Tuesday, 22 July 2014

போகாதே போகாதே நீ பொன்னால் - டமால் டுமீல் (2014)



போகாதே போகாதே 
படம் : டமால் டுமீல்  (2014)
பாடியவர்கள் : ரம்யா நம்பீசன் 
இசை : எஸ்.தமன் 
பாடலாசிரியர் : தாமரை 

போகாதே போகாதே
நீ போனால் எந்தன் நெஞ்சம் 
தாங்காதே

என்னை நீ, நீங்காதே
நல்லதோர் வீணை செய்த பின்பும்
கொல்லையில் வீசிசெல்ல,  மெல்ல
என்னை நீ பிரிந்து
செல்ல, செல்ல, செல்ல, செல்ல
என்னுயிர் பறந்து செல்லுமே

போகாதே போகாதே
நீ போனால் எந்தன் நெஞ்சம் 
தாங்காதே

உன் தோளை தோளை ஊஞ்சல் ஆக்கி
நானும் சாய்ந்து ஆடி, ஆடி விழுவேன்
அன்பாலே மறவேன்

என் சேலை தன்னை போர்வையாக்கி
நீயும் ஆழ்ந்து தூங்க, தூங்க தருவேன்
முத்தங்கள் இடுவேன்

காற்றிலே கேட்கும் ஓசை எல்லாம்
காதிலே வந்து தைக்கும் உள்ளம்
வாழ்விலே நீயும் இல்லை, இல்லை, இல்லை
என்றால் நானும் ஏன் வாழவேண்டும் சொல்

போகாதே போகாதே
நீ போனால் எந்தன் நெஞ்சம் 
தாங்காதே

ஹே.. நானும் நீயும் மாலை மாற்றும்,
மாலை மாற்றும் சொப்பனங்கள் களையும்
சொல்லாமல் சிதையும்

மோதிரங்கள் வாங்கும் போது
முத்து வைர கற்கள், கற்கள் உடையும்
முகூர்த்தம் தவறும்

அன்றிலாய் வாழ நானும் வந்தேன்
அன்னமாய் பாலைத்  தானே தந்தேன்
உன்னையே எண்ணி, எண்ணி, எண்ணி வாழ்ந்து
வாழ்ந்து என்னையே மறந்து போனதேன்

போகாதே போகாதே
நீ போனால் எந்தன் நெஞ்சம் 
தாங்காதே 

No comments:

Post a Comment