நாதம் என் ஜீவனே,,,,
படம் : காதல் ஓவியம் (1982)
பாடியவர்கள் : எஸ்.ஜானகி
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
தானம் தம்த தானம் தம்த தானம் தம்த தானம்
பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம்
ஓலையில் வெறென்ன சேதி தேவனே நானுந்தன் பாதி
இந்த பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம்
நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உந்தன் இராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலூறுதே ஓ.. பூவும் ஆளானதே
நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உந்தன் இராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலூறுதே ஓ.. பூவும் ஆளானதே
நாதம் என் ஜீவனே..
இசையை அருந்தும் சாதகப் பறவைப் போல நானும் வாழ்கிறேன்
உறக்கமில்லை எனினும் கண்ணில் கனவு சுமந்து போகிறேன்
தேவதைப் பாதையில் பூவின் ஊர்வலம்
நீ அதில் போவதால் ஏதோ ஞாபகம்
வென்னீரில் நீராடும் கமலம்
விலகாது விரகம்
நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உந்தன் இராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலூறுதே ஓ.. பூவும் ஆளானதே
நாதம் என் ஜீவனே..
நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உந்தன் இராஜ ராகம் பாடும் நேரம்
பாறை பாலூறுதே ஓ பூவும் ஆளானதே
நாதம் என் ஜீவனே..
அமுத கானம் நீ தரும் நேரம் நதிகள் ஜதிகள் பாடுமே
விலகிப் போனால் எனது சலங்கை விதவை ஆகிப் போகுமே
கண்களில் மௌனமோ கோவில் தீபமே
ராகங்கள் பாடி வா பன்னீர் மேகமே
மார் மீதுப் பூவாகி விழவா
விழியாகி விடவா
No comments:
Post a Comment