Wednesday, 5 November 2014

வாழ நினைத்தால் வாழலாம்.. - பலே பாண்டியா (26.05.1962)



வாழ நினைத்தால் வாழலாம்..
படம் : பலே பாண்டியா (26.05.1962)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.இராமமூர்த்தி
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
நடிப்பு : நடிகர் திலகம் - தேவிகா 
இயக்கம் : பி.ஆர்.பந்தலு 
தயாரிப்பு : பத்மினி பிக்சர்ஸ்

ஆ..ஆ..ஆ.ஆஹாஹ..ஓஹோஹோ..
ஆஹாஹ..ஓஹோஹோ..
ஆ..ஆ..ஆ.ஆஹாஹ..ஓஹோஹோ..
ஆஹாஹ..ஓஹோஹோ.. 
வாழ நினைத்தால் வாழலாம்..
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்..
ஆசையிருந்தால் நீந்திவா..
வாழ நினைத்தால் வாழலாம்..
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்..
ஆசையிருந்தால் நீந்திவா..

பார்க்கத் தெரிந்தால் பாதைத் தெரியும்..
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்..
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்..
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்..
காட்சி கிடைத்தால் கவலைத் தீரும்..
கவலைத் தீர்ந்தால் வாழலாம்..
வாழ நினைத்தால் வாழலாம்..
வழியா இல்லை பூமியில்..
ஆழக் கடலும் சோலையாகும்..
ஆசையிருந்தால் நீந்திவா..

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை..
கையில் கிடைத்தால் வாழலாம்..
கருத்தில் வளரும் காதல் எண்ணம்..
கனிந்து வந்தால் வாழலாம்..
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்..
வாழ சொன்னால் வாழ்கிறேன் 
மனமா இல்லை வாழ்வினில்.. 
ஆழக் கடலில் தோணிப்போலே..
அழைத்துச் சென்றால் வாழ்கிறேன்..

ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி..

ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி..

துள்ளித் திரியும் மீங்கள் சாட்சி

துடித்து நிற்கும் இளமை சாட்சி

இருவர் வாழும் காலம் முழுதும் 
ஒருவராக வாழலாம்

வாழ நினைத்தோம் வாழுவோம்..
வழியா இல்லை பூமியில்
காதல்  கடலில்  தோணிப்போலே..
காலம் முழுதும் நீந்துவோம்..

ஆ.ஆ.ஆ..ஆ..ஆ..ஆ.ஆ..ஆ.

வாழ நினைத்தோம் வாழுவோம்..
வழியா இல்லை பூமியில்
காதல்  கடலில்  தோணிப்போலே..
காலம் முழுதும் நீந்துவோம்..

No comments:

Post a Comment