Friday, 25 July 2014

ஒரு வெட்கம் வருதே.. - பசங்க (2009)



ஒரு வெட்கம் வருதே..
படம் : பசங்க (2009) 
பாடியவர்கள் :  ஸ்ரேயா கோஷல் - நரேஷ் அய்யர்
இசையமைப்பாளர் : ஜேம்ஷ் வசந்தன் 
இயற்றியவர் : கவிஞர் தாமரை 

ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைப்பாயுதே
இது என்ன முதலா? முடிவா?
இனி எந்தன் உயிரும் உனதா?
புது இன்பம் தாலாட்டுதே
போகச் சொல்லி கால்கள் தள்ள
நிற்கச் சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
இது தரும் தடம் தடுமாற்றம் சுகம்

மழை இன்று வருமா? வருமா?
குளிர்க் கொஞ்சம் தருமா? தருமா?
கனவென்னைக் களவாடுதே
இது என்ன முதலா? முடிவா?
இனி எந்தன் உயிரும் உனதா?
புது இன்பம் தாலாட்டுதே
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொல்லும் இன்பம்
பட படப் படவெனவே
துடித்துடித்திடும் மனமே
வர வர வரக் கரைத்தாண்டிடுமே

மேலும் சில முறை உன் குறும்பிலே 
நானே தோற்கிறேன்
உன் மடியிலே என் தலையணை 
இருந்தால் உறங்குவேன்

ஆணின் மனதிற்குள்ளும் 
பெண்மை இருக்கிறதே
தூங்க அழைத்திடவே 
நெஞ்சம் துடிக்கிறதே

ஒரு வரி நீ சொல்ல 
ஒரு வரி நான் சொல்ல
எழுந்திடும் காதல் காவியம்
அனைவரும் ஈர்க்கும் நாள் வரும்

மழை இன்று வருமா? வருமா?
குளிர்க்கொஞ்சம் தருமா? தருமா?
கனவென்னைக் களவாடுதே..

இது என்ன முதலா? முடிவா?
இனி எந்தன் உயிரும் உனதா?
புது இன்பம் தாலாட்டுதே..

ஒ... கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொல்லும் இன்பம்

இது முதல் அனுபவமே..
இனி இது தொடர்ந்திடுமே..

வர வர வரக் கரைத்தாண்டிடுமே..

தில்லாரே தில்லாரே தில்லை தில்லாரே 
தில்லாரே..தில்லாரே ..
ஓஹோ..ஹா..
தில்லாரே..

ஆ.... காற்றில் கலந்து நீ என் 
முகத்திலே ஏனோ மோதினாய்..
பூ மரங்களில் நீ இருப்பதால் 
என் மேல் உதிர்கிறாய்..

ஒ… தூது அனுப்பிடவே 
நேரம் எனக்கில்லையே..
நினைத்த பொழுதினிலே 
வரணும் எதிரினிலே..

வெயிலிலே ஊர் கோலம் 
இது வரை நாம் போனோம்
நிகழ்கிறதே கார்க்காலமே 
நனைந்திடுவோம் நாள்தோறுமே..

ஒரு வெட்கம் வருதே வருதே 
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைப்பாயுதே...

இது என்ன முதலா? முடிவா?
இனி எந்தன் உயிரும் உனதா?
புது இன்பம் தாலாட்டுதே....

ஓ….போகச்சொல்லி கால்கள் தள்ள

நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள

இது முதல் அனுபவமே..

துடித்துடித்திடும் மனமே..
வர வர வரக் கரைத்தாண்டிடுமே..

யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது. - தலைவா (2013)



யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
படம் : தலைவா (2013)
பாடியவர்கள் : ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி
இசை: ஜி.வி.பிரகாஷ்
இயற்றியவர் : கவிஞர்  நா.முத்துக்குமார்

யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது

யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது

நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

குளிராலும் கொஞ்சம் அனலாலும்
இந்த நெருக்கம் தான் கொல்லுதே

எந்தன் ஆளானது இன்று வேறானது
வண்ணம் நூறானது வானிலே

யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது

தீர தீர ஆசை யாவும் பேசலாம்
மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்கலாம்

என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டுக்கொள்ளலாம்

என்னாகிறேன் இன்று ஏதாகிறேன்

எதிர்காற்றிலே சாயும் குடையாகிறேன்

எந்தன் நெஞ்ஜானது இன்று பஞ்சானது
அது பறந்தொடுது வானிலே  

யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது

மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
அது மலையை விட்டு ஓடிவந்து சேரும் கடலிலே

வைரம் போல பெண்ணின் மனது உலகிலே
அது தோண்டும் வரையில் புதைந்து கிடக்கும் 
என்றும் மண்ணிலே

கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி

என் பாதையில் இன்று உன் காலடி

நேற்று நான் பார்ப்பதும் இன்று நீ பார்ப்பதும்
நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி

யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது

யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
இன்று பேசாமல் கண்கள் பேசுது

நகராமல் இந்த நொடி நீள
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

குளிராலும் கொஞ்சம் அனலாலும்
இந்த நெருக்கம் தான் கொல்லுதே

எந்தன் ஆளானது இன்று வேறானது
வண்ணம் நூறானது வானிலே

Thursday, 24 July 2014

மின்வெட்டு நாளில் இங்கே.. - எதிர்நீச்சல் (2013)



