உன்னை கண்ட நாள் முதல் என் தூக்கம் போனது
படம் : சலீம் (29.08.2014)
பாடியவர்கள்: சுப்ரியா ஜோஷி - ஹேமச்சந்திரா - ஸ்ரீனிவாசன்
இசை: விஜய் ஆண்டனி
வரிகள்: அண்ணாமலை
நடிப்பு : விஜய் ஆண்டனி - ஆஷா பர்தாசனி
இயக்கம் : என்.வி.நிர்மல்குமார்
தயாரிப்பு : ஆர்.கே.சுரேஷ் - எம்.எஸ்.சரவணன்
பாத்திமா விஜய் ஆண்டனி
உன்னை கண்ட நாள் முதல்
என் தூக்கம் போனது..
தூங்கினாலும் உன் முகம்
என்னென்று சொல்வது..
விழுந்தாய் என் விழியில்..
கலந்தாய் என் உயிரில்..
நொடியில்..
உன்னை கண்ட நாள் முதல்
என் தூக்கம் போனது..
தூங்கினாலும் உன் முகம்
என்னென்று சொல்வது..
எனது தோளில் தலையைச் சாய்த்து
நெருங்கி நீ வாழ வேண்டும்..
பிரிந்து நீயும் நடக்கும் போது
என் இதயம் காயம் படும்..
விழிகள் பார்த்து விரல்கள் கோர்த்து
மடியில் நான் தூங்க வேண்டும்..
உனது அன்பில் கரையும்போது
உதட்டில் பூப் பூத்திடும்..
உலகமே..மறக்கிறேன்..
சிறகில்லை..பறக்கிறேன்..
மழை இல்லை ..நனைகிறேன்..
உன்னில் கரைகிறேன்..
உன்னை கண்ட நாள் முதல்
என் தூக்கம் போனது..
தூங்கினாலும் உன் முகம்
என்னென்று சொல்வது..
சிரித்து பேசும் உனது வார்த்தை
தினமும் நான் கேட்கவேண்டும்..
உறவு என்று எவருமில்லை
என் உலகம் நீ ஆகிடும்..
இதயம் தன்னில் அறைகள் நான்கில்
எனக்கு நீ மட்டும் வேண்டும்..
தரையின் மேலே நிழலைப் போலே
இணைந்து நாம் வாழனும்..
உதடுகள் சிரிக்கிறேன்..
உலகினை ரசிக்கிறேன்..
உனக்கென்ன இருக்கிறேன்..
நெஞ்சில் சுமக்கிறேன்..
உன்னை கண்ட நாள் முதல்
என் தூக்கம் போனது..
தூங்கினாலும் உன் முகம்
என்னென்று சொல்வது..