மன்னிக்க வேண்டுகிறேன் ஆசையைத் தூண்டுகிறேன்
படம் : இருமலர்கள் (01.11.1967)பாடியவர்கள் : டி .எம்.சௌந்தரராஜன் - பி.சுசீலா
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : வாலிபக்கவிஞர் வாலி
நடிப்பு : நடிகர்திலகம் - பத்மினி
இயக்கம் : ஏ.சி.திருலோகசந்தர்
தயாரிப்பு : மணிஜே சினி புரடக்க்ஷன்ஸ்
எங்கள் குடும்பம் அப்பாவின் பணி நிமித்தமாக, ஒவ்வொரு ஆண்டும் கொடைக்கானலில் இரண்டுமாதம் தங்கும் தருணம், இப்பாடல் 1967 மே மாதத்தில் கொடைக்கானலில் படமாக்கப்பட்ட போது, நேரில் நாங்கள் படப்பிடிப்பை கண்டு கேட்டு மகிழ்ந்த பாடல் இன்று மலர்கிறது
விண்ணில் ஏவப்பட்டுள்ள மங்கள்யான் செவ்வாய் கிரகத்தின் ஆய்வின்போது, இப்பாடலில் கவிஞரின் வரிகளான "முக்கனிக்கும் சக்கரைக்கும் சுவையை செவ்வாய் தான் தருமோ ?" என்பது குறித்தும் ஆய்வு செய்திடுமோ?
முடியாது ஏனெனில் கவிஞர் வர்ணித்து நாயகியின் செவ்வாயன்றோ?
ஆஹாஹா...அக்ஹா..ஹா..
ஆஹாஹா...அக்ஹா..ஹா..
ஆஹாஹா...அக்ஹா..ஹா..
மன்னிக்க வேண்டுகிறேன்..
உந்தன் ஆசையை தூண்டுகிறேன்..
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்..
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்..
மன்னிக்க வேண்டுகிறேன்..
உந்தன் ஆசையை தூண்டுகிறேன்..
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்..
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்..
தித்திக்கும் இதழ் உனக்கு..
என்றென்றும் அது எனக்கு..
தித்திக்கும் இதழ் உனக்கு..
என்றென்றும் அது எனக்கு..
நாம் பிரிவென்னும் ஒரு சொல்லை
மறந்தால் என்ன ?
கண்ணோடு உண்டானது..
நெஞ்சோடு ஒன்றானது..
உன் மேனி என் தோளில்..
நின்றாடும் இந்நாளில்..
மன்னிக்க வேண்டுகிறேன்..
உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்.
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்..
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்..
மன்னிக்க வேண்டுகிறேன்..
எண்ணம் என்ற ஏடெடுத்து எழுதும்
பாடலிலேத் தலைவி..
இல்லறத்தில் நல்லறத்தைத் தேடும்
வாழ்க்கையிலேத் துணைவி..
அன்பு என்ற காவியத்தின்
நல்ல ஆரம்பமே வருக
முன்னுரைத்தக் காதலையே உந்தன்
முடிவுரையாய் தருக
முதுமை வந்த பொழுதும்
இளமை கொள்ளும் இதயம்
நான் வழங்க நீ வழங்க
இன்பம் நாளுக்கு நாள் வளரும்
மன்னிக்க வேண்டுகிறேன்
உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்...
மன்னிக்க வேண்டுகிறேன்..
முக்கனிக்கும் சக்கரைக்கும் சுவையை
செவ்வாய் தான் தருமோ ?
மெய் மறக்க கண் மயக்கும் அழகில்
தெய்வம் கூட வருமோ ?
நீ கொடுத்த நிழலிருக்கப் பெண்மை
ஊஞ்சலாட வருமோ ?
ஒருவனுக்கு தருவதற்கு என்றே
என்றும் இந்த மனமோ ?
மலர்கள் ஒன்று சேரும்
மாலையாக மாறும்
நெஞ்சினிக்க நினைவினிக்க
கண்கள் நூறு கதை கூறும்
மன்னிக்க வேண்டுகிறேன்..
உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்..
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்..
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்...
மன்னிக்க வேண்டுகிறேன்..
No comments:
Post a Comment