மின்வெட்டு நாளில் இங்கே..
படம்: எதிர்நீச்சல் (2013)
பாடியவர்கள் : மோஹித் சவுஹான் - ஸ்ரேயா கோசல்
இசையமைப்பாளர் : அனிருத்
இயற்றியவர் : கவிஞர்  வாலி

ஓ..........
மின்வெட்டு நாளில் இங்கே..
மின்சாரம் போலவே வந்தாயே..
வா வா என் வெளிச்சப் பூவே வா
மின்வெட்டு நாளில் இங்கே..
மின்சாரம் போலவே வந்தாயே..
வா வா என் வெளிச்சப் பூவே வா
உயிர் தீட்டும் உயிலே வா..
குளிர் நீக்கும் வெயிலே வா..
அழைத்தேன் வா..
அன்பே..
மழைமேகம் வரும்போது
மயில் தோகை விரியாதோ?
அழைத்தேன் வா..
அன்பே..
காதல் காதல் ஒரு ஜுரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை
தொடர்கதை
அடங்கியதில்லையே..
காதல் காதல் ஒரு ஜுரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை
தொடர்கதை 
அடங்கியதில்லையே..

ஜப்பானில் விடுத்து
எப்போது நடந்தாய்?
கை கால்கள் முளைத்த
ஹைக்கூவே..

ஓ.......

சவ்வாது மரத்தை உன் மீது தெளிக்கும்
ஹைக்கூவும் உனக்கோர் கைப்பூவே..

விலகாமல் கூடும் விழாக்கள் நாள்தோறும்

பிரியாத வண்ணம் புறாக்கள் போல் சேரும்
நீச்சல் பூவே தொடு தொடு..
கூச்சம் யாவும் விடு விடு..
ஏக்கம் காக்கும் இளமையில்
ஒரு இளமையில் தவிப்பது அது தகுமா?

மின்வெட்டு நாளில் இங்கே..
மின்சாரம் போலவே வந்தாயே..
வா வா என் வெளிச்சப் பூவே வா..
மின்வெட்டு நாளில் இங்கே..
மின்சாரம் போலவே வந்தாயே..
வா வா என் வெளிச்சப் பூவே வா...

உயிர் தீட்டும் உயிலே வா..
குளிர் நீக்கும் வெயிலே வா..
அழைத்தேன் வா..
அன்பே..
மழைமேகம் வரும்போது
மயில் தோகை விரியாதோ?
அழைத்தேன் வா..
அன்பே..
காதல் காதல் ஒரு ஜுரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம் ஏவாள் தொடங்கிய கதை..
தொடர்கதை
அடங்கியதில்லையே..


Tuesday, 22 July 2014

போகாதே போகாதே நீ பொன்னால் - டமால் டுமீல் (2014)



போகாதே போகாதே 
படம் : டமால் டுமீல்  (2014)
பாடியவர்கள் : ரம்யா நம்பீசன் 
இசை : எஸ்.தமன் 
பாடலாசிரியர் : தாமரை 

போகாதே போகாதே
நீ போனால் எந்தன் நெஞ்சம் 
தாங்காதே

என்னை நீ, நீங்காதே
நல்லதோர் வீணை செய்த பின்பும்
கொல்லையில் வீசிசெல்ல,  மெல்ல
என்னை நீ பிரிந்து
செல்ல, செல்ல, செல்ல, செல்ல
என்னுயிர் பறந்து செல்லுமே

போகாதே போகாதே
நீ போனால் எந்தன் நெஞ்சம் 
தாங்காதே

உன் தோளை தோளை ஊஞ்சல் ஆக்கி
நானும் சாய்ந்து ஆடி, ஆடி விழுவேன்
அன்பாலே மறவேன்

என் சேலை தன்னை போர்வையாக்கி
நீயும் ஆழ்ந்து தூங்க, தூங்க தருவேன்
முத்தங்கள் இடுவேன்

காற்றிலே கேட்கும் ஓசை எல்லாம்
காதிலே வந்து தைக்கும் உள்ளம்
வாழ்விலே நீயும் இல்லை, இல்லை, இல்லை
என்றால் நானும் ஏன் வாழவேண்டும் சொல்

போகாதே போகாதே
நீ போனால் எந்தன் நெஞ்சம் 
தாங்காதே

ஹே.. நானும் நீயும் மாலை மாற்றும்,
மாலை மாற்றும் சொப்பனங்கள் களையும்
சொல்லாமல் சிதையும்

மோதிரங்கள் வாங்கும் போது
முத்து வைர கற்கள், கற்கள் உடையும்
முகூர்த்தம் தவறும்

அன்றிலாய் வாழ நானும் வந்தேன்
அன்னமாய் பாலைத்  தானே தந்தேன்
உன்னையே எண்ணி, எண்ணி, எண்ணி வாழ்ந்து
வாழ்ந்து என்னையே மறந்து போனதேன்

போகாதே போகாதே
நீ போனால் எந்தன் நெஞ்சம் 
தாங்காதே 

Monday, 21 July 2014

அழகே அழகே எதுவும் அழகே - சைவம் (2014)



அழகே அழகே எதுவும் அழகே 
படம் : சைவம்  (2014)
பாடியவர்கள் : உத்தரா உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர் : ஜி.வி.பிரகாஷ் 
இயற்றியவர் : கவிஞர் நா.முத்துக்குமார்

ஸாஸாஸாஸா நிஸரிஸ பா
மமதாதாதஸ ரீபாபா
ஸாஸாஸாஸா நிஸரிஸ பா
மமதாதாதஸ ரீபாபா
கமதநிஸா... நிரிஸா...

