Wednesday, 24 September 2014

பொண்ணாப் பொறந்தா ஆம்பளைக்கிட்டே.. - உரிமைக்குரல் (07.11.1974)



பொண்ணாப் பொறந்தா ஆம்பளைக்கிட்டே..
படம் : உரிமைக்குரல் (07.11.1974)
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன் 
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் 
இயற்றியவர் : வாலிபக்கவிஞர் வாலி 
நடிப்பு : மக்கள் திலகம் - லதா 
இயக்கம் : ஸ்ரீதர்
தயாரிப்பு : சித்ரலாயாவின் சித்ரயுகா ஒய்.கன்னையா

பொண்ணாப் பொறந்தா ஆம்பளைக்கிட்ட
கழுத்த நீட்டிக்கணும் ,
அவன் ஒன்னு , ரெண்டு , மூணு
முடிச்சுப் போட்டா மாட்டிக்கணும்
பொண்ணாப் பொறந்தா ஆம்பளைக்கிட்ட
கழுத்த நீட்டிக்கணும் ,
அவன் ஒன்னு , ரெண்டு , மூணு
முடிச்சுப் போட்டா மாட்டிக்கணும்
மாங்கா திருடி தின்கிறப் பொண்ணே
மாசம் எத்தனையோ?
மாங்கா திருடி தின்கிறப் பொண்ணே
மாசம் எத்தனையோ?
கொஞ்சம் மண்ணும் தாரேன் தின்னடியம்மா
மசக்கை தீரலையோ?.
பொண்ணாப் பொறந்தா ஆம்பளைக்கிட்ட
கழுத்த நீட்டிக்கணும் ,
அவன் ஒன்னு , ரெண்டு , மூணு
முடிச்சு போட்டா மாட்டிக்கணும்

காயா? இது பழமா?
கொஞ்சம் தொட்டுப் பார்க்கட்டுமா?
படு சுட்டி இளம் குட்டி
தண்ணித் தொட்டியில் அழுத்தட்டுமா?
காயா? இது பழமா?
கொஞ்சம் தொட்டுப் பார்க்கட்டுமா?
படு சுட்டி இளம் குட்டி
தண்ணித் தொட்டியில் அழுத்தட்டுமா?
பறிச்சாலும் , துணிப் போட்டு
மறைத்தாலும் பெண்ணே..
பளிச்சென்று தெரியாதோ?
இளம் மாங்காய் முன்னே..
அடி ராஜாத்தி நடக்குமா ஏமாத்தி ,
முழிக்கிற உன் புத்தி பெண்புத்தி பின்புத்தி..
பொண்ணாப் பொறந்தா ஆம்பளைக்கிட்ட
கழுத்த நீட்டிக்கணும் ,
அவன் ஒன்னு , ரெண்டு , மூணு
முடிச்சுப் போட்டா மாட்டிக்கணும்

குதிரை துள்ளிக் குதிச்சா
இந்த சாட்டையில் அடக்குறவேன்..
இளம் குமரி என்னை கவனி
உன்னை பார்வையில் மடக்குறவன்
காத்தாட்டம் ரேக்ளாவில்
பறந்தோடும் வீரன்..
என்னப் பார்த்தாலும் தெரியாது
படு வேலைக்காரன்
சிறு மான்க்குட்டி , இனிக்குற தேன் கட்டி ,
துடிக்கிற மீனாட்டம் கண் காட்டும் கண்ணாட்டி..
பொண்ணாப் பொறந்தா ஆம்பளைக்கிட்ட
கழுத்த நீட்டிக்கணும் ,
அவன் ஒன்னு , ரெண்டு , மூணு
முடிச்சுப் போட்டா மாட்டிக்கணும்

பருவம் இள உருவம்
முழு வடிவம் காட்டுதடி..
என்னப் பார்த்தா அடி ஆத்தா ,
என்னைப் பாடா படுத்துதடி..
பாலாடை மேலாடை
எல்லாமே தண்ணி ..
பூப் பூவாய் சொட்டத்தான்
நின்றாலே கன்னி..
என் கண் பட்டு மயங்குதே பூஞ்சிட்டு ,
மணக்குது ஈரெட்டு வயசான இளமொட்டு..
பொண்ணாப் பொறந்தா ஆம்பளைக்கிட்ட
கழுத்த நீட்டிக்கணும் ,
அவன் ஒன்னு , ரெண்டு , மூணு
முடிச்சுப் போட்டா மாட்டிக்கணும்

No comments:

Post a Comment