பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
படம் : ஜெமினி (2002)
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை : பரத்வாஜ்
பாடலாசிரியர்: வைரமுத்து
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
என் கண்ணில் ஏன்? ஊசி ஏற்றினாய்
பிரம்மா ஒ பிரம்மா இது தகுமா? இது தகுமா?
ஐயோ இது வரமா? சாபமா?
பிரம்மா ஒ பிரம்மா இது தகுமா? இது தகுமா?
ஐயோ இது வரமா? சாபமா?
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி வைத்தாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
கண்களிலே பௌத்தம் பார்த்தேன்
கன்னத்தில் சமணம் பார்த்தேன்
பார்வை மட்டும் கொலைகள் செய்யப் பார்க்கிறேன்
பற்களிலும் கருணை பார்த்தேன்
பாதங்களில் தெய்வம் பார்த்தேன்
புன்னகையோ உயிரை தின்னப் பார்க்கிறேன்
புயலென்று நினைத்தேன் என்னை
புயல் கட்டும் கயிறாய் வந்தாய்
மலையென்று நினைத்தேன் என்னை
மல்லிகையால் மலையை சாய்த்தாய்
நெற்றிப் பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே
பிரம்மா ஒ பிரம்மா இது தகுமா? இது தகுமா?
ஐயோ இது வரமா? சாபமா?
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி வைத்தாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
பகலெல்லாம் கருப்பாய் போக
இரவெல்லாம் வெள்ளையாக
என் வாழ்வில் ஏதேதோ மாற்றமோ?
ஐயையோ உலக உருண்டை
அடிவயிற்றில் சுற்றுவதென்ன?
அச்சச்சோ தொண்டை வரையில் ஏறுமோ
எரிமலையின் கொண்டை மேலே
ரோஜாவை நட்டவர் யாரோ?
காதல் எனும் கணவாய் வழியே
என் தேசம் கடந்தவள் யாரோ>
சிறுக சிறுக உயிரைப் பருகிச் சென்றாளே
பிரம்மா ஒ பிரம்மா இது தகுமா? இது தகுமா?
ஐயோ இது வரமா? சாபமா?
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி வைத்தாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
என் கண்ணில் ஏன்? ஊசி ஏற்றினாய்
பிரம்மா ஒ பிரம்மா இது தகுமா? இது தகுமா?
ஐயோ இது வரமா? சாபமா?
பிரம்மா ஒ பிரம்மா இது தகுமா? இது தகுமா?
ஐயோ இது வரமா? சாபமா?
No comments:
Post a Comment