அழகே அழகே எதுவும் அழகே 
அன்பின் விழியில் எல்லாம் அழகே 
மழை மட்டுமா அழகு
சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு
விழும் இலை கூட ஒரு அழகு
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மையில் அது தான் மெய்யாய் அழகு
கமதநிஸா... நிரிஸா... கமதநிஸா... கரிஸா...

குயில் இசை அது பாடிட 
ஸ்வர வரிசைகள் தேவையா?
மயில் நடனங்கள் ஆடிட 
ஜதி ஒலிகளும் தேவையா?
நதி நடந்து சென்றிட 
வழித் துணை தான் தேவையா?
கடல் அலை அது பேசிட 
மொழி இலக்கணம் தேவையா?
இயற்கையோடு இணைந்தால்
உலகம் முழுதும் அழகு
கவலை யாவும் மறந்தால்
இந்த வாழ்க்கை முழுதும் அழகு
கமதநிஸா... நிரிஸா...

அழகே அழகே எதுவும் அழகே 
அன்பின் விழியில் எல்லாம் அழகே )

ஜணுதக தீம் நிரிஸநிப கமரிஸ
ஜுணுதக தீம் மதநிப கமதநிஸ
தஜம் தஜணு தகதீம் மதநிரீஸநி மதநிப
தகதஜம் தஜணுதக

இதயம் ஒரு ஊஞ்சலே 
இடம் வலம் அது ஆடிடும்
இன்பத்தில் அது தோய்ந்திடும்
துன்பத்தில் அது மூழ்கிடும்
நடந்ததை நாம் நாளுமே
நினைப்பதில் பொருள் இல்லையே
நடப்பதை நாம் எண்ணினால்
அதை விட உயர்வில்லையே
பூக்கும் பூவில் வீசும் வாசம் என்ன அழகு
அதையும் தாண்டி வீசும் நம் நேசம் ரொம்ப அழகு
கமதநிஸா... நிரிஸா... கமதநிஸா... கரிஸா...

அழகே அழகே எதுவும் அழகே 
அன்பின் விழியில் எல்லாம் அழகே 
மழை மட்டுமா அழகு
சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு
விழும் இலை கூட ஒரு அழகு
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மையில் அது தான் மெய்யாய் அழகு
கமதநிஸா... நிரிஸா... கமதநிஸா... கரிஸா...

Sunday, 20 July 2014

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன் - தெகிடி (2014)



விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
படம் : தெகிடி (2014)
பாடியவர்கள் : அபய் ஜோத்புர்கர் - சைந்தவி 
இசையமைப்பாளர் : நிவாஸ் பிரசன்னா 
இயற்றியவர் : கபிலன் 

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையேத் தொலைத்தேன்
மழையின் இசைக் கேட்டு மலரேத் தலையாட்டு
மழலை மொழிப் போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து 

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையேத் தொலைத்தேன்
மழையின் இசைக் கேட்டு மலரேத் தலையாட்டு
மழலை மொழிப் போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து 
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையேத் தொலைத்தேன்

நான் பேசாத மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உனைக் காணாத நேரம் என்னை
கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூவும் மழை போலவே
மனதோடு நீதான் நுழைந்தாயடி
முதல் பெண்தானே நீதானே
எனக்குள் நானே ஏற்பேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

ஒரு பெண்ணாக உன் மேல்
நானே பேராசை கொண்டேன்
உனை முன்னாலேப் பார்க்கும் போது
பேசாமல் நின்றேன்
எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன்
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்
இனிமேல் நானே நீயானேன்
இவன் பின்னாலேப் போனேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் 
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்

பெண்மீன் விழியில் எனையேத் தொலைத்தேன்

மழையின் இசைக் கேட்டு மலரேத் தலையாட்டு

மழலை மொழிப் போல மனதில் ஒரு பாட்டு

இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து 
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையேத் தொலைத்தேன்

சில்லென்ற சில்லென்ற காற்றிலே - திருமணம் என்னும் நிக்காஹ் (2014)



சில்லென்ற சில்லென்ற காற்றிலே
படம் : திருமணம் என்னும் நிக்காஹ் (2014)
பாடியவர்கள் : சுந்தர் நாராயன ராவ் - கௌஷிகி சக்ரபர்டி -
                         முன்னா சௌகத் அலி -  ஜிப்ரான்
இசையமைப்பாளர் : ஜிப்ரான் 
இயற்றியோர் : காதல்மதி - முன்னா சௌகத் அலி

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே
மெஹந்தி வரைந்த வானிலேத்  
தேடி அலைந்தேனே

