கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்.. (சோகம்)
படம் : கைதி கண்ணாயிரம் (01.12.1960)
பாடியவர் : பி.சுசீலா
இசை : கே.வி.மகாதேவன் (உதவி புகழேந்தி)
இயற்றியவர் : அ.மருதகாசி
நடிப்பு : இராஜசுலோச்சனா - மாஸ்டர் ஸ்ரீதர் - கே.ஏ.தங்கவேலு ஆர்.எஸ்.மனோகர் மற்றும் பி.எஸ்.வீரப்பா
இயக்கம் : ஏ.எஸ்.ஏ.சாமி
தயாரிப்பு : மாடர்ன் தியேட்டர்ஸ் (டி.ஆர்.சுந்தரம்)
(இப்படம் ஹிந்தியில் புகழ் பெற்ற "கைதி எண் 911" என்ற படத்தின் தழுவல்)
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி..
அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது..
அக்கம் பக்கமே பாராது..
ஆட்டம் போடவும் கூடாது..
அழுவதும் தவறும்..அஞ்சுவதும் தவறு..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி..
துன்பப் புயலுமே உனை சூழ்ந்தால்..
தன்னந்தனிமையில் நீயிருந்தால்..
துன்பப் புயலுமே உனை சூழ்ந்தால்..
கண் கலங்குவாயா..
துணிந்து நிற்பாயா?
கண்மணி எனக்கதை சொல்லிவிடு
வேளைக் கண்டு நடுங்க மாட்டேன்..
முயன்று நானே வெற்றி கொள்வேன்..
சபாஷ்..
No comments:
Post a Comment