Wednesday, 2 July 2014

என்ன என்ன வார்த்தைகளோ - வெண்ணிற ஆடை (1965)



என்ன என்ன வார்த்தைகளோ
படம் : வெண்ணிற ஆடை (1965)
பாடியவர் : பி.சுசீலா
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல் : கவியரசு கண்ணதாசன்

என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
ஆஹா.ஹா.ஆஹா..ஹா.
ஆஹா.ஹா.ஆஹா..ஹா.
ஓஹோ..ஹோ..ஓஹோ..ஹோ..

உன்னைத்தான் கண்டு சிரித்தேன்
நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன்
உன்னைத்தான் கண்டு சிரித்தேன்
நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன்
என்னைத்தான் எண்ணி துடித்தேன்
எண்ணம் ஏனோ ஏனோ வளர்த்தேன்
பெண்மைப் பூவாகுமா இல்லை நாளாகுமா
இது தேனோடு பாலாகுமா
என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
ஆஹா.ஹா.ஆஹா..ஹா.
ஆஹா.ஹா.ஆஹா..ஹா.
ஓஹோ..ஹோ..ஓஹோ..ஹோ..

நிலவே உன்னை அறிவேன்
அங்கே நேரே ஓர் நாள் வருவேன்
நிலவே உன்னை அறிவேன்
அங்கே நேரே ஓர் நாள் வருவேன்
மலர்ந்தால் அங்கு மலர்வேன்
இல்லைப் பனி போல் நானும் மறைவேன்
இன்னும் நான் என்பதா
உன்னை நீ என்பதா
இல்லை நாம் என்று பேர் சொல்வதா
என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்துவிட்டேன்
சொன்ன கதை புரியவில்லை


No comments:

Post a Comment