ஹமாரே திலோங்கா ஹே கெஹெனா

நேசத்தின் சாரல்கள் தூவத் தூவ

தேரி பியாரி அதாஏ தேரா பாங்க் பன்   
க்யா பாத் ஹே வல்லா

வானில் உதிர்ந்த இறகொன்று 
காற்றின் கன்னங்களில் 
கவிதை எழுதியதே

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே
சிறகை விரித்தேன் 
தேடி அலைந்தேன்...
ஓ..ஓ..ஓஓஓ

யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 

கர்தேஷே துனியா...
சுற்றிடும் உலகமும் 
சுழலும் ஓசையும்
காதில் கேட்குமா

மௌனத்தின் வெளியில் 
ஓம்கார ஒலியும்
ஆமீனும் கேட்குமே

உன் மூச்சு நின்றாலும் 
உன்னைத் தான் நீங்காத சொந்தம் எது

கண் மூடிப் போனாலும் 
உன்னோடு சாய்கின்ற  
நிழல் தானது

என்னைப் போல் பெண் ஒன்று
அச்சாக இன்னொன்று
கண்டேனே நான் 
இன்று யாரென்று சொல்

தாயா உன் சேயா

நேசத்தை சொல்ல 
வார்த்தை வசப்படுமா

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே

மெஹந்தி வரைந்த வானிலே
பாடிப் பறந்தேனே

இரண்டு வானம் விண்மீன் கூட்டம்
வட்ட நிலா என்ன

ஏழை ஒருவன் கந்தல் குடை போல்
தொலைந்த என் மனம்

ஆ... மெல்லிய வெப்பத்தில் மேகத்தின் குளிர்சியின்
சலனம் தான் எது?

சட்டென்று தூவிடும் நட்பென்னும் பூ மழை
சாரலே அது

எல்லாமே நீயாக 
எண்ணத்தில் பூவாக
சொல்லாத சொல்லொன்று 
என்னென்று சொல்

பாசமா நேசமா

மெஹபூபு மேரா ஹோ 
பொஹத்து கூபு சஜ்னா...  
வாழ்வே உன்னோடு   
என்னோடு இணைந்திட வா

இனி எல்லாம் நீ தான் 
நீயே நான் தான்

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே
சிறகை விரித்தேனே 
பாடிப் பறந்தேனே

யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 

Saturday, 19 July 2014

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி - உத்தரவின்றி உள்ளே வா (1970)



மாதமோ ஆவணி..மங்கையோ மாங்கனி..
படம் : உத்தரவின்றி உள்ளே வா (1970)
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியன் - பி.சுசீலா 
இசையமைப்பாளர் : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்

மாதமோ ஆவணி..
மங்கையோ மாங்கனி..
மாதமோ ஆவணி..
மங்கையோ மாங்கனி..
நாளிலே நல்ல நாள், 
நாயகன் வென்ற நாள்..

நாலிலே ஒன்றுதான்,
நாணமும் இன்றுதான்..
நாயகன் பொன்மணி..
நாயகி பைங்கிளி..
டண்டன் ..டண்டன் ..டண்டரன்டட்டா .
டண்டரன்டட்டா .

டண்டன் ..டண்டன் ..டண்டரன்டட்டா .
டண்டரன்டட்டா .

நாயகன் பொன்மணி..
நாயகி பைங்கிளி..

என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்..
இலை விட்டதென்ன? கனி விட்டதென்ன?
தானன..தானன.தானன...நா  
என்றோ ஒரு நாள் எண்ணிய எண்ணம்..

இலை விட்டதென்ன? கனி விட்டதென்ன?..
தானன..தானன.தானன...நா  

இதழ் தொட்டபோதும், இடை தொட்டபோதும் 
ஏக்கம் தீர்ந்ததென்ன..
ஏக்கம் தீர்ந்ததென்ன..

மாதமோ ஆவணி..
மங்கையோ மாங்கனி..
மாதமோ ஆவணி..
மங்கையோ மாங்கனி..

நாளிலே நல்ல நாள், 
நாயகன் வென்ற நாள்..

ஹா..ஹா.. அடே இந்த கன்ட்றாவியெல்லாம் நாம பார்க்கனுமா?
அவன் பார்த்தாவது அனுபவிக்கட்டுமேடா..

மஞ்சள் நிறம்தான்..மங்கையின் கன்னம்..
சிவந்தது என்ன? 

பிறந்தது என்ன?

நடந்தது என்ன?

தானன..தானன.தானன...நா  
மஞ்சள் நிறம்தான்..மங்கையின் கன்னம்..

சிவந்தது என்ன? 

பிறந்தது என்ன?

நடந்தது என்ன?

தானன..தானன...தானன..நா..

கொடை தந்த வள்ளல், குறி வைத்து மெல்ல 
கொடை தந்த வள்ளல், குறி வைத்து மெல்ல
கூட வந்ததென்ன?
கூட வந்ததென்ன?

மாதமோ ஆவணி..
மங்கையோ மாங்கனி..
நாளிலே நல்ல நாள், 
நாயகன் வென்ற நாள்..

நாலிலே ஒன்றுதான்,
நாணமும் இன்றுதான்..
லா.லா.  லா...லா.. 
லா..லா. லா...லா..

