Saturday, 15 November 2014

கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்.. - கைதி கண்ணாயிரம் (01.12.1960)



கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
படம் : கைதி கண்ணாயிரம் (01.12.1960)
பாடியவர் : பி.சுசீலா - மாஸ்டர் ஸ்ரீதர்
இசை : கே.வி.மகாதேவன் (உதவி புகழேந்தி)
இயற்றியவர் : அ.மருதகாசி 
நடிப்பு : இராஜசுலோச்சனா - மாஸ்டர் ஸ்ரீதர் - ஆர்.எஸ்.மனோகர் ஈ.வி.சரோஜா மற்றும் பி.எஸ்.வீரப்பா
இயக்கம் : ஏ.எஸ்.ஏ.சாமி 
தயாரிப்பு : மாடர்ன் தியேட்டர்ஸ் (டி.ஆர்.சுந்தரம்)
(இப்படம் ஹிந்தியில் புகழ் பெற்ற "கைதி எண் 911" என்ற படத்தின் தழுவல்)

ஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆ ஆஆஆஆஆ.. 
ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்..

ஆஆஆ..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
கொஞ்சிக் கொஞ்சி
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி கொஞ்சிக் கொஞ்சி

ஆஆஆஆஆ ஆஆ ஓஓஓஓஓ ஓஓ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ

நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்..
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்..
நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்..
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்..

உண்மை இதை உணர்ந்து..
நன்மை பெறப் படித்து..
உலகினில் பெரும்புகழ் சேர்த்திடடா..

பள்ளி சென்று கல்வி பயின்று..
பலரும் போற்றப் புகழ் பெறுவேன்..

சபாஷ்
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்..

ஆஆஆஆஆ ஆஆ ஓஓஓஓஓ ஓஓ..
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ..

அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது..

அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது..
அழுவதும் தவறு அஞ்சுவதும் தவறு..
எது வந்த போதிலும் எதிர்த்து நில்லு..

அஞ்சா நெஞ்சம் கொண்டு வாழ்வேன்
இந்த நாட்டின் வீரனாவேன்..

சபாஷ்..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி கொஞ்சிக் கொஞ்சி..

ஆஆஆஆஆ ஆஆ ஓஓஓஓஓ ஓஓ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ

தன்னந்தனிமையில் நீயிருந்தால்..
துன்பப் புயலுமே உனை சூழ்ந்தால்..
தன்னந்தனிமையில் நீயிருந்தால்..
துன்பப் புயலுமே உனை சூழ்ந்தால்..

கண் கலங்குவாயா துணிந்து நிற்பாயா?
கண்மணி எனக்கதை சொல்லிவிடு..

வேளைக் கண்டு நடுங்க மாட்டேன்..
முயன்று நானே வெற்றி கொள்வேன்..

சபாஷ்..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்..
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி கொஞ்சிக் கொஞ்சி..

No comments:

Post a Comment