அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு
படம் : பட்டிக்காடா பட்டணமா (1972)
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
அடி ராக்கு என் மூக்கு என் கண்ணு என் பல்லு என் ராஜாயி
அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்கச் செவப்பு
மச்சானை இழுக்குதடி
அடி என்னடி ராக்கு,,
அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்கச் செவப்பு
மச்சானை இழுக்குதடி
அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை
உன் கழுத்துக்கு பொருத்தமடி
அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை
உன் கழுத்துக்கு பொருத்தமடி
அம்மூரு மீனாட்சி பாத்தாலும்
அவ கண்ணுக்கு வருத்தமடி
அஹாஹா.. அம்மூரு மீனாட்சி பாத்தாலும்
அவ கண்ணுக்கு வருத்தமடி
சின்னாளப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து
என் கையாலே கட்டி விடவா
என் அத்தை அவ பெத்த என் சொத்தே
அடி ராக்கம்மா கொத்தோடு முத்து தரவோ
அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி மாணிக்கச் செவப்பு
மச்சானை இழுக்குதடி
தெய்வானைச் சக்களத்தி வள்ளி குறத்தி
நம்மக் கதையிலே இருக்குதடி
தெய்வானைச் சக்களத்தி வள்ளி குறத்தி
நம்மக் கதையிலே இருக்குதடி
சிங்கார மதுரையின் வெள்ளையம்மா கதை
தினம் தினம் நடக்குதடி
ஆஹா சிங்கார மதுரையின் வெள்ளையம்மா
கதை தினம் தினம் நடக்குதடி
அடி தப்பாமல் நான் உன்னை சிறை எடுப்பேன்
ஒன்னு ரெண்டாக இருக்கட்டுமே
என் கண்ணு என் மூக்கு என் பல்லு என் ராஜாயி
கல்யாண வைபோகமே
அடி..பிப்.பிப் .பி.பிப்.பிப்.பி. டும்.டும்..பிப்.பிப்..டும்.டும்.டும்.
பிப்.பிப் .பி.பிப்.பிப்.பி. டும்.டும்..பிப்.பிப்..டும்.டும்.டும்.
No comments:
Post a Comment