Sunday, 13 July 2014

உலகக் கோப்பை கால் பந்தாட்டப் போட்டிகள்..




உலகக் கோப்பை கால் பந்தாட்டப் போட்டிகள்..
1930 இல் தொடங்கி இது வரை 19 இறுதிப் போட்டிகள் 
நடந்துள்ளன..

1942 & 1946 ஆகிய ஆண்டுகளில் இரண்டாம் உலகப் போர் 
காரணமாக நடைபெற வில்லை
வெற்றிப் பெற்ற அணி விவரங்கள்..
பிரேசில் - 5 (1958,1962, 1970, 1994 & 2002)
இத்தாலி - 4 (1934,1938,1982 & 2006)
ஜெர்மனி - 3 (1954,1974 & 1990)
அர்ஜென்டினா - 2 (1978 & 1986)
உருகுவே - 2 (1930 & 1950)
பிரான்ஸ் - 1 (1998)
இங்கிலாந்து - 1 (1966)
ஸ்பெயின் - 1 (2010)
இன்று இரவு நடைபெறும் இறுதிப் போட்டி 20
ஆவது போட்டி..
இதில் மோதும் அணிகளான
ஜெர்மனி 7 முறையும், அர்ஜென்டினா 4 முறையும்
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்..
இரண்டு அணிகள் இதுவரை இரண்டு முறை நேரடியாக
இறுதிப் போட்டியில் சந்தித்துள்ளனர் (1986 & 1990)
1986 இல் இறுதிப் போட்டியில் தோல்வி அடையச் செய்த
அர்ஜென்டினாவை, 1990 வெற்றி அடைந்து பழி தீர்த்து
கொண்டது.
இன்று மூன்றவாது முறையாக மோதும் இவர்களின்
அணியில் அர்ஜென்டினாவின் மெஸ்சி,
ஜெர்மனியின் க்ளோஸ் நட்சத்திர வீரர்கள்..
யார் கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்பதை
இன்று இரவு அறிவோம்..
அக்டோபஸ் ஜோதிடத்தில் ஜெர்மனி வெல்லும் என
கணித்துள்ளனர்..
இனி அடுத்த உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில்
2018 ஆம் ஆண்டு ஜூன் 8 முதல் ஜூலை 8 வரை 32 நாடுகள்
கலந்து கொண்டு நடைபெறும்.

No comments:

Post a Comment