Sunday, 16 November 2014

எதிர்பாராமல் விருந்தாளி...- பட்டணத்தில் பூதம் (14.04.1967)



எதிர்பாராமல் விருந்தாளி...
படம் : பட்டணத்தில் பூதம் (14.04.1967)
பாடியவர் : பி.சுசீலா 
இசை : ஆர்.கோவர்த்தனம் 
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
நடிப்பு : கே.ஆர்.விஜயா - ஜெய்சங்கர் 
இயக்கம் : எம்.வி.இராமன் 
தயாரிப்பு : சாரதா பிக்சர்ஸ் (டி.கோவிந்தராஜன்)
வெளியீடு : வீனஸ் பிக்சர்ஸ் மூலமாக

எதிர்பாராமல் விருந்தாளி - இங்கு 
ஏன் வந்தாள் என நினைத்தாயோ?
அழைக்காமல் வரும் வெண்ணிலவு 
அதுதானே இந்த பெண்மனது..
பெண்மனது..பெண்மனது...
எதிர்பாராமல் விருந்தாளி - இங்கு 
ஏன் வந்தாள் என நினைத்தாயோ?
அழைக்காமல் வரும் வெண்ணிலவு 
அதுதானே இந்த பெண்மனது..

போனவை எல்லாம் போகட்டுமே  - இனி 
புது உலகம் இங்கு மலரட்டுமே.. 
போனவை எல்லாம் போகட்டுமே  - இனி 
புது உலகம் இங்கு மலரட்டுமே.. 
பவுர்ணமி நிலவை இரசிக்கட்டுமே - மலர்ப்
பள்ளியில் பாடம் படிக்கட்டுமே..  
பவுர்ணமி நிலவை இரசிக்கட்டுமே - மலர்ப்
பள்ளியில் பாடம் படிக்கட்டுமே..  
மலர்ப் பள்ளியில் பாடம் படிக்கட்டுமே..  
எதிர்பாராமல் விருந்தாளி - இங்கு 
ஏன் வந்தாள் என நினைத்தாயோ?
அழைக்காமல் வரும் வெண்ணிலவு 
அதுதானே இந்த பெண்மனது..

எண்ணங்களாலே வேலியிட்டேன் - என் 
இதயத்தை உனக்கே காவல் வைத்தேன்..
எண்ணங்களாலே வேலியிட்டேன் - என் 
இதயத்தை உனக்கே காவல் வைத்தேன்..
சொல்லும் வகைதான் புரியவில்லை - அதை 
சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை..
சொல்லும் வகைதான் புரியவில்லை - அதை 
சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.. 
அதை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.. 
எதிர்பாராமல் விருந்தாளி - இங்கு 
ஏன் வந்தாள் என நினைத்தாயோ?
அழைக்காமல் வரும் வெண்ணிலவு 
அதுதானே இந்த பெண்மனது..

இரவுக்கு துணையாய் சேர்ந்திருப்பேன் - நான் 
என் மடியினில் உன்னைத் தூங்க வைப்பேன்..
இரவுக்கு  துணையாய் சேர்ந்திருப்பேன் - நான் 
என் மடியினில் உன்னைத் தூங்க வைப்பேன்..
உலகத்தை ஒருநாள் மறக்கச் செய்வேன் - அந்த 
உறக்கத்தின் முடிவைப் பிறகு சொல்வேன்.. 
உலகத்தை ஒருநாள் மறக்கச் செய்வேன் - அந்த 
உறக்கத்தின் முடிவைப் பிறகு சொல்வேன்.. 
அந்த உறக்கத்தின் முடிவைப் பிறகு சொல்வேன்.
எதிர்பாராமல் விருந்தாளி - இங்கு 
ஏன் வந்தாள் என நினைத்தாயோ?
அழைக்காமல் வரும் வெண்ணிலவு 
அதுதானே இந்த பெண்மனது..
பெண்மனது..பெண்மனது...

No comments:

Post a Comment