Sunday, 1 June 2014

அன்னக்கிளி உன்னைத் தேடுதே..- அன்னக்கிளி (1976)



அன்னக்கிளி உன்னைத் தேடுதே
படம் : அன்னக்கிளி (1976)
பாடியவர் : எஸ்.ஜானகி
இசை : இசைஞானி இசையராஜா
இயற்றியவர் : பஞ்சு அருணாசலம்

ஆஆஆ... ஆ ஆஆஆஆஆ..ஆ..
லாஆஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ.. ஆ..

அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே

நதியோரம் பொறந்தேன் கொடிப் போல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்
நதியோரம் பொறந்தேன் கொடிப் போல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்
உறங்காத...
உறங்காத கண்களுக்கு ஓலைக் கொண்டு மையெழுதி
கலங்காதே காத்திருக்கேன் கைப் பிடிக்க வருவாரோ?

அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே

கனவோடு சில நாள் நெனவோடு சில நாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்
கனவோடு சில நாள் நெனவோடு சில நாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்
மழை பெஞ்சா..
மழை பெஞ்சா வெதவெதச்சி நாத்து நாட்டு கதிரறுத்து
போரடிக்கப் போன மாமன் பொழுதிருக்க வருவாரோ?

அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே

நதியென்றால் அங்கே கரையுண்டு காவல்
கொடியென்றால் அதைக் காக்க மரமே காவல்
புள்ளிப்  போட்ட..
புள்ளிப்  போட்ட ரவிக்கைக் காரி புளியம்பூ சேலைக் காரி
நெல்லறுக்கப் போகையில் யார் கண்ணிரண்டும் காவலடி

அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே


No comments:

Post a Comment