காதல் காதல் என்று பேச கண்ணன் - உத்தரவின்றி உள்ளே வா (1970)



காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
படம் : உத்தரவின்றி உள்ளே வா (1970)
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியன் - பி.சுசீலா 
இசையமைப்பாளர் : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்

ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஹாஹ 
ஹா ஆஹாஹா ஆ...ஆஆஆ

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ?
மன்னன் வந்தானோ?
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ?
மன்னன் வந்தானோ?

கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம் கல்யாணப்
பூப்பந்தல் எந்தன் மனம்

ம்ம்ம் ஆஹாஹா ஆஆஆ

கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம் கல்யாணப் 
பூப்பந்தல் எந்தன் மனம்
நீராட நீ செல்லும் யமுனா நதி 
நீராட நீ செல்லும் யமுனா நதி
மங்கல மங்கையின் மேனியும் தங்கிய 
மஞ்சள் நதியோ குங்கும நதியோ?

ஆ..ஆ.. ஆஆஆ ஆஆஆ

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ?

ஆஹாஹா ஆஹாஹா ஹா ம்ம்ம்ம் 
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஆஆஆ

காணாத உறவொன்று நேர் வந்தது 
கண்ணா உன் அலங்காரத் தேர் வந்தது
வாழாதப் பெண் ஒன்று வழி கண்டது 
வாழாதப் பெண் ஒன்று வழி கண்டது 
வாடியப் பூங்கொடி நீரினில் ஆடுது 
மன்னா வருக மாலை தருக

ஆஆ.ஆஆ. ஆஆஆ ஆஆஆ

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ?

பூமாலை நீ தந்து சீராட்டினாய் 
புகழ் மாலை நான் தந்து தாலாட்டுவேன்
பாமாலை பல கோடிப் பாராட்டுவேன் 
பாமாலை பல கோடிப் பாராட்டுவேன் 
பள்ளியின் மீதொரு மெல்லிய நாடகம் 
சொல்லிட வருவேன் ஏதோ தருவேன்

ஆஆஆ ஆ... ஆஆஆ ஆஆஆ

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ? 
மன்னன் வந்தானோ?

பாத்துப் பாத்து உன்னப் பாத்து வானம் குட்டையாச்சு - மஞ்சப்பை (2014)



பாத்துப் பாத்து உன்னப்  பாத்து வானம் குட்டையாச்சு
படம் : மஞ்சப்பை (2014)
பாடியவர்கள் : ஹரிஹரசுதன், வந்தனா ஸ்ரீனிவாசன்
இசை : என்.ஆர். ரகுநந்தன்
இயற்றியவர் : யுகபாரதி

பாத்துப் பாத்து உன்னப்  பாத்து வானம் குட்டையாச்சு
பூத்துப் பூத்துக் கண்ணு பூத்துப் பூமி தட்டையாச்சு

உன்னப் பாத்துத் தானே நிழலும் வெள்ளையாச்சு 
ஆசக் கூடிப் போக அணிலும் சிங்கமாச்சு

தாலி செய்ய சொல்லு நீயும் தேவயில்ல வெட்டிப் பேச்சு 

பாத்துப் பாத்து உன்னப் பாத்து வானம் குட்டையாச்சு
பூத்துப் பூத்துக் கண்ணு பூத்துப் பூமி தட்டையாச்சு

கோழி ரெக்க உன்னப் பார்த்து வானவில்லு ஆனேன்
கொஞ்ச நேரம் உன்னப் பேசி கண்ணதாசன் ஆனேன்

கூடப் பந்து நீயும் தீண்டப் பூமி பந்து ஆனேன்
கூறுக்  கத்தி கண்களால ஊதுவத்தி ஆனேன்

நூலுக் கண்டு உன்னால் கோலிக் குண்டு ஆனேன்

பாத மண்ணு ஏனோ பூசுமஞ்சள் ஆனேன்

ஜோடியாக நீயும் சேரப் பட்டுப்பூச்சி பட்டம் ஆனேன்

பாத்துப் பாத்து உன்னப் பாத்து வானம் குட்டையாச்சு
பூத்துப் பூத்துக் கண்ணு பூத்துப் பூமி தட்டையாச்சு

நேத்து உன்னப் பார்த்த பின்பு தூங்கலான்னுப் போனேன்
கனவில் நீயும் துரத்தி அடிக்க தோத்துதானப் போனேன்

தோத்து நீயும் போடுறேனு கோபமாகிப் போனேன் 
கொஞ்சிடாம போனியேனு சாப்பிடாமப் போனேன்

உன்ன எண்ணி நானே ஒல்லியாகிப் போனேன்

புள்ளி நீயும் வைக்கக் கோலமாகி போனேன்

கூடு விட்டு கூடுப் பாயக் கோக்கு மாக்கு ஆகிப் போனேன்

பாத்துப் பாத்து உன்னப் பாத்து வானம் குட்டையாச்சு
பூத்துப் பூத்துக் கண்ணு பூத்துப் பூமி தட்டையாச்சு

உன்னப் பாத்து தானே நிழலும் வெள்ளையாச்சு 
ஆச கூடி போக அணிலும் சிங்கமாச்சு

தாலி செய்யப் போறேன் நானும் தேவயில்ல வெட்டிப் பேச்சு

Sunday, 13 July 2014



உலகக் கோப்பைச் சாம்பியனாக "ஜெர்மனி"
அபாரமான ஆட்டத்தின் கூடுதல் கால அளவில் 
ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் 
அர்ஜென்டினாவை வீழ்த்தி வெற்றிக்கனியைப் 
பறித்து, 2014 கனவுக் கோப்பையை கைப் பற்றியது..
ஜெர்மனி அணியின் மரியோ கோட்ஸ் 113 ஆவது நிமிடத்தில் 
அடித்த கோல் மூலம் நடப்பு சாம்பியன் பட்டத்தை 
பெற்று, நான்கு முறை வென்ற அணி பட்டியலில் இடம் பெற்றது
.

