Thursday, 18 September 2014

மாநிலமேல் சில மானிடரால் என்ன மாறுதல் பாரைய்யா.. - நாஸ்திகன் (1955)



மாநிலமேல் சில மானிடரால் என்ன மாறுதல் பாரைய்யா..
படம் : நாஸ்திகன் (1955)
பாடியவர் : திருச்சி லோகநாதன் 
இசை ; சி.இராமச்சந்திரா 
இயற்றியவர் : கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம்
நடிப்பு : அனில் கபூர் 
இந்தியில் 1954 இல் வந்த "நாஸ்திக்" என்ற படம் தமிழில் 

மொழி மாற்றம் செய்யப்பட்டு  1955 இல் "நாஸ்திகன்" என்ற பெயரில் வந்த படத்தில் அய்யா கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியம் அவர்களின் அற்புதமான வரிகளில் , உருவான இப்பாடல் 60 ஆண்டுகள் கழித்தும் நெஞ்சில் பல சிந்தனைகளை அசைப் போட வைக்கும் மகிமையைக் காணீர்..
இது போன்ற கவிப்  பிரமாக்கள் தங்களை சுய தம்பட்டம் அடித்து கொண்டதில்லை..கழகத்தின் கவிஞராகவும், தலைவர் கலைஞர் அவர்களின் நண்பராகவும் திகழ்ந்த அக்கவிஞரின்  நினைவுப் போற்றி இப்பாடல் பதிவிடுகிறேன் .. 

மாநிலமேல் சில மானிடரால் 
என்ன மாறுதல் பாரைய்யா.
மனிதன் மாறியதேன் அய்யா? 
மனிதன் மாறியதேன் அய்யா?
வானத்து நிலவில் ஆதவன் திசையில், மாறுதல் ஏதைய்யா?
வானத்து நிலவில் ஆதவன் திசையில், மாறுதல் ஏதைய்யா?
மனிதன் மாறியதேன் அய்யா
மனிதன் மாறியதேன்  அய்யா?

மண்ணில் பலவிதப் பிரிவினையாலே... 
மனிதன் மிருகமாய் மாறுவதாலே...
என்னே கொடுமை? எங்கும் இந்நாளே... 
ஈனர்கள் தாண்டவன் பேய்களைப் போலே.
அன்பையும் பண்பையும் தன்னலத்தால் பலியாகிடும் பேதையாய்..
மனிதன் மாறியதேன் அய்யா? 
மனிதன் மாறியதேன் அய்யா?
மாநிலமேல் சில மானிடரால்.. 
என்ன மாறுதல் பாரைய்யா.
மனிதன் மாறியதேன் அய்யா? 
மனிதன் மாறியதேன் அய்யா?

ஈஸ்வரன் அல்லா தாசர்கள் இன்றோ.. 
பூசனை செய்வது நாசத்தை அன்றோ...
தேசம் சுடுகாடாவது நன்றோ... 
தெய்வத்தின் பேரால் கொல்வதும் உண்டோ...
நேசம் மறந்து ஆசை மிகுந்து மோசடிப் புரிபவனாய்
மனிதன் மாறியதேன் அய்யா? 
மனிதன் மாறியதேன் அய்யா?
மாநிலமேல் சில மானிடரால் 
என்ன மாறுதல் பாரைய்யா.
மனிதன் மாறியதேன் அய்யா? 
மனிதன் மாறியதேன் அய்யா?

அன்பே ஆண்டவன் என்று நினைந்தால்... 
அனைவரும் ஓர் குலமாகவே வாழ்ந்தால்
கனலாய் வேந்தே வீடுகள் விழுமா?.. 
தாயின் பிரிவால் சேய்கள் அழுமா?...
சாந்தி சாந்தி எனும் காந்தியின் குரலும் ஓய்ந்திட செய்பவனை..
மனிதன் மாறியதேன் அய்யா? 
மனிதன் மாறியதேன் அய்யா?
மாநிலமேல் சில மானிடரால் 
என்ன மாறுதல் பாரைய்யா.
மனிதன் மாறியதேன் அய்யா? 
மனிதன் மாறியதேன் அய்யா?

No comments:

Post a Comment