Saturday, 20 September 2014

காது கொடுத்து கேட்டேன் குவா குவா சத்தம் - காவல்காரன் (1967)



காது கொடுத்து கேட்டேன் குவா குவா சத்தம்  
படம் : காவல்காரன் (1967)
பாடியவர்கள் : டி .எம்.சௌந்தரராஜன்  
இசை : மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்  
வரிகள் : வாலிபக் கவிஞர் வாலி 
 நடிப்பு : மக்கள் திலகம் -  ஜெ.ஜெயலலிதா 
இயக்கம் : ப.நீலகண்டன்  
தயாரிப்பு : சத்யா மூவீஸ்

குவா குவா..குவா குவா..குவா குவா
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்

குவா குவா..குவா குவா..
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான்
இச் இச் இச் இச்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான் முத்தம்
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்

கட்டில் போட்ட இடத்தினிலே 
தொட்டில் போட்டு வைப்பாளோ?
கட்டில் போட்ட இடத்தினிலே 
தொட்டில் போட்டு வைப்பாளோ?
கடமையிலே காதல் நெஞ்சை 
கட்டி போட்டு வைப்பாளோ?
கடமையிலே காதல் நெஞ்சை 
கட்டி போட்டு வைப்பாளோ?
இருவருக்கும் இடையினிலே 
பிள்ளை வந்து படுப்பானோ?
உன்னை ரகசியமாய் தொடும்போது 
குரல் கொடுத்து விழிப்பானோ?
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான் முத்தம்.. 

ஓராம் மாசம் உடல் அது தளரும்
ஈராம் மாசம் இடையது மெலியும்
மூணாம் மாசம் முகம் அது வெளுக்கும்
நாலாம் மாசம் நடந்தா இறைக்கும்
மாங்காய் இனிக்கும் சாம்பல் ருசிக்கும்
மசக்கையினாலே அடிக்கடி மயக்கம்
சுமந்தவள் தவிக்கும் மாசங்கள் பத்து
சிப்பியின் வயிற்றில் இருப்பது முத்து
ஆரீ ரா ரோ ...ஆரீ ரா ரோ .. ...

துள்ளாய்..யி..துள்ளாய்..யி..

காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான் முத்தம்.. 

குழந்தை பாரம் உனக்கல்லவோ?
குடும்ப பாரம் எனக்கல்லவோ? 
கொடியிடையின் பாரமெல்லாம் 
த்து மாதக் கணக்கல்லவோ
மனைவியுடன், குழந்தையையும் 
ஒருவனாக சுமக்கிறேன்..
சுமப்பதுதான் சுகமென்று
மனதுகுள்ளே இரசிக்கின்றேன்    

காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான் முத்தம்..

No comments:

Post a Comment