உலகக் கோப்பை கால் பந்தாட்டப் போட்டிகள்..




உலகக் கோப்பை கால் பந்தாட்டப் போட்டிகள்..
1930 இல் தொடங்கி இது வரை 19 இறுதிப் போட்டிகள் 
நடந்துள்ளன..

1942 & 1946 ஆகிய ஆண்டுகளில் இரண்டாம் உலகப் போர் 
காரணமாக நடைபெற வில்லை
வெற்றிப் பெற்ற அணி விவரங்கள்..
பிரேசில் - 5 (1958,1962, 1970, 1994 & 2002)
இத்தாலி - 4 (1934,1938,1982 & 2006)
ஜெர்மனி - 3 (1954,1974 & 1990)
அர்ஜென்டினா - 2 (1978 & 1986)
உருகுவே - 2 (1930 & 1950)
பிரான்ஸ் - 1 (1998)
இங்கிலாந்து - 1 (1966)
ஸ்பெயின் - 1 (2010)
இன்று இரவு நடைபெறும் இறுதிப் போட்டி 20
ஆவது போட்டி..
இதில் மோதும் அணிகளான
ஜெர்மனி 7 முறையும், அர்ஜென்டினா 4 முறையும்
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்..
இரண்டு அணிகள் இதுவரை இரண்டு முறை நேரடியாக
இறுதிப் போட்டியில் சந்தித்துள்ளனர் (1986 & 1990)
1986 இல் இறுதிப் போட்டியில் தோல்வி அடையச் செய்த
அர்ஜென்டினாவை, 1990 வெற்றி அடைந்து பழி தீர்த்து
கொண்டது.
இன்று மூன்றவாது முறையாக மோதும் இவர்களின்
அணியில் அர்ஜென்டினாவின் மெஸ்சி,
ஜெர்மனியின் க்ளோஸ் நட்சத்திர வீரர்கள்..
யார் கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்பதை
இன்று இரவு அறிவோம்..
அக்டோபஸ் ஜோதிடத்தில் ஜெர்மனி வெல்லும் என
கணித்துள்ளனர்..
இனி அடுத்த உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில்
2018 ஆம் ஆண்டு ஜூன் 8 முதல் ஜூலை 8 வரை 32 நாடுகள்
கலந்து கொண்டு நடைபெறும்.

"காட்சி பிழை" குறும்படம்



நண்பர் மனோஜ் இயக்கிய "காட்சி பிழை" குறும்படம் 
உணர்த்தும் செய்தி..எழுத்தால் ஆக்கிரமிக்கும் சில எழுத்தாளர்கள் தங்களைப் பற்றி வெளி உலகுக்கு 
பந்தா காட்டா விடில் பிறர் பார்க்கும் பார்வையில் பிழையாகி 
போய் விடுவர் என்பதை உணர்த்துகிறது..
கும்படக் காட்சியில் கண்ட பிழை..
இக்காலத்தில் கேமரா செல் போன் இல்லா ஒரு  இளைஞனா? என வினாவை எழுப்புகிறது..
எனினும் வாழ்த்துகள்..

Saturday, 12 July 2014

புத்தம் புதியப் புத்தகமே - அரச கட்டளை (1967)



புத்தம் புதியப் புத்தகமே
படம் : அரச கட்டளை  (1967)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா 
இசையமைப்பாளர் : கே.வி.மகாதேவன் 
இயற்றியவர் : கவிஞர் வாலி 

புத்தம் புதியப் புத்தகமே
உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்
உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்
பொதிகை வளர்ந்த செந்தமிழே
உன்னை பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்
பொதிகை வளர்ந்த செந்தமிழே
உன்னை பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்

பள்ளியறை என்னும் பள்ளியிலே
இன்று புதிதாய் வந்த மாணவி நான்
பள்ளியறை என்னும் பள்ளியிலே
இன்று புதிதாய் வந்த மாணவி நான்
ஏட்டைப் புரட்டிப் பாட்டை படிக்கும்
வீட்டுப் புலவன் நாயகி நான்
ஏட்டைப் புரட்டிப் பாட்டை படிக்கும்
வீட்டுப் புலவன் நாயகி நான்
பள்ளியறை என்னும் பள்ளியிலே

அஞ்சு விரல் பட்டால் என்ன?
அஞ்சுகத்தைத் தொட்டால் என்ன?
அஞ்சு விரல் பட்டால் என்ன?
அஞ்சுகத்தைத் தொட்டால் என்ன?

