கா கா கா ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக..
படம்: பராசக்தி (1952)
பாடியவர்: சிதம்பரம் சி.எஸ். ஜெயராமன்
இயற்றியவர்: தலைவர் கலைஞர் மு. கருணாநிதி
இசை: ஆர்.சுதர்சனம்
கா கா கா கா கா கா
ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக
அன்போடு ஓடிவாங்க என்ற
அனுபவப் பொருள் விளங்க - அந்த
அனுபவப் பொருள் விளங்க - காக்கை
அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க..
காக்கை அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க - காக்காவென
ஒண்ணாகக் கூடுறீங்க - வாங்க
கா கா கா
சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங்
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க
சாப்பாடில்லாமே தவிக்குதுங்க ஜனங்
கூப்பாடு போட்டு மனம் குமுறுதுங்க - உயிர்
காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால்
தாப்பாளப் போடுறாங்க பாருங்க - உயிர்
காப்பாத்தக் கஞ்சித் தண்ணி ஊத்துங்க என்றால்
தாப்பாளப் போடுறாங்க பாருங்க அந்த
சண்டாளர் ஏங்கவே தன்னலமும் நீங்கவே
தாரணி மீதிலே பாடுங்க - ராகம்
கா கா கா
எச்சிலைத்தன்னிலே எரியும் சோத்துக்கு
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே ..ஏ..ஏ..ஏ..
எச்சிலைத்தன்னிலே எரியும் சோத்துக்கு
பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை
எத்தனனையோ இந்த நாட்டிலே.. எத்தனையோ இந்த நாட்டிலே
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
பட்சி ஜாதி நீங்க எங்க பகுத்தறிவாளரப் பாக்காதீங்க
பட்சமா இருங்க பகுந்துண்டு வாழுங்க
பழக்கத்த மாத்தாதீங்க - எங்கே பாடுங்க
கா கா கா..
கா.கா.கா..
No comments:
Post a Comment