இராஜ இராஜஸ்ரீ இராணி வந்தாள்
படம் : ஊட்டி வரை உறவு (01.11.1967)
பாடியவர்கள் : பி.பி.ஸ்ரீநிவாஸ் - எல்.ஆர்.ஈஸ்வரி
இசை : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்
நடிப்பு : ஆர்.முத்துராமன் - எல்.விஜயலட்சுமி
இயக்கம் : ஸ்ரீதர்
தயாரிப்பு : கே சி பிலிம்ஸ்
இராஜ இராஜஸ்ரீ இராணி வந்தாள்
இராஜபோகம் தர வந்தாள்
இராஜ இராஜஸ்ரீ இராணி வந்தாள்
இராஜபோகம் தர வந்தாள்
கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டில் இன்னொரு இரகசியம் சொல்ல
கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டில் இன்னொரு இரகசியம் சொல்ல
இராஜ இராஜஸ்ரீ இராஜன் வந்தான்
இராஜபோகம் தர வந்தான்
இராஜ இராஜஸ்ரீ இராஜன் வந்தான்
இராஜபோகம் தர வந்தான்
தேடிச் சென்ற பூங்கொடி காலில் பட்டது
சிந்தும் முத்தத்தால் என்னை பின்னிக் கொண்டது
பின்னிக் கொண்ட பூங்கொடித் தேனை தந்தது
தேனை தந்ததால் இன்ப ஞானம் வந்தது
ஞானம் ஒன்றல்ல..பிறந்த கானம் ஒன்றல்ல..
எழுந்த இராகம் ஒன்றல்ல..விழுந்த தாளம் ஒன்றல்ல..
ஊடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல..
கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டில் இன்னொரு இரகசியம் சொல்ல
இராஜ இராஜஸ்ரீ இராணி வந்தாள்
இராஜபோகம் தர வந்தாள்
மேகம் வந்த வேகத்தில் மோகம் வந்தது
மெல்ல மெல்ல நாணத்தில் தேரும் வந்தது
கன்னிப் பெண்ணின் மேனியில் மின்னல் வந்தது
காதல் என்பதோர் மழை வெள்ளம் வந்தது
பெண்ணும் பெண்ணல்ல இணைந்த கண்ணும் கண்ணல்ல
மலர்ந்த பூவும் பூவல்ல..அமர்ந்த வண்டும் வண்டல்ல
ஊடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல.
இடையொரு வேதனை நடயொரு வேதனை கொள்ள
இதழொரு பாவமும்..முகமொரு பாவமும் சொல்ல..
இராஜ இராஜஸ்ரீ இராஜன் வந்தான்
இராஜபோகம் தர வந்தான்
இராஜ இராஜஸ்ரீ
ஊகும் இராஜன் ஊகும் இராணி
இராஜபோகம் தர வந்தார்
ஊகுகும்.. ஒஓ.ஓ..ஊகுகும்.. ஒஓ.ஓ.
ஊகுகும்.. ஒஓ.ஓ.
No comments:
Post a Comment