தொட்ட சுகம் ஒன்றா என்ன?
துள்ளும் உள்ளம் பந்தா என்ன?
தொட்ட சுகம் ஒன்றா என்ன?
துள்ளும் உள்ளம் பந்தா என்ன?

செவ்விதழைக் கண்டால் என்ன?
தேனெடுத்து உண்டால் என்ன?
செவ்விதழைக் கண்டால் என்ன?
தேனெடுத்து உண்டால் என்ன?

கொத்து மலர்ச் செண்டா என்ன?
கொஞ்சும் மன்னன் வண்டா என்ன?
கொத்து மலர்ச் செண்டா என்ன?
கொஞ்சும் மன்னன் வண்டா என்ன?

புத்தம் புதியப் புத்தகமே
உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்
ஏட்டைப் புரட்டிப் பாட்டைப் படிக்கும்
வீட்டுப் புலவன் நாயகி நான்
புத்தம் புதிய புத்தகமே

கையணைக்க வந்தால் என்ன?
மெய்யணைத்துக் கொண்டால் என்ன?
கையணைக்க வந்தால் என்ன?
மெய்யணைத்துக் கொண்டால் என்ன?

முத்தமழை என்றால் என்ன?
சொர்க்கம் ஒன்று உண்டா என்ன?
முத்தமழை என்றால் என்ன?
சொர்க்கம் ஒன்று உண்டா என்ன?

வெட்கம் வரும் வந்தால் என்ன?
வேண்டியதைத் தந்தால் என்ன?
வெட்கம் வரும் வந்தால் என்ன?
வேண்டியதைத் தந்தால் என்ன?

இன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன?
இன்பம் இன்பம் என்றால் என்ன?
இன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன?
இன்பம் இன்பம் என்றால் என்ன?

புத்தம் புதியப் புத்தகமே
உன்னைப் புரட்டிப் பார்க்கும் புலவன் நான்

ஏட்டைப் புரட்டிப் பாட்டைப் படிக்கும்
வீட்டுப் புலவன் நாயகி நான்

புத்தம் புதியப் புத்தகமே...

உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும் - நான் ஆணையிட்டால் (1966)



உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
படம் : நான் ஆணையிட்டால் (1966)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா 
இசையமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.இராமமூர்த்தி
இயற்றியவர் : கவிஞர் வாலி 

பாட்டு வரும்…. 

என்ன? 

பாட்டு வரும்….
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
உன்னைப்  பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்

அதைக் கேட்டுக் கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்
பாட்டு வரும்….

ஆஹா..ஹா 

பாட்டு வரும்….
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்

இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
அதில் எத்தனையோ நான் எழுதிவைத்தேன்
இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
அதில் எத்தனையோ நான் எழுதிவைத்தேன்
எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும்
எனக்கது போதும் வேறென்ன வேண்டும் -
பாட்டு வரும்…. பாட்டு வரும்….
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்

அதைக் கேட்டுக் கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்
அதைக் கேட்டுக் கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்

காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
சிறை எடுத்தாலும் காவலன் நீயே
காவலன் வாழ்வில் காவியம் நானே -
பாட்டு வரும்…. பாட்டு வரும்….
அதைக் கேட்டுக் கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்

மனமென்னும் ஓடையில் நீந்தி வந்தேன் - அதில் 
மலர் முகம் ஒன்றை ஏந்தி வந்தேன் 
மனமென்னும் ஓடையில் நீந்தி வந்தேன் - அதில் 
மலர் முகம் ஒன்றை ஏந்தி வந்தேன் 

ஏந்திய கையில் இருப்பவள் நானே 
இறைவனை நேரில் வரவழைத்தேனே 
ஏந்திய கையில் இருப்பவள் நானே 
இறைவனை நேரில் வரவழைத்தேனே 

பாட்டு வரும்…
பாட்டு வரும்….
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்

அஹ ஆஹாஹா அஹஹாஹா அஹஹாஹா ஹாஹா...

Thursday, 10 July 2014

ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க? - என் கடமை (1964)



ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க?
படம் : என் கடமை (1964)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.இராமமூர்த்தி 
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்

ஹல்லோ...ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க? இன்று
ஏனிந்தக் கோபம் கொஞ்சம் நில்லுங்க    
ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க? இன்று
ஏனிந்தக் கோபம் கொஞ்சம் நில்லுங்க
ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க?

தன்னந் தனியாகப் போகாதீங்க  உங்க
தளதள உடம்புக்கு ஆகாதுங்க  
தன்னந் தனியாகப் போகாதீங்க  உங்க
தளதள உடம்புக்கு ஆகாதுங்க
வழித் துணையாக வாரேனுங்க  இந்த
வாலிப மனசை மிஸ் பண்ணாதீங்க

ஹல்லோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க? இன்று
ஏனிந்தக் கோபம் கொஞ்சம் நில்லுங்க
ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க?

கண்ணழகைக் கண்டால் கூட்டம் சேருங்க
காளையர்கள் நெஞ்சில் ஆசை தோணுங்க
கண்ணழகைக் கண்டால் கூட்டம் சேருங்க
காளையர்கள் நெஞ்சில் ஆசை தோணுங்க
மாப்பிள்ளைப் போலே நான் வரும் போது
பார்ப்பவர் உள்ளம் மாறாதுங்க

ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க? இன்று
ஏனிந்தக் கோபம் கொஞ்சம் நில்லுங்க
ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க?

