பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
படம் : பணம் படைத்தவன் (1965)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - எல்.ஆர்.ஈஸ்வரி
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.இராமமூர்த்தி
இயற்றியவர் : கவிஞர் வாலி
ஆஹா...ஹ ஹ ஹா ஓஹோ... ஓ
ஓ...ஹோ...ஆஹா...ஹ ஹ ஹா...
பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால்
பெண்மயில் என்றே பேராகும்
பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால்
பெண்மயில் என்றே பேராகும்
ஆ ஹஹஹஹஹா...
அஹஹஹஹஹஹா...
ஆ...ஹ ஆ...ஹ ஆ...ஹ
ஆஹஆஹஆஹஆஹஆஹ
பூமகள் மெல்ல வாய்மொழி சொல்ல
சொல்லிய வார்த்தைப் பண்ணாகும்
பூமகள் மெல்ல வாய்மொழி சொல்ல
சொல்லிய வார்த்தைப் பண்ணாகும்
காலடித் தாமரை நாலடி நடந்தால்
காதலன் உள்ளம் புண்ணாகும்
இந்தக் காதலன் உள்ளம் புண்ணாகும்
பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால்
பெண்மயில் என்றே பேராகும்
ஆ ஹஹஹஹஹா...
அஹஹஹஹஹஹா...
ஆ...ஹ ஆ...ஹ ஆ...ஹ
ஆஹஆஹஆஹஆஹஆஹ
ஆடைகள் அழகை மூடிய போதும்
ஆசைகள் நெஞ்சில் ஆறாகும்
ஆடைகள் அழகை மூடிய போதும்
ஆசைகள் நெஞ்சில் ஆறாகும்
மாந்தளிர் மேனி மார்பினில் சாய்ந்தால்
வாழ்ந்திடும் காலம் நூறாகும்
இங்கு வாழ்ந்திடும் காலம் நூறாகும் !
பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்
கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால்
பெண்மயில் என்றே பேராகும்
ஆ ஹஹஹஹஹா...
அஹஹஹஹஹஹா...
ஆ...ஹ ஆ...ஹ ஆ...ஹ
ஆஹஆஹஆஹஆஹஆஹ
No comments:
Post a Comment