பார்வை யுவராணி கண்ணோவியம்
படம் : சிவந்தமண் (1969)
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இது தான் நான் கேட்டப் பொன்னோவியம்
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாதப் பெண்ணோவியம்
பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும்
ஏனென்று தேன் வாடுமே
நூலென்ற இடையின்னும் நூறாண்டு சென்றாலும்
தேர் கொண்ட ஊர்கோலமே
இன்று நானும் கவியாக யார் காரணம்
அந்த நாலும் விளையாடும் விழிக் காரணம்
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாதப் பெண்ணோவியம்
கால் வண்ணம் சதிராட
கை வண்ணம் விளையாடும்
தென்னாட்டுப் பொன் வண்ணமே
கால் வண்ணம் சதிராட
கை வண்ணம் விளையாடும்
தென்னாட்டுப் பொன் வண்ணமே
மான் வண்ணம் என்றாலும்
மலர் வண்ணம் என்றாலும்
குறைவென்று தமிழ் சொல்லுமே
வண்ணம் பாடப் புது வார்த்தை நான் தேடினேன்
எங்கும் தேடி முகம் பார்த்துப் பதம் பாடினேன்
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாதப் பெண்ணோவியம்
ஒரு பக்கம் நான் பார்த்து
மறு பக்கம் நான் பார்க்க
ஒரு நாளும் போதாதம்மா
மணி முத்தம் வாய் சிந்த
சிறு வெட்கம் முகம் சொல்லும்
அது மட்டும் போதாதம்மா
என் கேள்வி சுகம் என்று உனைக் கேட்பது
நான் சொல்வேன், சொன்னாலும் புரியாதது
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாதப் பெண்ணோவியம்
பாவைப் பண்பாடும் சொல்லோவியம்
இது தான் நான் கேட்டப் பொன்னோவியம்
பார்வை யுவராணி கண்ணோவியம்
No comments:
Post a Comment