Saturday, 19 July 2014

பாத்துப் பாத்து உன்னப் பாத்து வானம் குட்டையாச்சு - மஞ்சப்பை (2014)

பாத்துப் பாத்து உன்னப்  பாத்து வானம் குட்டையாச்சு
படம் : மஞ்சப்பை (2014)
பாடியவர்கள் : ஹரிஹரசுதன், வந்தனா ஸ்ரீனிவாசன்
இசை : என்.ஆர். ரகுநந்தன்
இயற்றியவர் : யுகபாரதி

பாத்துப் பாத்து உன்னப்  பாத்து வானம் குட்டையாச்சு
பூத்துப் பூத்துக் கண்ணு பூத்துப் பூமி தட்டையாச்சு

உன்னப் பாத்துத் தானே நிழலும் வெள்ளையாச்சு 
ஆசக் கூடிப் போக அணிலும் சிங்கமாச்சு

தாலி செய்ய சொல்லு நீயும் தேவயில்ல வெட்டிப் பேச்சு 

பாத்துப் பாத்து உன்னப் பாத்து வானம் குட்டையாச்சு
பூத்துப் பூத்துக் கண்ணு பூத்துப் பூமி தட்டையாச்சு

கோழி ரெக்க உன்னப் பார்த்து வானவில்லு ஆனேன்
கொஞ்ச நேரம் உன்னப் பேசி கண்ணதாசன் ஆனேன்

கூடப் பந்து நீயும் தீண்டப் பூமி பந்து ஆனேன்
கூறுக்  கத்தி கண்களால ஊதுவத்தி ஆனேன்

நூலுக் கண்டு உன்னால் கோலிக் குண்டு ஆனேன்

பாத மண்ணு ஏனோ பூசுமஞ்சள் ஆனேன்

ஜோடியாக நீயும் சேரப் பட்டுப்பூச்சி பட்டம் ஆனேன்

பாத்துப் பாத்து உன்னப் பாத்து வானம் குட்டையாச்சு
பூத்துப் பூத்துக் கண்ணு பூத்துப் பூமி தட்டையாச்சு

நேத்து உன்னப் பார்த்த பின்பு தூங்கலான்னுப் போனேன்
கனவில் நீயும் துரத்தி அடிக்க தோத்துதானப் போனேன்

தோத்து நீயும் போடுறேனு கோபமாகிப் போனேன் 
கொஞ்சிடாம போனியேனு சாப்பிடாமப் போனேன்

உன்ன எண்ணி நானே ஒல்லியாகிப் போனேன்

புள்ளி நீயும் வைக்கக் கோலமாகி போனேன்

கூடு விட்டு கூடுப் பாயக் கோக்கு மாக்கு ஆகிப் போனேன்

பாத்துப் பாத்து உன்னப் பாத்து வானம் குட்டையாச்சு
பூத்துப் பூத்துக் கண்ணு பூத்துப் பூமி தட்டையாச்சு

உன்னப் பாத்து தானே நிழலும் வெள்ளையாச்சு 
ஆச கூடி போக அணிலும் சிங்கமாச்சு

தாலி செய்யப் போறேன் நானும் தேவயில்ல வெட்டிப் பேச்சு

No comments:

Post a Comment