நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா தா
படம் : காதலிக்க நேரமில்லை (1964)
குரல் : கே.ஜே.ஜேசுதாஸ் - பி.சுசீலா - பி.பி. ஸ்ரீனிவாஸ் -
எல்.ஆர். ஈஸ்வரி
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி
எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன்
நடிகர்கள் : முத்துராமன், காஞ்சனா, இரவிச்சந்திரன் & இராஜஸ்ரீ
ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ...
நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே
சிரிக்கும் சிலையே வா
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே
சிரிக்கும் சிலையே வா
என்றென்றும் சொந்தமில்லையோ?
என் நெஞ்சம் உன்னதில்லையோ?
ஒன்றென்று வந்ததல்லவோ?
இன்னொன்று எங்கு வருமோ?
உடலில் நீயும் உயிரில் நானும்
படரும் கொடியல்லவோ
ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஆஆஆ
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே
சிரிக்கும் சிலையே வா
ஆஹா..ஹா..ஓ.ஓ...ஆஹாஹா..ஓ..
லாலலால்லா..லாலலால்லா.
வா என்றும் சொல்லும் மனமே
சம்மதம் அங்கு வருமே
தா என்று கேட்கும் மனமே
தேனிகள் கொஞ்ச வருமே
மணக்கும் பூவில் செழிக்கும் தேனை
சுவைக்கத் தடையுமுண்டோ ...
ஓ..ஓ..ஓ....
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே
சிரிக்கும் சிலையே வா
ஆஆ..ஹா..ஹா..ஓ
ஆஹா..ஹா..ஓ.ஓ...ஆஹாஹா..ஓ..
லாலலால்லா..லாலலால்லா.
No comments:
Post a Comment