Friday, 20 June 2014

மான் குட்டியே புள்ளி மான் குட்டியே - பிரியமான தோழி (2003)



மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
படம் : பிரியமான தோழி (2003)
பாடியவர்கள் : ஹரிஹரன்  - சுஜாதா 
இசையமைப்பாளர் : எஸ்.ஏ.ராஜ்குமார்
இயற்றியவர் : பா.விஜய் 

மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
ஓம் மேனி தான் ஒரு பூந்தொட்டியே
ஒன் கொழு கொழு கன்னங்கள் பார்த்து
ஏம் மனசுல தெருக்கூத்து
ஒன்  ரவிக்கையின் ரகசியம் பார்த்து
என் நெஞ்சில புயல் காத்து

மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
எம் மேனி தான் ஒரு பூந்தொட்டியே    

ம் ம்...ம்  ம் ம்...ம்  ம் ம்...ம் ம்...
ம் ம்...ம்  ம் ம்...ம்  ம் ம்...ம்ம்ம்...
ம் ம்...ம்  ம் ம்...ம்  ம் ம்...ம் ம்...
ம் ம்...ம்  ம் ம்...ம்  ம் ம்...ம்ம்ம்...

ஒன்னால ஒன்னால ஏம் மனசு ஒன்னால
தறியில் ஓடும் நாடா போல ஏன் ஓடுது
அது ஏன் ஓடுது  

ஒன்னால ஒன்னால ஒன்னோட நெனப்பால
கண்ணுக்குள்ள மெளகா வத்தல் ஏன் காயுது        
அது ஏன் காயுது 

இது பஞ்சலோக மேனி பஞ்சு தலகாணி
மேல வந்து ஏன் விழுந்தே

நீ செக்கச் செக்க செவந்த குங்குமத்த கலந்த
வண்ணத்துல ஏன் பொறந்தே

நீயும் நானும் தான் ஒண்ணா திரியிறோம்

தீயே இல்லையே ஆனா எரியிறோம்

மான் குட்டியே புள்ளி மான் குட்டியே

ஓம் மேனி தான் ஒரு பூந்தொட்டியே    

சங்குச் சக்கு சங்குச் சக்கு செய்யச் செய்யா
ரெய்ரெ ரெய்ரெ ரெரெ  ரெரெ ரெரெ ரெரெ ரெரெ
சங்குச் சக்கு சங்குச் சக்கு செய்யச் செய்யா
ரெய்ரெ ரெய்ரெ ரெரெ  ரெரெ ரெரெ ரெரெ ரெரெ

ஒன்னோடும் என்னோடும்  ஒடம்போடு வேர்த்தாலும்
வேர்த்திடாத எடமும் உண்டு நீ சொல்லனும்
அத நீ சொல்லனும் 

ஆணோடும் பெண்ணோடும் வேர்க்காத எடம் என்ன
ஒதட்டு மேல வேர்க்காதய்யா நீ நம்பனும்
அத நீ நம்பனும் 

நீ அங்கக் கொஞ்சம் காட்டி இங்கக் கொஞ்சம் பூட்டி
பாதி உயிர் எடுக்காதே

என்ன கட்டிக் கட்டிப் புடிக்க கண்ட இடம் கடிக்க 
உத்தரவு கேட்க்காதே

அசந்தா போதுமே அரிச்சு பார்க்கலாம்

கசந்தா போய்விடும் கலந்தே பார்க்கலாம்

மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
ஓம் மேனி தான் ஒரு பூந்தொட்டியே

என் கொழு கொழு கன்னங்கள் பார்த்து
ஒம் மனசுல தெருக்கூத்து
என் ரவிக்கையின் ரகசியம் பார்த்து
ஒன் நெஞ்சில புயல் காத்து

மான் குட்டியே புள்ளி மான் குட்டியே
ஓம் மேனி தான் ஒரு பூந்தொட்டியே

No comments:

Post a Comment