நீயல்லவோ?

அழகிய கன்னி ஹெலன் முகம் எண்ணி.. 
ஆயிரம் போர்களிலே.. 
மறைந்தவர் மன்னர் அவர்களின் பின்னர்.. 
பிறந்தவன் நீயல்லவோ? 
போராடிப் பாராமல் கிடைக்காது.. 
தானாக வந்தாலும் சுவைக்காது.. 
போராடிப் பாராமல் கிடைக்காது.. 
தானாக வந்தாலும் சுவைக்காது.. 
ஒரு பாட்டிலும் இல்லை இந்நாட்டிலும் இல்லை.. 
பார் பார் கண்கள் இல்லையோ? ஓ.. ஓ.. ஓ.. 

நான் யார் யார் என்று சொல்லவில்லை.. 
நீ யார் யார் என்று கேட்கவில்லை.. 
நான் யார் யார் என்று சொல்லவில்லை.. 
நீ யார் யார் என்று கேட்கவில்லை.. 
ஒரு பாட்டிலும் இல்லை இந்நாட்டிலும் இல்லை.. 
பார் பார் கண்கள் இல்லையோ? 

No comments:

Post a Comment