Friday, 14 November 2014

தங்கங்களே நாளை தலைவர்களே.. - என்னை போல் ஒருவன் (18.03.1978)



தங்கங்களே நாளை தலைவர்களே..
படம் : என்னை போல் ஒருவன் (18.03.1978)
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
நடிப்பு : நடிகர் திலகம் - உஷாநந்தினி 
இயக்கம் : டி.ஆர்.ராமண்ணா - ஏ.சி.திருலோகசந்தர்
தயாரிப்பு : ஸ்ரீவிநாயகா பிக்சர்ஸ்

தங்கங்களே நாளை தலைவர்களே..
நம் தாயும் மொழியும் கண்கள்..
சிங்கங்களே வாழும் தெய்வங்களே..
நம் தேசம் காப்பவர் நீங்கள்..
தங்கங்களே நாளை தலைவர்களே..
நம் தாயும் மொழியும் கண்கள்..
சிங்கங்களே வாழும் தெய்வங்களே..
நம் தேசம் காப்பவர் நீங்கள்..

நம் தத்தா காந்தியும்
மாமா நேருவும்
தேடியச் செல்வங்கள்..
பள்ளிச் சாலை தந்தவன்
ஏழைத் தலைவனை
தினமும் எண்ணுங்கள்..

நம் தத்தா காந்தியும்
மாமா நேருவும்
தேடியச் செல்வங்கள்..
பள்ளிச் சாலை தந்தவன்
ஏழைத் தலைவனை
தினமும் எண்ணுங்கள்..

ஹே ஹே ஹே ஹே
யா யா யா யா
லாலாலலாலா தரரம்பம்
லாலாலலாலா தரரம்பம
லாலாலலாலா தரரம்பம்

அறம் செய்ய விரும்பு
என்றாள் ஔவை
தர்மம் செய்யுங்கள்..
அன்பே தெய்வம்
என்றார் பெரியோர்
அன்புடன் வாழுங்கள்..
அறம் செய்ய விரும்பு
என்றாள் ஔவை
தர்மம் செய்யுங்கள்..
அன்பே தெய்வம்
என்றார் பெரியோர்
அன்புடன் வாழுங்கள்..

யாரும் தீமை செய்தாலும்
நீங்கள் நன்மை செய்யுங்கள்..
யாரும் பொய்யைச் சொன்னாலும்
நீங்கள் மெய்யைச் சொல்லுங்கள்..
நேர்மையாய் வாழ்வதில்
தோல்வியே இல்லையே..

தங்கங்களே நாளை தலைவர்களே..
நம் தாயும் மொழியும் கண்கள்..
சிங்கங்களே வாழும் தெய்வங்களே..
நம் தேசம் காப்பவர் நீங்கள்..

நம் தத்தா காந்தியும்
மாமா நேருவும்
தேடியச் செல்வங்கள்..
பள்ளிச் சாலை தந்தவன்
ஏழைத் தலைவனை
தினமும் எண்ணுங்கள்..

ஹே ஹே ஹே ஹே
யா யா யா யா

கூடும் உறவு
கூட்டுறவென்று
ஒன்றாய் வாழுங்கள்..
கூடிய பிறகு
குற்றம் காணும்
கொள்கையைத் தள்ளுங்கள்..
கூடும் உறவு
கூட்டுறவென்று
ஒன்றாய் வாழுங்கள்..
கூடிய பிறகு
குற்றம் காணும்
கொள்கையைத் தள்ளுங்கள்..
என்றும் ஒன்றே செய்யுங்கள்..
ஒன்றை நன்றே செய்யுங்கள்..
நன்றும் இன்றே செய்யுங்கள்..
நீங்கள் எதிலும் வெல்லுங்கள்..
வீரனின் வாழ்விலே
வெற்றி மேல வெற்றியே..

தங்கங்களே நாளை தலைவர்களே..
நம் தாயும் மொழியும் கண்கள்..
சிங்கங்களே வாழும் தெய்வங்களே..
நம் தேசம் காப்பவர் நீங்கள்..

நம் தத்தா காந்தியும்
மாமா நேருவும்
தேடியச் செல்வங்கள்..
பள்ளிச் சாலை தந்தவன்
ஏழைத் தலைவனை
தினமும் எண்ணுங்கள்..

2 comments: