Saturday, 12 July 2014

உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும் - நான் ஆணையிட்டால் (1966)

உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
படம் : நான் ஆணையிட்டால் (1966)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா 
இசையமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.இராமமூர்த்தி
இயற்றியவர் : கவிஞர் வாலி 

பாட்டு வரும்…. 

என்ன? 

பாட்டு வரும்….
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
உன்னைப்  பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்

அதைக் கேட்டுக் கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்
பாட்டு வரும்….

ஆஹா..ஹா 

பாட்டு வரும்….
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்

இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
அதில் எத்தனையோ நான் எழுதிவைத்தேன்
இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
அதில் எத்தனையோ நான் எழுதிவைத்தேன்
எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும்
எனக்கது போதும் வேறென்ன வேண்டும் -
பாட்டு வரும்…. பாட்டு வரும்….
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்

அதைக் கேட்டுக் கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்
அதைக் கேட்டுக் கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்

காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
சிறை எடுத்தாலும் காவலன் நீயே
காவலன் வாழ்வில் காவியம் நானே -
பாட்டு வரும்…. பாட்டு வரும்….
அதைக் கேட்டுக் கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்

மனமென்னும் ஓடையில் நீந்தி வந்தேன் - அதில் 
மலர் முகம் ஒன்றை ஏந்தி வந்தேன் 
மனமென்னும் ஓடையில் நீந்தி வந்தேன் - அதில் 
மலர் முகம் ஒன்றை ஏந்தி வந்தேன் 

ஏந்திய கையில் இருப்பவள் நானே 
இறைவனை நேரில் வரவழைத்தேனே 
ஏந்திய கையில் இருப்பவள் நானே 
இறைவனை நேரில் வரவழைத்தேனே 

பாட்டு வரும்…
பாட்டு வரும்….
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்

அஹ ஆஹாஹா அஹஹாஹா அஹஹாஹா ஹாஹா...

No comments:

Post a Comment