அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு (மகிழ்ச்சி)
படம் : ராமன் எத்தனை ராமனடி (1970)
பாடியவர் : டி .எம்.சௌந்தரராஜன்
இசை : மெல்லிசை மன்னர் எம் .எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
நடிப்பு : நடிகர் திலகம் - கே.ஆர்.விஜயா
அம்மாடி... ஈ... ஈ...
பொண்ணுக்கு தங்க மனசு
பொங்குது சின்ன மனசு
கண்ணுக்கு நூறு வயசு
அவ சொல்லுக்கு நாலு வயசு
சொல்லுக்கு நாலு வயசு
அம்மாடி... ஈ... ஈ...
பொண்ணுக்கு தங்க மனசு
பொங்குது சின்ன மனசு
கண்ணுக்கு நூறு வயசு
அவ சொல்லுக்கு நாலு வயசு
சொல்லுக்கு நாலு வயசு
ஓஹோ ஹோ... ஓ... ஓ... ஓ...
எண்ணெயில் எரியும் விளக்கு
அவள் என்னையே அழைக்கும் சிரிப்பு
புர் தகும் தகிட புர் தகும் தகிட
புர் தகும் தகிட புர்தத்தா
எண்ணெயில் எரியும் விளக்கு
அவள் என்னையே அழைக்கும் சிரிப்பு
என்னவோ நடக்குது நடப்பு
இதில் ஏதோ சுகமும் இருக்கு
யாருக்கு இந்த கதை தெரியும்?
சாமிக்கு மட்டும் இது புரியும்
பாலுக்குள் மோரும் கூட இருக்கும்
நாலுக்கும் காலம் வந்தால் நடக்கும்
அம்மாடி... ஈ... ஈ...
பொண்ணுக்கு தங்க மனசு
பொங்குது சின்ன மனசு
கண்ணுக்கு நூறு வயசு
அவ சொல்லுக்கு நாலு வயசு
சொல்லுக்கு நாலு வயசு
அடித்தால் அழுவேன் ஒரு நாள்
யாரும் அணைத்தால் சிரிப்பேன் மறு நாள்
புர் தகும் தகிட புர் தகும் தகிட
புர் தகும் தகிட புர்தத்தா
அடித்தால் அழுவேன் ஒரு நாள்
யாரும் அணைத்தால் சிரிப்பேன் மறு நாள்
எடுப்பார் கைகளில் பிள்ளை
ஒரு பகையோ உறவோ இல்லை
தோப்புக்கு தென்ன மரம் சொந்தம்
காத்துக்கு எந்த மரம் சொந்தம்?
பூமிக்கு காட்டு வெள்ளம் சொந்தம்
பொண்ணுக்கு இந்த உள்ளம் சொந்தம்
அம்மாடி... ஈ... ஈ...
பொண்ணுக்கு தங்க மனசு
பொங்குது சின்ன மனசு
கண்ணுக்கு நூறு வயசு
அவ சொல்லுக்கு நாலு வயசு
சொல்லுக்கு நாலு வயசு
No comments:
Post a Comment