ஆசையுடன் பார்த்தால் மோசமில்லீங்க
ஆதரவைக் கேட்டால் பாவமில்லீங்க
ஆசையுடன் பார்த்தால் மோசமில்லீங்க
ஆதரவைக் கேட்டால் பாவமில்லீங்க
நாட்டுக்கு நாடு வீட்டுக்கு வீடு நடப்பது தானே ஓடாதிங்க

ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க? இன்று
ஏனிந்தக் கோபம் கொஞ்சம் நில்லுங்க
ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க?

Tuesday, 8 July 2014

கரிகாலன் காலப் போல கறுத்திருக்குது குழலு - வேட்டைக்காரன் (2009)



கரிகாலன் காலப் போல கறுத்திருக்குது குழலு
படம் : வேட்டைக்காரன் (2009)
பாடியவர்கள் : சுஜித் சுரேஷன்  - சங்கீதா ராஜேஸ்வரன்
பாடலாசிரியர்:கபிலன்
இசை : விஜய் ஆண்டனி

கரிகாலன் காலப் போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்லக் குழல் இல்ல தாஜ்மகால் நிழலு
சேவலோடக் கொண்டைப் போலச் செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு

ஏய் பருத்திப் பூவப் போலப் பதியுது உன் பாதம்
பாதம் இல்லப் பாதம் இல்லப் பச்சரிசி சாதம்
ஏய் வலம்புரி சங்கைப் போல வழுக்குது உன் கழுத்து
கழுத்து இல்லக் கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து

கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு
சேவலோடக்  கொண்டைப் போலச் செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு

ஏய் பாதை வளைவு போல உள்ளதடி மூக்கு
மூக்கு இல்ல மூக்கு இல்ல முந்திரி முந்திரி கேக்
ஊதி வச்ச பலூன் போல உப்பிருக்கு கன்னம்
கன்னம் இல்லக் கன்னம் இல்ல வெள்ளி வெள்ளி கிண்ணம்
மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்
தேகம் இல்லத் தேகம் இல்ல தீப் புடிச்ச மேகம்
மாராப்பு பந்தலிலே மறச்சி வெச்ச சோலை
சோலை இல்லச் சோலை இல்ல ஜல்லிக்கட்டு காளை

கரிகாலன் காலப் போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்லக் குழல் இல்ல தாஜ்மகால் நிழலு
சேவலோடக் கொண்டைப் போலச் செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு

கண்ட உடன் வெட்டுதடி கத்திரிக்கோலு கண்ணு
கண்ணு இல்லக் கண்ணு இல்ல கிறங்கடிக்கிற ஜின்னு
பத்த வெச்ச மத்தாப்பு போல மினுமினுக்குது பல்லு
பல்லு இல்லப் பல்லு இல்ல பதிச்ச வைர கல்லு
சுறுக்கு பையப் போல இருக்கு இடுப்பு
இடுப்புல இடுப்பு இல்ல எந்திர மடிப்பு
கண்ணுப் படப் போகுதுன்னு கன்னத்துல மச்சம்
மச்சம் இல்ல மச்சம் இல்ல நீ விட்டு வச்ச மிச்சம்

கரிகாலன் காலக் போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்லக் குழல் இல்லத் தாஜ்மகால் நிழலு
சேவலோடக் கொண்டைப் போலச் செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு

ஏய் பருத்திப் பூவப் போலப் பதியுது உன் பாதம்
பாதம் இல்லப் பாதம் இல்லப் பச்சரிசி சாதம்
ஏய் வலம்புரி சங்கைப் போல வழுக்குது உன் கழுத்து
கழுத்து இல்லக் கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து

Monday, 7 July 2014

ஆறு மனமே ஆறு - அந்த.. - ஆண்டவன் கட்டளை (1964)



ஆறு மனமே ஆறு - அந்த
படம் : ஆண்டவன் கட்டளை (1964)
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.இராமமூர்த்தி
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்

ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு

ஒன்றே சொல்வார்
ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம்
துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி
ஒன்றே சொல்வார்
ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம்
துன்பத்தில் இன்பம்
இறைவன் வகுத்த நியதி
சொல்லுக்குச் செய்கை
பொன்னாகும் வரும்
துன்பத்தில் இன்பம் பட்டாகும்
சொல்லுக்குச் செய்கை
பொன்னாகும் வரும்
துன்பத்தில் இன்பம் பட்டாகும்
இந்த இரண்டு கட்டளை
அறிந்த மனதில் எல்லா
நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு

உண்மையைச் சொல்லி
நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது
பணிவுக் கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மையைச் சொல்லி
நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் போது
பணிவுக் கொண்டால்
உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் பெரும்
பணிவு என்பதும் பண்பாகும்
உண்மை என்பது அன்பாகும் பெரும்
பணிவு என்பதும் பண்பாகும்
இந்த நான்கு கட்டளை
அறிந்த மனதில் எல்லா
நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
ஆசை கோபம் களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணைக் கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்
இதில் மிருகம் என்பது கள்ளமனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு