சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்..
படம் :ராமன் எத்தனை ராமனடி (1970)
பாடியவர் : பி.சுசீலா
இசையமைப்பாளர் :மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
படம் :ராமன் எத்தனை ராமனடி (1970)
பாடியவர் : பி.சுசீலா
இசையமைப்பாளர் :மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
ம்... ம்... ம்...
தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்
தேனுலாவும் தேனிலாவும் உன் பக்கம்
சொர்க்கமோ நானும் நீயும் போகுமிடம்
தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்
அந்நாளிலே நீ கண்ட கனவு
காயாகி இப்போது கனியானதோ?
என் நெஞ்சிலே நீ தந்த உறவு
கனவாகி இப்போது நனவானதோ?
மின்னல் இளமேனி ஆசைத் தீர
மெல்ல மெல்ல சேராதோ?
பொன்னழகு கன்னம் காதல் தேவன்
பூஜையில் மலராதோ?
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
ம்... ம்... ம்...
தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்
பூ மாலைகள் உன் மீது விழுந்து
ஊரெங்கும் பேர் பாடும் பொன்னாளிலே
பாமாலைகள் பல்லாக்கு வரிசை
ஒன்றல்ல பலக் கோடி உன் வாழ்விலே
பங்கு கொள்ள வந்து கண்ணா உந்தன்
சங்கம் வரக் கூடாதோ?
மங்கை இவள் பேரும் உன்னுடன் சேர்ந்தால்
வாழ்வே மலராதோ?
தேரில் வந்த ராஜராஜன் என் பக்கம்
தேனுலாவும் தேனிலாவும் உன் பக்கம்
சொர்க்கமோ நானும் நீயும் போகுமிடம்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
ம்... ம்... ம்... ம்... ம்... ம்...
ம்... ம்... ம்... ம்... ம்... ம்...
No comments:
Post a Comment