பாட்டும் நானே பாவமும் நானே..
படம் : திருவிளையாடல் (1965)
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே.வி.மகாதேவன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
ஆ...ஞா ஆ...ஞா ஆ...ஞா
பாட்டும் நானே பாவமும் நானே...
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாட வைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாட வைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ ?
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ ?
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாட வைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாட வைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..
அசையும்..பொருளில்..இசையும் நானே
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கம் நானே
என்னிசை நின்றால் அடங்கும் உலகே..ஏ.. ஏ..
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே..
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா?
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா?
ஆலவாயனொடு பாடவந்தவனின்
பாடும்வாயை இனி மூடவந்ததொரு
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாட வைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாட வைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..
No comments:
Post a Comment