கூடை மேலே கூடை வச்சு
படம் : ரம்மி (2013)
பாடியவர்கள் : வி.வி.. பிரசன்னா - வந்தனா ஸ்ரீனிவாசன்
இசையமைப்பாளர் : டி.இமான்
இயற்றியவர் : யுகபாரதி
ஆ......ஆ.....
கூடை மேலே கூடை வச்சு கூடலூருப் போறவளே
உன் கூட கொஞ்சம் நானு வரேன் கூட்டிக்கிட்டுப் போனா என்ன
ஒத்தையிலே நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலேப் போவேன்டி சேதாரமா
கூடை மேலே கூடை வச்சு கூடலூருப் போறவள
நீ கூட்டிக்கிட்டுப் போகச் சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
தூவத்தலைத் தேச்சு வச்சா துரு ஏறுமா?
நான் போறேனே சொல்லாம வாரேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா
சாதத்துள்ள கல்லுப் போல நெஞ்சுக்குள்ள நீ இருந்து
சரிக்காம சதி பண்ணுற
சீயக்காயை போல கண்ணில் சிக்கிக்கிட்ட போதும் கூட
உறுத்தாம உயிர் கொல்லுற
அதிகம் பேசாம அளந்து தான் பேசி
எதுக்கு சடைப் பின்னுற?
சல்லி வேர ஆணி வேரா ஆக்குற
சட்டைப் பூவ வாசமா மாத்துற
நீ போகாத ஊருக்கு பொய்யாக வழி சொல்லுரே
கூடை மேலே கூடை வச்சு கூடலூரு போறவளே
நீ கூட்டிக்கிட்டுப் போகச் சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை
எங்க வேணா போயிக்க நீ என்னை விட்டுப் போயிடாம
இருந்தாலே அது போதுமே
தண்ணியதான் விட்டுப்புட்டு தாமரையும் போனதினா
தரை மேலே தலை சாயுமே
மறைஞ்சுப் போனாலும் மறந்துப் போகாத
நெனைப்பு தான் சொந்தமே
பட்டை தீட்ட தீட்டத் தான் தங்கமே
உன்னை பார்க்க பார்க்கத் தான் இன்பமே
நீ பார்க்காது போனாலே கிடையாது மறு ஜென்மமே
ஆ......ஆ.....
கூடை மேலே கூடை வச்சு கூடலூரு ஹ...கூடலூருப் போறவளே
நீ கூட்டிக்கிட்டுப் போகச் சொன்னா என்ன சொல்லும் ஊரு என்னை
ஒத்தையிலே நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வரேன் ஒரு ஓரமா
நான் போறேனே சொல்லாம வாரேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காமத் தாரேனே தாராளமா
ராரார......ராரார......ராரார......ராரார......ராரார......
No comments:
Post a Comment