பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ
படம்: சுமதி என் சுந்தரி(1971)
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியன் - பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்தக் குழலோ
பொன் மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ..
அந்தி மஞ்சள் நிறமோ..
பொட்டு வைத்த முகமோ
ஆ... ஆ... கட்டி வைத்தக் குழலோ
பொன் மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
தரையோடு வானம் விளையாடும் கோலம்
தரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடுப் பார்த்தேன் விலையாகக் கேட்டேன்
இடையோடுப் பார்த்தேன் விலையாகக் கேட்டேன்
செவ்வானம் போலே புன்னகைப் புரிந்தாள்
புன்னகைப் புரிந்தாள்
பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்தக் குழலோ
பொன் மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
ஆ..ஆ..ஆ....அ.ஆ.ஆ....ஆ....
மறு வீடுத் தேடிக் கதிர் போகும் நேரம்
மறு வீடுத் தேடிக் கதிர் போகும் நேரம்
மணமேடைத் தேடி நடைப் போடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்
லலலா லலலா லல லல்லல்லா…
என்னுடன் கலந்தாள்
லலலா லலலா லல லல்லல்லா…
ஆ..ஆ..ஆ....அ.ஆ.ஆ....ஆ...
மலைத் தோட்டப் பூவில் மணமில்லை என்று
மலைத் தோட்டப் பூவில் மணமில்லை என்று
கலைத் தோட்ட இராணி கை வீசி வந்தாள்
ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்
லலலா லலலா லல லல்லல்லா…
நிழல் போல் மறைந்தாள்
லலலா லலலா லல லல்லல்லா…
பொட்டு வைத்த முகமோ.. ஓ... ஓ...
கட்டி வைத்தக் குழலோ.. ஓ... ஓ...ஓஓ
பொன் மணிச் சரமோ..அந்தி மஞ்சள் நிறமோ..
லலலா லலலா லல லல்லல்லா…
அந்தி மஞ்சள் நிறமோ..
லலலா லலலா லல லல்லல்லா
No comments:
Post a Comment