Monday, 2 June 2014

வண்ணக்கிளி சொன்ன மொழி - தெய்வத்தாய் (1964)



வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ..
படம் : தெய்வத்தாய் (1964)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா
இயற்றியவர் : வாலிபக் கவிஞர் வாலி
இசை : மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.இராமமூர்த்தி

வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ..
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ...
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ..
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ...

புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம் ஓ..ஓ...
அள்ளி அள்ளிக் கொண்டு செல்ல என்ன தயக்கம்..
புள்ளி மயில் புன்னகையில் என்ன மயக்கம் ஓ..ஓ...
அள்ளி அள்ளிக் கொண்டு செல்ல என்ன தயக்கம்..
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ..
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ...

பொட்டு வைத்த வட்ட முகம் என்ன முகமோ..
அதைத் தொட்டுவிட துடிப்பதிலே என்ன சுகமோ..
பொட்டு வைத்த வட்ட முகம் என்ன முகமோ..
அதைத் தொட்டுவிட துடிப்பதிலே என்ன சுகமோ..
கன்னி மன மாளிகையில் காவல் நிற்கவா..
அங்கே காவல் நின்ற மன்னவனைக்  கைப் பிடிக்க வா..
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ..
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ...

ஆஹா..ஹ..ஆஹா.ஹ.ஆஹா..ஹ..ஆஹா..ஹ..
அத்திபழக் கன்னத்திலே கிள்ளிவிடவா..
இந்த ஊரையெல்லாம் நான் அழைத்து சொல்லிவிடவோ..
அத்திபழக் கன்னத்திலேக் கிள்ளிவிடவா..
இந்த ஊரையெல்லாம் நான் அழைத்து சொல்லிவிடவோ..
அல்லி விழித்  துள்ளிவிழக்  கோபம் என்னவோ...
இங்கே அஞ்சி அஞ்சிக் கொஞ்சுவதில் லாபம் என்னவோ..

ல.ல.ல.ல.லா.ல.ல.ல.லா.லா.
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ..
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ...

No comments:

Post a Comment