Friday, 25 July 2014

ஒரு வெட்கம் வருதே.. - பசங்க (2009)



ஒரு வெட்கம் வருதே..
படம் : பசங்க (2009) 
பாடியவர்கள் :  ஸ்ரேயா கோஷல் - நரேஷ் அய்யர்
இசையமைப்பாளர் : ஜேம்ஷ் வசந்தன் 
இயற்றியவர் : கவிஞர் தாமரை 

ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைப்பாயுதே
இது என்ன முதலா? முடிவா?
இனி எந்தன் உயிரும் உனதா?
புது இன்பம் தாலாட்டுதே
போகச் சொல்லி கால்கள் தள்ள
நிற்கச் சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
இது தரும் தடம் தடுமாற்றம் சுகம்

மழை இன்று வருமா? வருமா?
குளிர்க் கொஞ்சம் தருமா? தருமா?
கனவென்னைக் களவாடுதே
இது என்ன முதலா? முடிவா?
இனி எந்தன் உயிரும் உனதா?
புது இன்பம் தாலாட்டுதே
கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொல்லும் இன்பம்
பட படப் படவெனவே
துடித்துடித்திடும் மனமே
வர வர வரக் கரைத்தாண்டிடுமே

மேலும் சில முறை உன் குறும்பிலே 
நானே தோற்கிறேன்
உன் மடியிலே என் தலையணை 
இருந்தால் உறங்குவேன்

ஆணின் மனதிற்குள்ளும் 
பெண்மை இருக்கிறதே
தூங்க அழைத்திடவே 
நெஞ்சம் துடிக்கிறதே

ஒரு வரி நீ சொல்ல 
ஒரு வரி நான் சொல்ல
எழுந்திடும் காதல் காவியம்
அனைவரும் ஈர்க்கும் நாள் வரும்

மழை இன்று வருமா? வருமா?
குளிர்க்கொஞ்சம் தருமா? தருமா?
கனவென்னைக் களவாடுதே..

இது என்ன முதலா? முடிவா?
இனி எந்தன் உயிரும் உனதா?
புது இன்பம் தாலாட்டுதே..

ஒ... கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொல்லும் இன்பம்

இது முதல் அனுபவமே..
இனி இது தொடர்ந்திடுமே..

வர வர வரக் கரைத்தாண்டிடுமே..

தில்லாரே தில்லாரே தில்லை தில்லாரே 
தில்லாரே..தில்லாரே ..
ஓஹோ..ஹா..
தில்லாரே..

ஆ.... காற்றில் கலந்து நீ என் 
முகத்திலே ஏனோ மோதினாய்..
பூ மரங்களில் நீ இருப்பதால் 
என் மேல் உதிர்கிறாய்..

ஒ… தூது அனுப்பிடவே 
நேரம் எனக்கில்லையே..
நினைத்த பொழுதினிலே 
வரணும் எதிரினிலே..

வெயிலிலே ஊர் கோலம் 
இது வரை நாம் போனோம்
நிகழ்கிறதே கார்க்காலமே 
நனைந்திடுவோம் நாள்தோறுமே..

ஒரு வெட்கம் வருதே வருதே 
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலைப்பாயுதே...

இது என்ன முதலா? முடிவா?
இனி எந்தன் உயிரும் உனதா?
புது இன்பம் தாலாட்டுதே....

ஓ….போகச்சொல்லி கால்கள் தள்ள

நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள

இது முதல் அனுபவமே..

துடித்துடித்திடும் மனமே..
வர வர வரக் கரைத்தாண்டிடுமே..

No comments:

Post a Comment