Sunday, 6 July 2014

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு.. - ஜில்லா (2014)



கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
படம் : ஜில்லா (2014)
பாடியவர்கள் : நடிகர் விஜய் - ஸ்ரேயா கோஷல்
இசையமைப்பாளர் : டி.இமான்
இயற்றியவர் : கவிஞர் வைரமுத்து
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வச்ச கண்ணு

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
அந்த கண்ணுக்கு அஞ்சி லட்சம் தாரேண்டி
அந்த நெஞ்சுக்கு சொத்த எழுதி தாரேண்டி
முத்தம் தரியா ஓ ஓ ஓ

ஓ கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
இந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் போதாது 
இந்த நெஞ்சுக்கு சொத்து எழுதி தீராது
தள்ளி நில்லையா

அடி உன் வீடு தல்லாக்குளம்
என் வீடு தெப்பக்குளம்
நீரோடு நீரு சேரட்டுமே
அழகர் மலைக்கோவில் யானைவந்து 
ஹல்வாவை தின்பது போல்
என் ஆசை உன்னை தின்னட்டுமே

ஒத்தைக்கொத்த அழைக்கும் அழகு
ஒத்தப்பக்கம் ஒதுங்கும் பொழுது
புத்திக்குள்ள அரிக்குது நெத்திக்குள்ள துடிக்குது

வெள்ளை முழி வெளியே தெரிய
கள்ள முழி முழிக்கும் பொழுது
என் உசுரு ஒடுங்குது ஈரக்குலை நடுங்குது

சின்ன சின்னப் பொய்யும் பேசற
சில்லுன்னு தான் சூடும் எத்துர

நீ பார்த்தாக்கா தென்னமட்டை
பான்ஜாச்சா தேக்கங்கட்ட
பாசாங்கு வேணாம் சுந்தரரே

நீ தேயாத நாட்டுக் கட்டை
தெரியாம மாட்டிகிட்ட
என் ராசி என்றும் மன்மதனே

கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுரப் பறிக்குற என்ன செய்ய நினைக்குற

அன்புவிட்டு ஆள அடிக்கிற
தும்பவிட்டு வால பிடிக்குற

தாலி இல்லாத சம்சாரமே
தடையில்லா மின்சாரமே
விளக்கேத்த வாடி வெண்ணிலவே

எந்தன் மார்போட சந்தனமே
மாராப்பு வைபோகமே
முத்தாட வாயா முன்னிரவே

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வச்ச கண்ணு

இந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் போதாது 
இந்த நெஞ்சுக்கு சொத்து எழுதி தீராது
தள்ளி நில்லையா

கண்டாங்கி கண்டாங்கி 

ம் ம்கும் ம் ம்
கண்டாலே கிறுக்கேத்தும்

கஞ்சா வச்ச கண்ணு

No comments:

Post a Comment